தொழுகை நேரங்களில் மசூதிகளில் கூறப்படும் தொழுகைக்கான அழைப்பு (அசான் / பாங்கு) பிற மதங்களில் உணர்வுகளை வருத்துகிறது என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடகாவை சேர்ந்த ஆர் சந்திரசேகர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தொழுகைக்கான அழைப்பில் வரும் சொற்கள் பிற மதங்களில் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் வருத்துகிறது என்றும் இனிமேல் மசூதிகளில் இது போன்ற அழைப்பு ஒலிபெருக்கிகளில் விடுக்கப்படக் கூடாது என்றும் இவர் தரப்பு வாதத்தை முன் வைக்கிறார். அரசியலமைப்பின் மத சகிப்புத்தன்மைக்கு உட்பட்ட விஷயங்கள் இவை. மேலும் அரசியலமைப்புச் சட்டம் 25 26ன் கீழ் இவையெல்லாம் அவரவர் தனிப்பட்ட அடிப்படை உரிமையாகும். இது போன்றவை உங்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக நீங்கள் எண்ணினால் இதை நீங்கள் ஏன் இங்கே வாசிக்க வேண்டும் என்று கூறி தொழுகையின் அழைப்பில் உள்ள சொற்களை வாசிக்க முயன்ற ஆர் சந்திரசேகரின் வழக்கறிஞரை நீதிபதிகள் தடுத்தார்கள். மேலும் ஒலிபெருக்கிகள்…
Author: ரிஃபாஸுதீன்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் போர்நிறுத்தத்தில் முடிவடைந்தது. திங்கட்கிழமையன்று இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நடத்திய அவசரக் கூட்டத்தில் ‘ஒரு வருடத்திற்கு பிறகு, ஓரளவு அமைதியான சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல்களை காஸாவின் மீது மீண்டும் அதிகரித்துள்ளது.’ என இந்தியாவின் பிரதிநிதி தூதர் ருசிரா காம்போஜ் அறிக்கை சமர்ப்பித்தார். கடந்த மே மாதத்தில் நடந்த சர்வதேச சமூகத்தின் சந்திப்பில் போர் நிறுத்தம் குறித்தான பேச்சு வார்த்தைகள், பல்வகை வளர்ச்சித் திட்டங்கள் என எதுவுமே பயன் அளிக்கவில்லை. அமைதிக்கான கடும் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுகிறது என்றும் ருசிரா காம்போஜ் குறிப்பிட்டு இருந்தார். பாலஸ்தீன் நாட்டின் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து 3 நாட்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு ஐநாவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.…
தேச துரோக வழக்கில் கைதாகிய சித்தீக் காப்பானுக்கு ஜாமீன் தர மறுப்பு. 669 நாட்களாக சிறையில் தொடரும் அவலம். தேச துரோக வழக்கின் பெயரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சித்தீக் காப்பானின் ஜாமீன் முறையீட்டை அலஹாபாத் உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி கிருஷ்ணா பஹல் ஒருவர் மட்டும், சித்தீக் காப்பாணின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்ற அமர்வில் ரத்து செய்ததாக நீதிமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். சித்தீக் காப்பான் டெல்லியில் வசித்து வரும் ஒரு முஸ்லிம் பத்திரிக்கையாளரும், கேரளா பணி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (KUWJ), டெல்லி கிளையின் செயலாளரும் ஆவார்.அக்டோபர் 2020இல் 19 வயது தலித் பெண் உத்தர் பிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் எனும் ஊரில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை ஆவணப்படுத்தச் சென்ற சித்தீக் காப்பானை இன்னும் மூன்று முஸ்லிம் ஆண்களோடு தேசதுரோக வழக்கின் பெயரில் அநியாயமாக கைது செய்தனர். உத்தர் பிரதேசத்தில் சாதி அடிப்படையில்…
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு, பிரபல இஸ்லாமிய அறிஞர்களான அபுல் அஃலா மௌதூதி மற்றும் சையது குத்துபு ஆகியோர் எழுதிய புத்தகத்தை தனது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது. இவர்கள் எழுதிய புத்தகங்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வி ஆய்வு துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்துத்துவா ஆர்வலரும், வெறுப்புணர்வாளருமான மது கிஸ்வர் என்பவரும் இன்னும் வேறு சில இந்துத்துவா கல்வியாளர்களும் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதிய கடிதம் தான் இந்த காரணம் என இந்தியா டுடே பத்திரிக்கை பதிவிட்டுள்ளது. ‘சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளருமான மது கிஸ்வர் என்பவரும் இன்னும் சில கல்வியாளர்களும் சேர்ந்து நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதிய கடிதம் தான் இந்த முடிவிற்கு காரணம். இந்தக் கடிதத்தில் இது போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் புத்தகங்களை மாணவர்களுக்கு கற்பிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது, மேலும் இந்த கடிதத்தில்…
பொய், பயம் இரண்டையும் வைத்து அரசியல் செய்வது அந்நாட்டு மக்களை கையாள்வதில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஒசாமா பின்லேடனையும் அவரது குழுவினரையும், கோலியாத் ஆகவும் அமெரிக்கா அதைத் தாக்கும் உண்டிகோல் போலவும் செய்த ‘பய அரசியல்’ இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்திராத அளவுக்கு மக்களை கட்டுக்குள் வைத்திருந்தது. ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்ட பிறகு, அமெரிக்கா 2002ல் அல்கைதாவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு பெயர் பட்டியலை தயார் செய்தது. 170 நபர்கள் கொண்ட இந்தப் பெயர் பட்டியலில் இருக்கும் 20 நபர்கள் ஏற்கனவே இறந்திருந்தனர், வெறும் ஏழே நபர்கள் தங்களின் வினோத குறிக்கோளுக்காக உயிர்த்தியாகம் செய்திருந்தனர். 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் 19 நபர்கள் அந்தக் குழுவில் இருந்து வெளியேறி இருந்தனர். அவர்களில் சிலர் வேறு சித்தாந்தத்தை உடைய குழுவில் இணைந்தார்கள், சிலர் கல்வி கற்க சென்றிருந்தனர், இன்னும் பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.…
சபியா எனும் 21 வயது இளம் பெண் டெல்லி காவல் துறையில் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. இவர் டில்லியில் உள்ள சங்கம் விஹார் எனும் இடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 27 ஆகஸ்ட் சபியா வேலை முடிந்து வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் சபியாவை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் டில்லி காவல் துறையிலும், டில்லி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.ஆனால் அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிறகு சபியா கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப்பட்ட செய்தி தெரியவருகிறது. சபியா நான்கு பேர்கொண்ட குழுவால் மிக கொடூரமாக கற்பழிக்கப்பட்டிருந்தார்.மேலும் ஐம்பதுக்கும் மேல் உடலில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. #Justiceforsabiya அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டிருந்தன. காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்த செயலாகும் இது. இந்த கொடூர செயலில் சபியாவுடன் பணியில் இருந்த ஒரு பெண்ணும் உடந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இதை என் கைகளால் எழுத நான் வெட்கப்படுகிறேன்.#Justiceforsabiya இவள் பெயர்…