Author: நாகூர் ரிஸ்வான்

அப்பாவி மாணவர்களை நக்சலைட் தீவிரவாதிகள், காசு வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்றெல்லாம் முத்திரை குத்துபவர்கள், இந்தப் பதிவு போட்டதற்காக என்னையும் பயங்கரவாதி என்று சொல்லி, என் வாழ்வைக் கேள்விக்குறியாக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுவரும் மாணவர் போராட்டம் பற்றி சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி ஜர்னலிசம் மாணவர்களின் போராட்டம் போய்க்கொண்டுள்ளது. துறைத் தலைவர் (HOD) கோ.ரவீந்திரன் அவர்களின் பாடங்களுக்கான விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவேண்டும், விசாரணை கமிட்டி ஒன்று அமைத்து இதழியல் துறையிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய வேண்டும் என்பனவே மாணவர்களின் கோரிக்கைகள். இந்த இரண்டு கோரிக்கைகளில் விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சம்மதித்துள்ளது. விசாரணை கமிட்டி அமைப்பதற்கு இன்னும் முன்வரவில்லை. இதழியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மூவர் மட்டுமே போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இங்கு குறிப்பிடவேண்டியது, போராடும் மாணவர்களில் ஒருவர் துறைத் தலைவர் ரவீந்திரன் சாரின் பாடங்களில் 47 மற்றும் 48…

Read More

ஹாதியா வழக்கு தொடர்பான தலையங்கத்தை முன்வைத்து ஒரு விசாரணை சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம். ஹாதியா வழக்கு தொடர்பான தலையங்கம் அது. “லவ் ஜிகாத்தும் கர் வாபஸியும்” என்கிற தலைப்பில் அது எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வாக்கியத்தை இங்கே சுட்டிக்காட்ட நினைக்கிறேன். “‘லவ் ஜிஹாத்’ ஒரு குற்றமாகச் சொல்லப்பட்டால், அதற்குச் சற்றும் குறையாதது ‘கர் வாபஸி.’” இங்கே லவ் ஜிஹாத் எப்படி மோசமானதோ அதேபோல்தான் கர் வாபஸியும் என்று குறிப்பிடப்படுகிறது. இது…

Read More

சில தினங்களுக்கு முன் ஆவணப்படத் திரையிடல் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன். இரு ஆவணப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன. அதில் ஒன்று “She Write” (2005) என்பது. தமிழகத்தில் இயங்கிவரும் நான்கு கவிதாயினிகள் பற்றியது அது. சுகிர்தராணி, மாலதி மைத்ரி, சல்மா, குட்டி ரேவதி ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பில் ஒரு கவிஞராக இயங்குவதற்கு எப்படியான சவால்களையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் தங்களின் சொந்த அனுபவங்களின் வழியே விளக்கினர். சொந்தச் சமூகமே தங்களுக்கு ஏற்படுத்திவரும் நெருக்கடிகளை அவர்கள் எடுத்துரைத்தனர். ஒரு சாமானிய பார்வையாளனாக அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அது எடுக்கப்பட்டிருப்பதன் நேர்த்தி மிகவும் பிடித்திருந்தது. கேமரா, இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் நேர்த்தியாக இருந்தன. ஆவணப்படம் திரையிட்டு முடிந்தபின் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது பொதுவெளியில் சொல்லவேண்டும் என்று நெடுநாள்களாக என் மனத்தில் வைத்திருந்த சிலவற்றை இயக்குநர்களிடம் கேள்விகளாகக் கேட்டேன். அவர்கள் எனது கருத்துகளை ஆமோதித்துதான் பதில் தந்தார்கள்.…

Read More

பர்தா தொடர்பாக முகநூலில் யாரோ ஒருவர் பர்தா பற்றி போட்ட சின்னப் பதிவு தற்போது பெரும் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பிவிட்டிருக்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட தலைப்புக்கு வந்தாலே கற்பு, ஒழுக்கம், உடை என பெண்ணுடலை மையப்படுத்தியே விவாதங்கள் எழுகின்றன. அதிலும் முஸ்லிம் பெண் என்றவுடன் இந்த புர்கா தான் பேசுபொருள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. பெண் கல்வி, பெண்களுக்கு நிதிச் சுதந்திரம், அரசியல் அங்கத்துவம் எனப் பேசத் தொடங்கினால் எல்லாச் சமூகத்து பெண்களின் நிலைமையும் கவலைக்கிடமாகவே இருக்கும். இப்படி பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிவரும் சமூகத்து ஆண்கள்கூட முஸ்லிம் பெண்களின் பர்தாவுக்கு எதிராகப் பேசுவது நகைப்புக்குரியது. பொதுவாக, நாம் ஆடை அணிவதற்கு பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளோம். நம்மை அழகுபடுத்திக் கொள்ள, ஆளுமையைக் கண்ணியமாக வெளிப்படுத்த, உடலை மறைக்க உள்ளிட்ட குறிக்கோள்களை மனதில் கொண்டே அணிகிறோம். ஒவ்வொரு பண்பாட்டு மதிப்பீட்டுக்குத் தகுந்தாற்போல் ஆடை ஒழுங்கின் வரையறை மாறுகின்றது. ஒவ்வொரு சமூகமும் தனக்கான ஒரு வரையறையைக் கொண்டிருக்கிறது.…

