Author: ரியாஸ் மொய்தீன்

ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரத்தைக் குறைக்காமல் இஸ்ரேல் அப்பாவி ஃபலஸ்தீனப் பொதுமக்களை இனப்படுகொலை செய்துவருகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு என்னதான் நடந்து வருகிறது? கடந்த அக்டோபர் 7 அதிகாலை நேரம் ஃபலஸ்தீனின் காஸா பகுதியை அதிகாரப்பூர்வமாக ஆட்சி செய்துவரும் ஹமாஸின் ராணுவ பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி (Al-Qassam Brigade)ஐச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தெற்கு இஸ்ரேல் எல்லையில் உள்ள பாதுகாப்பு வேலியைத் தகர்த்தும், மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிலேடர்கள் மூலமாகவும் தங்களின் பூர்விக நிலத்திற்குள் (இஸ்ரேலுக்குள்) நுழைந்தனர். அச்சமயம் காஸாவில் இருந்து ஏவப்பட்ட சில ராக்கெட்டுகளால் 1400 இஸ்ரேலியர்கள் இறந்தனர். 240 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறி இஸ்ரேல் அப்போதிலிருந்து இதுவரை கொடூரமான முறையில் வான்வெளித் தாக்குதல் நடத்தி அப்பாவி ஃபலஸ்தீனர்களை கொன்று குவித்து வருகிறது. தற்போது வரை ஏறத்தாழ 10,022 மேற்பட்ட ஃபலஸ்தீனியர்களை காஸாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 152 பேரையும்…

Read More