ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல். இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம். முதல் காரணம்: ஃகஸ்ஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இல்லாமல் ஆக்குவது. ஃகஸ்ஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் வழிகளையும் இஸ்ரேல் முழுமையாக இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு முயற்சிக்கிறார். இஸ்மாயில் ஹனிய்யா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் முன்னணி வகித்தவர். ஃபலஸ்தீனர்கள் சார்பாக அவர் போர் நிறுத்தம் கொண்டுவர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். அமைதியை ஏற்படுத்துவதற்கான சரியான…
Author: நாகூர் ரிஸ்வான்
மதத்தையும் அரசையும் பிரித்தல் என்று செக்யூலரிசத்தை எளிய முறையில் வரையறுக்கலாம். செக்யூலரிசம் பல்வேறு விதமாக மதச்சார்பற்ற நாடுகளில் வெளிப்படும். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது உள்ளடக்கும் (Inclusive) தன்மையில் இருப்பதாகச் சொல்வார்கள். அதுவே பிரான்ஸ் பாணி மதச்சார்பின்மையானது அரசிலிருந்து மதங்களை முற்றிலும் பிரிக்கும் பண்பைக் கொண்டது. அதை ‘லைசிடே’ என்றழைப்பார்கள். துருக்கியின் மதச்சார்பின்மையை ‘லைக்ளிக்’ என்கிறார்கள். அது பிரான்ஸைவிட மதத்தில் நேரடியாகத் தலையிடுகிறது.
இப்படி செக்யூலரிசம் நடைமுறைப்படுத்தப்படுவதில் வித்தியாசங்கள் இருப்பது உண்மையே. அதேசமயம் அவற்றுக்கு மத்தியிலுள்ள பொதுப் பண்பை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. நவீன தேச அரசு எனும் கட்டமைப்புக்குள் இயங்கும்போது அதன் பண்பை அது எல்லா மதச்சார்பற்ற நாடுகளிலும் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், சமயத்தை, சமய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரிப்பது அதன் முதன்மையான பொதுப்பண்பு எனலாம்.
ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்றான FMC கார்ஸ்வெல் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்கிறார். Prisoner 650, Grey Lady, தேசத்தின் மகள் என அவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஆஃபியாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் நேர்ந்த கொடூரத்தை வார்த்தைகளைக் கொண்டு நம்மால் விளக்க முடியாது. Dr.ஆஃபியா என்பவர் யார்?, அவர் எப்படிச் சிறை சென்றார்?, அவரை சிறை வைத்திருப்பது யார்?, அதற்குச் சொல்லப்படும் காரணங்கள்? போன்றவற்றை இங்கு பார்ப்போம். ஆஃபியா சித்தீக் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவர். தனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக 18ஆம் வயதில் அமெரிக்கா சென்றார். MIT கல்வி நிறுவனத்தில் 1995ஆம் ஆண்டு உயிரியல் படிப்பை நிறைவு செய்த ஆஃபியா, பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் 2001ஆம் ஆண்டு நரம்பியல் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அதே வருடம் நடந்த செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அவர்…
https://www.youtube.com/watch?v=Pc1TXRszYiQ ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையொட்டி சகோதரன் யூடியூப் சேனலில் வெளியான பேட்டியின் எழுத்தாக்கம் இது. இதில் கூடுதலாக சில விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.நேர்கண்டவர்: பஷீர் அஹ்மது கே: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களின் முடிவுகள் எதை உணர்த்துகின்றன? ப: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மனிப்பூர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இப்போது வெளியாகியிருக்கும் நிலையில், பஞ்சாப் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றிருக்கிறது. பாஜகவின் வெற்றியை பெரும்பான்மைவாதத்தின் எழுச்சியாகவே பார்க்க முடிகிறது. இந்துத்துவம் தன் செயல்திட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல இந்த வெற்றி உத்வேகமளிக்கும். கே: நேரு குடும்பம் காங்கிரஸிலிருந்து வெளியேறினால்தான் காங்கிரஸ் கட்சி பிழைக்கும் என்கிறார்களே..? ப: ராமசந்திர குஹா போன்றோர் இதைத் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் அவ்வளவு வலுவானதாக இல்லை. தேர்தலில்…
இந்திய வரலாற்றில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அது நடந்தபோது நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமைக்குரிய ஒன்றாகத் தோன்றுகிறது. இதற்கு முன் முஸ்லிம்கள் இந்த அளவுக்குத் திரளாக அணிதிரண்டு பங்குகொண்ட போராட்டம் இந்தியச் சுதந்திரப் போராட்டம்தான். தொடக்கத்தில், அஸ்ஸாமிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க சிஏஏவுக்கு எதிரான அலை வீசியது. பிறகு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதற்கெதிராகக் களமிறங்கினர். அப்போது அவர்கள்மீது காவல்துறை மேற்கொண்ட படுமோசமான வன்முறை வெறியாட்டம் டெல்லியில் ஷாஹீன் பாக் போராட்டம் உருப்பெற வழிகோலியது. அது இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவின் பலதரப்பட்ட மக்களும் சிஏஏவுக்கு எதிராகக் களமாடினர் என்றபோதிலும் கட்சிகள், அமைப்புகளையெல்லாம் தாண்டி முஸ்லிம்கள் ஒரு சமூகமாக அதில் முன்னணியிலிருந்தனர். மதச்சார்பற்ற கட்சிகள் தங்களை மீட்கும் என்றெல்லாம் காத்திருக்காமல் அவர்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்தனர். பிறகு, எதிர்க்கட்சிகளும் இதர ஜனநாயக அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின.…
தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சிறிய சச்சரவு வந்தாலும் இந்துத்துவர்கள் அதைக் கொண்டாடவும் ஊதிப் பெருக்கவும் தவறுவதில்லை. கெடுநோக்கு கொண்ட இவர்களுக்கு தற்போது பெரும் தீனியாக அமைந்திருப்பது இம்மாதம் 11ம் தேதி கிழக்கு பெங்களூருவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம். கர்நாடகாவில் கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பாஜக அரசு 2000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக சமீபத்தில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டினார். அது சம்பந்தமான ஆவணங்களும் விவரங்களும் தன்னிடம் இருப்பதாகக் கூறி, நீதி விசாரணை கேட்டார். அந்த விவகாரமெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்போது பெங்களூரு வன்முறைதான் அம்மாநிலத்தில் ஒரே பேசுபொருள் என்றாகிவிட்டது. பெங்களூருவில் தலித் தொகுதியான புலிகேசி நகரின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அகந்த சீனிவாச மூர்த்தியின் உறவினர் பி. நவீன் குமார் தன் சமூக ஊடகப் பக்கத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கார்டூன் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த வன்முறை அரங்கேறியுள்ளது. தொடக்கத்தில் அவ்வாறு பதிவிட்டது,…
டெல்லியில் அரசின் துணையோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து இன்று சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மற்றும் மால்கம் எக்ஸ் படிப்பு வட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் ஒருங்கிணைத்த இக்கூட்டத்தில், கபில் மிஷ்ராவை கைது செய்ய வேண்டும்; அமித்ஷா பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். கடந்த 12ஆம் தேதி சிஏஏ தொடர்பாக இந்த மாணவர்கள் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியிருந்தது. இப்போது நிர்வாகத்தின் கெடுபிடிகளையும் மீறி மாணவர்கள் இந்த சிறு ஒன்றுகூடலை நடத்தியிருக்கிறார்கள். தகவல்-அஹ்மது ரிஸ்வான்
தமிழகம் முழுக்க நடக்கும் CAA எதிர்ப்புப் போராட்டங்களில் முஸ்லிம்கள் முன்னணியில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை அமைப்புகள், இயக்கங்களுக்கு அப்பால் சாமானிய மக்களே அணிதிரண்டு நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டம் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அநீதிக்குள்ளாகி, வஞ்சிக்கப்பட்டு வந்ததன் எதிரொலி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.இதை வெறும் CAAக்கான எதிர்ப்பாக மட்டும் எப்படி நம்மால் சுருக்கிப் புரிந்துகொள்ள முடியாதோ, அவ்வாறே வெறும் பாஜக எதிர்ப்பாகவும் இதைச் சுருக்கிவிடக் கூடாது. ஏனெனில், ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பாஜக-வுக்கு மாற்றாக காங்கிரஸையோ திமுக-வையோ கொண்டு வருவதற்காகத்தான் இவ்வளவுமா?இத்தனை ஆண்டுகாலமாக இங்குள்ள மையநீரோட்டக் கட்சிகள்தாம் நம்மை விளிம்புநிலைக்குத் தள்ளின; இப்போது பாஜக ஒருபடி மேலே போய் நம்மைத் துடைத்தெறியப் பார்க்கிறது. அவ்வளவுதான்.இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் எழுச்சி நாம் அரசியல்படுவதற்கும், நாம் இழந்த உரிமைகளை சமரசமின்றிப் போராடிப் பெறுவதற்கும் வழிவகுக்கட்டும். -அஹ்மத ரிஸ்வான்
பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக அங்கே படிக்கும் மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படாதது, வளாகத்தின் மதச்சார்பற்றத் தன்மையைக் குலைப்பது, மாணவர்களின் ஜனநாயக வெளியைக் குறுக்குவது முதலான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழகத்தின் மீது மாணவர்கள் முன்வைத்துள்ளனர். அந்தப் பல்கலையின் வளாகத்தில் இயங்கிவரும் ஏழு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து “மாணவர் நடவடிக்கைக் குழு” ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. ASA, SIO, AISF, SFI உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்ட அந்தக் குழு கடந்த ஞாயிறு மாலை ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திங்கள்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகக் கருத்துரைத்த இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) பொதுச் செயலாளர் ஹிபா சமது, “பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு தரச்சான்று வழங்குவதற்கு செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை NAAC உறுப்பினர்கள் வருகைத்தரவுள்ளனர். அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவே…
இன்று சமூக வெளிகளில் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரச்னை சந்தையூர்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் பேசப்பட்ட உத்தபுரம் மாதிரி இது நாடுமுழுக்கக் கொண்டு போகப் படவில்லை. பிரகாஷ் காரத்தும் இங்கு வரவில்லை. எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடுவதில் ஒரு தயக்கம். ஏனெனில் இங்கே தீண்டாமைச் சுவரை எழுப்பியவர்களாகக் குற்றம் சாட்டப் படுகிறவர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களும் தமிழகமெங்கும் தீண்டாமைக்கு உட்படுத்தபடும் ஒரு சாதியினரே. ஆம்,பிரச்னை இங்கே இரண்டு பட்டியல் சாதியினர்களுக்கு இடையில். தீண்டாமைச் சுவரை எழுப்பித் தாங்கள் தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள் அருந்ததியர். இல்லை இல்லை அது தீண்டாமைச் சுவரே இல்லை என மறுப்பவர்கள் இன்னொரு தலித் சாதியினரான பறையர்கள்.தப் பிரச்னையில் தலையிடத் தயக்கம். வழக்கமாக இம்மாதிரிப் பிரச்னைகளில் தலையிடக் கூடியவர்கள் வாய் மூடி மௌனம் காக்க வேண்டிய சூழல். இரு சாராருமே ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதற்காக ஆகக் கீழாக ஒடுக்கப்படும் ஒரு சாதியினர் மீதான ஒடுக்குமுறை…