Read More

எல்லா வகையான கல்வி முறைக்கும் ஒரு கருத்தியல் சார்பு உண்டு. அது மாணவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும். வாழ்க்கைக்கான அர்த்தம் என்னவென அதுவே உணர்த்தும். மாணவன் சமூகத்தை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பதையும் அது தீர்மானிக்கும். சொல்லப்போனால், அவனின் ஒட்டுமொத்த சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையையும் அதுதான் வடிவமைக்கிறது. ஆகவே, கல்வி முறை குறித்த கரிசனம் நமக்கு அதிகமதிகம் தேவைப்படுகிறது. சமீபத்தில் படித்துக்கொண்டிருந்த “கருத்தாயுதம்” எனும் கட்டுரை தொகுப்பில், அதன் ஆசிரியர் கே. பாலகோபால் (1952-2009) அவர்கள் கல்வி தொடர்பாக இந்துத்துவவாதிகளின் செயல்திட்டம் பற்றி விரிவாக விளக்கியிருந்தார். அவர் ஒரு கணிதவியல் அறிஞராகவும், மனித உரிமை போராளியாகவும் இருந்தவர். இந்துத்துவத்திற்கு எதிரான ஆழமான விமர்சனங்களை முன்வைத்தவர். மேற்சொன்ன அவரது நூலில், கல்வி திட்டத்தை இந்துத்துவவாதிகள் தன்வயப்படுத்துவது பற்றிய பல கூர்மையான அவதானங்களை முன்வைக்கிறார். அவற்றைத் தழுவி சில விஷங்களை இங்கே தருகிறேன். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஏதாவது…

Read More

கோவையில் திவிக தோழர் ஃபாரூக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டித்து பிரதான இஸ்லாமியக் கட்சிகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையிலும் முஸ்லிம்கள் அந்தச் செயலைக் கண்டித்து சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பேசிவருகின்றனர். மனிதநேயமுள்ள அனைவரும் கரம்கோர்த்து இதுபோன்ற கொடூரச் செயல்களை எதிர்க்கவேண்டியது அவசியம். இந்த சந்தர்பத்தில் நாம் கவனம் கொள்ளத்தக்க விஷயங்கள் சில இருக்கின்றன. பொதுவாக, முஸ்லிம் அடிப்படைவாதத்தின் பெயரால் வன்செயல்கள் நடந்தால், அந்தச் செயலை நிகழ்த்தியவர்களோடு அது முடிந்துவிடுவதில்லை. ஆம், அந்தக் குற்றத்தை குற்றவாளி மட்டும் சுமப்பதில்லை. மாறாக, அந்தக் குற்றத்திற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பதில் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. இப்போதும் அதுதான் நடந்துகொண்டுள்ளது. இதுபோன்ற தருணங்களில் ஒரு வகையான பதட்டம் அந்தச் சமூகத்தை ஆட்கொண்டு விடும். உண்மையில், இது மற்ற சமூகங்கள் எதிர்கொள்ளாத ஒரு சிக்கல். இதைப் பார்கையில், முஸ்லிம் அடையாளத்தோடு வாழ்வதே இங்கு ஒரு சவாலாக மாறுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஃபாரூக் படுகொலை குறித்து…

Read More

மதங்களை வகைப்படுத்திப் பார்க்கும்போது, ஆப்ரஹாமிய மதம் என குறிப்பிடப்படும் யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாத்தை செமித்திய மதம் எனவும், இறைத்தூதர்கள் இல்லாத இந்துமதம் போன்ற மதங்களை செமித்திய அல்லாத (non-semitic) மதம் எனவும் குறிப்பிடுகிறோம். வரலாற்றெழுத்தியலில் ஈடுபடத் தொடங்கிய காலம் தொட்டு, இந்த மதங்களின் வரலாற்றைஅறிந்துகொள்வதில் மனிதர்களுக்கு ஆர்வமும் கரிசனமும் இருந்துவந்துள்ளன. விளைவாக, அவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெரிந்துகொள்ள ஏராளமான முயற்சிகளும் ஆய்வுகளும் நடந்துவந்திருக்கின்றன. அந்த வகையில், நாம் வாழும் நாட்டில் பெரும்பான்மை மதமாய் அறியப்படும் இந்து மதம் பற்றி அமெரிக்க அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய நூல், “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு”. இது சுமார் 900 பக்கங்களைக் கொண்டது. வெண்டி டோனிகர் சமய வரலாற்று அறிஞர். சமஸ்கிரதத்திலும் இந்திய ஆய்விலும் முனைவர் பட்டம் பெற்றவர். The Origins of Evil in Hindu Mythology, Splitting the difference : Gender and Myth in Ancient Greece…

