Author: சபீர் அஹமத்

சுதந்திர தாகம் இல்லாத அடிமை எண்ணம் கொண்ட ஒருவன் அடிபணிய வேண்டும் என்றே காத்திருப்பான். அதனால்தான் சாதியால் பிளவுபட்டு அடுக்கடுக்காகத் தங்களை அடிமைகளாகப் பாவித்தவர்களை அடிபணிய வைப்பது என்பது ஆங்கிலேயர்களுக்கு அவ்வளவு கடினமான காரியமாக தோன்றியிருக்காது. ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பற்றவைத்த சுதந்திர தீ ஆங்கிலேயர்களைத் திக்குமுக்காட செய்ததை வரலாறுகள் இன்றும் நினைவுகூறுகின்றன. தங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களை அவர்களைப் படுகொலை செய்தபிறகும், அவர்கள் சுதந்திரத்தின் மீது கொண்ட காதலின் மீதான பயத்தினால் அவர்களின் உடல்களைப் பல கூறுகளாகப் பிளந்து எங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று மக்களுக்குத் தெரியாத அளவிற்கு பார்த்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசாங்கம். மேலும் பல்வேறு போராட்டங்களை மதக்கலவரமாக, இனக்கலவரமாக பதிவு செய்தது ஆங்கிலேய அரசு ஆனால் அதையும் தாண்டி மதங்களையும் இனங்களையும் கடந்து ஒற்றுமையாகப் போராடி சுதந்திரத்தை இந்தியா சுவாசித்தது. அப்படி சுதந்திரத்தை சுவாசிக்கப் போராடியவர்களைக் காற்றைக்கூட சுவாசிக்க அனுமதிக்காமல் சித்திரவதை செய்து…

Read More

Dr தரேஸ் அகமது IAS அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் திறமையான அதிகாரி. 2015 ஆம் ஆண்டில் பெண்பிள்ளைகளை பாதுகாத்த சிறந்த ஆட்சியர் எனும் பிரதமரின் விருதைப் பெற்றவர். அதற்காக பெரம்பலூர் மாவட்டமே அன்று வாழ்த்துப் பாடியது. மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது பெண் குழந்தைகளுக்கு என்று பல திட்டங்களை நிறைவேற்றினார். 450 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினார். ஒரு தரப்பினரின் குழந்தை திருமணத்தை தடுத்ததற்காக தமிழகம் முழுவதும் அந்த சமூகத்தினர் அவருக்கு எதிராக போராடினர். இருப்பினும் அவரது பணியை தொடர்ந்து செய்தார். பள்ளிக்கூடங்கள் மீது தனி கவனம் செலுத்தி, மாணவர்களின் கற்றல் திறணை மேம்படுத்த திட்டங்களை தீட்டினார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்ட தாரேஸ் அகமது, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு அந்த…

Read More

நான் பத்தாம் வகுப்பு பயிலும் போது நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் உருவாகியது. காதலர் தினத்தைக் குறித்த எனது கண்களில் விழுந்த முதல் செய்தி அது. கோவை வ.ஊ.சி.யில் ஒரு இணை ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கு பின்புறம் உடலில் உடையின்றி கலவியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அந்த வாகனம் எடுத்து சென்றதைக் கூட அறியாமல் காதலர் தினத்தைக் கொண்டாடித் தீர்த்ததை அங்கு இருந்த மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் பார்த்ததாகவும், காவல் துறையினர் அவர்களை கைது செய்து பின்னர் எச்சரித்து அனுப்பியதாகவும் செய்தி முடிவுற்றது. அய்ய ச்சீ! என்ற அந்த ஒரு நொடி காதலை என் மனதில் வக்கிரம் கொண்டதாக பதிய வைத்தது. காரணம் காதலர் தினம். இந்த விஷயத்தை நான் பொதுமைப்படுத்த முனையமாட்டேன். இதுவே என் முதல் அனுபவம் என வெளிப்படையாகச் சொல்கிறேன். இதற்கு முற்றிலும் மாறான ஒரு அனுபவமும் எனக்கு வாய்த்திருக்கிறது. நான் முதுகலையில் முதலாமாண்டு முடியும் தருணம் அது.…

Read More