குஜராத்தில் படேல் சாதியினர் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி, கடந்த செவ்வாய் கிழமை (25/08/2015) குஜராதின் தலைநகரான அஹமதாபாத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 5 இலட்சம் படேல்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதிலும் வன்முறை வெடித்தது. காவல் துறையினர் உட்பட இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 இடங்களில் ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் என பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. 2002இல் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின்போது மிக நீண்ட காலத்திற்கு பிறகே அரசு இராணுவத்தை வரவழைத்தது. ஆனால், தற்போதைய குஜராத் விவகாரத்தில் அரசு மெத்தனம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படேல் சாதியினரின் இவ்விவகாரம் தற்பொழுது வேறு பல பரிமாணங்களையும் எட்டியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு குறித்த வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை லாவகமாக பயன்படுத்திக் கொண்டு, வகுப்புவாத சக்திகள் இடஒதுக்கீட்டிற்கு எதிரான…
Author: நாகூர் ரிஸ்வான்
நமது நாட்டில் உயர் கல்வியை வணிகமயப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருகின்றன. ‘அதுதான் ஏற்கனவே மாறிவிட்டதே’ என சலிப்படையாதீர்கள். கல்வித் துறை தற்போதைய நிலையைவிட படுமோசமாக மாறவிருக்கிறது. ஒரு கல்லூரியை நாம் எப்படி தரமதிப்பீடு செய்வோம். முதலாவது, என்ன பாடங்கள் அங்கே கற்றுத்தரப்படுகின்றன? பிறகு, கற்றுத்தரப்படும் பாடங்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது? தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாட திட்டம் தரமாக இருக்கிறதா? போன்றவற்றைக் கவனிப்போம். ஒருவேளை, இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ அதைக் களைவதற்கு நிர்வாகத்தை அணுகுவோம். பிரச்னை எல்லைமீறிப் போனால் சட்ட நடவடிக்கை எடுப்போம். காரணம், நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், நமது எதிர்பார்ப்புகளும் தேவைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றுக்கு தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். நமது நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக, ‘பணத்தை செலுத்திவிட்டு கல்வியை வாங்கிக்கொள். குறை நிறையெல்லாம் சொல்லக் கூடாது’ என கல்லூரி நிர்வாகத்தில் சொல்லப்பட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு நமக்கு வாய்ப்பே கிடைக்காமல்…
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே நீதிநெறிமுறை எனும் வழக்கிழந்த சொற்றொடரை நெடுங்காலமாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மை நிலை இதற்கு முற்றிலும் முரணாய் உள்ளது. நமது தேசத்திற்கு விரோதமான கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அதிகாரமிக்க உயர் பதவிகளில் ஆனந்தமாய் அமர்ந்துள்ளனர். சிலர் குறைந்தபட்ச தண்டனைதான் பெற்றுள்ளனர், இன்னும் சிலரது வழக்குகள் முறையாக நடத்தப்படவே இல்லை. அதே வேளையில், எந்தவித குற்றமும் செய்யாத அப்பாவிகளுக்கு அல்லது சிறிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாடு, நீதித் துறையின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. குற்றம் இழைத்தவர்கள் யாராயினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், குற்றத்திற்கு தண்டனை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது மிகவும் கவலையளிக்கக் கூடியதாய் இருக்கிறது. மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன், கடந்த ஜூலை மாதம் 30ஆம்…
உலக மக்கள் தமது ஓய்வு நேரத்தை ஆரோக்கியமான முறையில் கழிப்பதற்கும் உடலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் எண்ணற்ற விளையாட்டுகளை கண்டுபிடித்து வைத்துள்ளனர். இப்புவியின் ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான விளையாட்டுகள் விளையாடப்படுவதை நாம் கண்டிருப்போம். நாடு, இனம், மொழி என்கிற ரீதியில் ஒவ்வொரு சமூக மக்களும் தனக்கென்ற சில பிரத்யேகமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். கிரிக்கட் என்றவுடன் இங்கிலாந்து நாடு நம் நினைவில் உதிக்கும்.அதுபோலவே, பேஸ்பால் விளையாட்டுக்கு அமெரிக்கா நாட்டவர்களும், காளைச் சண்டைக்கு ஸ்பெயின் நாட்டவர்களும், கால் பந்து விளையாட்டுக்கு பிரேசில் நாட்டவர்களும் பெயர் பதித்தவர்கள். ஒவ்வொரு பகுதிக்கென்றும் பிரத்யேகமான விளையாட்டுகள் இருப்பதை போல தமிழ் மக்களுக்கென்றும் சில விளையாட்டுகள் உண்டு. அவைகளெல்லாம் தற்காலத்தில் விளையாடப்படுவதே மிகவும் அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். நமது தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகள் விளையாடுபவை என்று எடுத்துக்கொண்டால் பல்லாங்குழி, தாயக்கட்டம், நொண்டி, பம்பரம், கோலி, கண்ணாமூச்சி போன்ற பல விளையாட்டுகள் இருக்கும்.…