Read More

ஒரு காலத்தில் ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்தது. ஐரோப்பியர்கள் நாகரித்தின் நிழலைக்கூட எட்டாமல் இருந்தனர். தற்போது சர்வ வல்லமையும் பெற்றிருக்கும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வளர்ச்சி பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஈராக்கும் சிரியாவும் நாகரிகமடைந்துவிட்டன. ஈராக்கின் தலைநகரான பாக்தாதும், சிரியாவின் தலைநகரான டமாஸ்கசும் பல்லாண்டுகாலம் உலகிற்கே ஒளி விளக்காய் திகழ்ந்த நகரங்களாகும். இவை பின்னாளில் வீழ்ச்சியுற்றன. தற்காலத்தில் இவற்றின் நிலைமை பரிதாபகரமானது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தங்களின் விளைவாக, மனிதன் வாழ்வதற்கே தகுதியற்ற நிலமாக இவை மாறியுள்ளன. மக்கள் நிம்மதி இழந்து தமது வாழ்விடங்களை விட்டே விரண்டோடிக் கொண்டிருக்கின்றனர். இவ்விரு தேசங்களின் வீதியெங்கும் குண்டு மழை பொழிகின்றது. நாலா புறமும் மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அகதிகளின் எண்ணிக்கை சரசரவென உயர்ந்துகொண்டுள்ளது. மத, இன பாரபட்சமின்றி எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகின் கவனம் ஈராக், சிரியாவின் பக்கம் திரும்பியுள்ளது. இன்றைய சூழலை புரிந்துகொள்வதற்கு முன்பு, நாம்…

Read More

பிரேசில் தலைநகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான தகுதித் தேர்வு போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தேர்வாகியுள்ளார். அதே போல், ஹாங்காங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆசிய தகுதிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சரத் கமல் மற்றும் மகளிர் பிரிவில் மவுமாதாஸ் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். மேற்குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்வதற்கு இந்தியாவைச் சார்ந்த வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ள விஷயத்தை நம்மில் எத்துனை பேர் தெரிந்து வைத்திருப்போம்? இது குறித்து தமிழகச் சூழலில் பரபரப்பாக பேசப்படவே இல்லையே ஏன்..? இந்தப் போட்டிகள் யாவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தவைதான். அதே மாதத்தில் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி மக்களிடம் எந்த அளவுக்குப் பேசப்படுகிறது என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் தோற்றுவிக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அது ஊடுருவியது. இந்தியாவிலும் அப்படித்தான் நுழைந்தது. ஆரம்பத்தில்…

Read More

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் நமது இந்திய தேசமானது வகுப்புவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அதிகார மமதையில் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக செய்துவருகிறது. இவற்றைக் கண்டித்து எதிர்வினையாற்றும் ஜனநாயக சக்திகளை முற்றாக ஒழித்துக்கட்டவும் அது தீவிரம் காட்டுகிறது. பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் எனும் இந்துத்துவ அடிப்படைவாத இயக்கத்தின் மறைமுகமான செயல்திட்டங்களை முன்னெடுக்கும் கருவியாகவே தற்போதைய மத்திய அரசு செயல்படுகிறது. ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும் தெனாவட்டில் ஆர்.எஸ்.எஸ்.-இன் கிளை அமைப்புகளெல்லாம் ஆட்டம் போடுகின்றன. RSSன் வழிகாட்டுதலில் மத்திய அரசு செயல்படும் சூழலில், மாணவர்களால் அதை பற்றி விவாதிக்கக் கூட முடியாத சூழல் நிலவுகிறது. கல்வி வளாகத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மாணவர்களின் கருத்துரிமையைப் பறிக்கின்ற வேலையை பா.ஜ.க அரசு செய்துவருகிறது. கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தங்களுக்குத் தகுந்த அமைவிடமாக மாற்றவேண்டும் என அது கணக்குப் போடுகிறது. இந்த அரசியல் செயல்திட்டங்களுக்கு…

Read More