Author: ராபியா குமாரன்,

கட்டுரையாளர் : ராபியா குமாரன், எழுத்தாளர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 16-05-2014 அன்று இரவு இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். ஒரு தமிழ் நாளிதழின் இணையதளத்தில் நரேந்திர மோடியின் வெற்றிச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியின் கீழ் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள். அத்தனையும் நரேந்திர மோடியை இந்திய தேசத்தைக் காக்கவும், முன்னேற்றவும் வந்த அவதாரம் என்ற நிலைக்கு தூக்கிப் பிடித்த பின்னூட்டங்கள். குஜராத் போன்று இந்தியாவும் இனி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய கவலை இருக்காது, பொருளாதாரத்தில் இந்தியா தன்னிறைவு பெறும், வல்லரசு நாடுகளின் பட்டியலில் இனி இந்தியாவின் பெயரும் இடம்பெறும், இந்தியாவைக் காக்க வந்த கடவுள், ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க அவதரித்த மகான், இளைஞர்களின் ஏக்கங்களுக்கு தீர்வைத் தரப்போகும் மகாபுருஷர் என்றெல்லாம் இடப்பட்டிருந்த பின்னூட்டங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன. உண்மையில் அன்றைய தினம் சிறுபான்மையினர் தவிர்த்து மற்ற மக்கள் அனைவரும் மோடியின் வெற்றியை அவ்வாறுதான் பார்த்தார்கள். காரணம், 2002ஆம்…

Read More