மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி கமல் ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளிவந்துள்ளது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இத்திரைப்படத்தில் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த இயக்குநர் நிறைய முயன்றுள்ளார். இருந்தும் சில இடங்களில் படம் தூக்கத்தைத் தருகிறது. முகுந்த் வரதராஜனின் மனைவியின் பார்வையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறினாலும் படம் முழுவதும் சிவகார்த்திகேயன் மட்டுமே ஆக்கிரமித்துள்ளார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கதாபாத்திரங்களைத் தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை கடந்து செல்கின்றன. படம் வெளியான நாள் முதல் தற்போது வரை பலரது வாழ்த்துக்களை பெற்றுவந்தாலும் அதன் உள்ளடக்கத்திற்காக பரவலான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. நிஜத்தில் முகுந்த் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது காதலியான கிருஸ்தவ பெண் இந்து ரெபெக்கா வர்கீஸை திருமணம் செய்துகொள்கிறார். முகுந்தின் மனைவியை கிருஸ்துவ பெண் என காட்சிக்கு காட்சி அடையாளப்படுத்திய இயக்குநர் கதாநாயகன் நிஜத்தில்…
Author: ரஹமத்துல்லா ஜெ
பா.ரஞ்சித்தின் அரசியல் திரைப்பட வரிசையில் இம்முறை முற்போக்குத்தனமான காதலின் அரசியலைப் பேசியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது. ரொமான்டிக் மியூசிக்கல் வகையான திரை மொழியில் கலப்பு காதலை நாடகக் காதல் என கொச்சைப்படுத்தி சினிமா வழியாக பிரச்சாரம் செய்ய தொடங்கப்பட்டிருக்கும் இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வாயிலாக. ஆணவக் கொலை, பீப் (உணவு அரசியல்), கலப்புத் திருமணம், வாசிப்பு எவ்வாறு ஒரு மனிதனை செதுக்குகிறது, தீண்டாமையின் வலி, உயர்ந்த ஜாதியினராக தங்களை கருதுபவர்களின் சாதிய வெறி போன்ற விஷயங்களை தனக்கே உரிய பாணியில் பசுமரத்தாணி அடித்தது போல பதிவு செய்துள்ள பா.ரஞ்சித்திற்கு நன்றி!!! புதுச்சேரியை மையமாகக் கொண்ட முற்போக்கு அரசியலை பேசும் ஒரு நாடக குழுவினர் தங்களின் காதலின் அரசியல் குறித்தான நாடகத்தை அரங்கேற்றினார்களா? இல்லையா? படத்தின் ஆரம்பத்திலேயே பிரேக்கப் ஆகும் முக்கிய கதாபாத்திரங்களான ரெனே மற்றும் இனியனின் காதல் கடைசியில் என்னவானது இந்தப் படத்தின் ஒரு…
குடியுரிமை திருத்த சட்டம், புல்லிபாய் செயலி, ஹிஜாப் தடை போன்ற இஸ்லாமிய சமூகம் மேற்கொண்ட பல அடக்குமுறைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் அஃப்ரின் பாத்திமா. வெல்ஃபேர் கட்சியின் மாணவர் பிரிவான ஃபிரட்டனிட்டி மூமென்டின் தேசிய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவத் தலைவர். கடந்த ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தார். தற்போது அங்கு ஆராய்ச்சி மாணவியாக பயின்று வருகிறார். கல்லூரி வளாகங்களில் தொடர்ந்து அரசின் பல அநீதிகளுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய மாணவத் தலைவர் அஃப்ரின் பாத்திமா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பாஜக-வின் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்தை எதிர்த்து உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலவரத்துக்கு வித்திட்டதாக கூறி அஃப்ரின் பாத்திமாவின் தந்தையும், வெல்ஃபேர் கட்சியின் உள்ளூர் தலைவருமான ஜாவித் முஹம்மது கைது செய்யப்பட்டார். மேலும் அஃப்ரின் பாத்திமாவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரும்…
நீங்கள் சமையல் விரும்பிகளாக இருப்பீர்களெனில், யூடியூப்பில் அதிகம் வலம் வருபவர்களாக இருப்பீர்களெனில், அவரை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அவர் தான் “நவாப் கிட்சன் ஃபுட் ஃபார் ஆல் ஆர்பன்ஸ்” (Nawab’s Kitchen Food For All Orphans) என்ற யூடியூப் சேனலை வெற்றிகரமாக நடத்திவரும் காஜா மொய்னுதீன் என்ற இளைஞர். இவர் ஒரு MBA பட்டதாரி. ஆனால் படித்த படிப்பிற்கான வேலையையை பார்க்காமல், அனாதை மற்றும் ஏழை குழந்தைகளின் பசியை போக்க பல இடங்களுக்கு சென்று உணவு சமைத்து குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். தமது பணியை பிரபல்யப்படுத்தி மக்கள் ஆதரவு பெறுவதற்காக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ருசிமிக்க உணவுகளை தனது புன்முறுவள் பூத்த முகத்துடன், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பசியை போக்கி வருகிறார் நவாப். இணையத்தில் இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியாளராய் சமூக வலைத்தளங்களில் தடம் பதித்திருக்கிறார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் குழந்தைகளின் பசியை தீர்க்கும் இந்த…