Author: பீர் முஹம்மது

SIO முன்னாள் மாநிலச் செயலாளர்

திருமறைக் குர்ஆனுடைய 46வது அத்தியாயத்தின் 15 ஆவது வசனம், “ 40 வயதடைந்த ஒருவனை முழு பலம் உடையவன்…” என்று கூறுகிறது. அதாவது 40 ஆண்டுகால வாழ்க்கையைக் கழித்த ஒரு மனிதன், தன் முதிர்ச்சியினுடைய உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றான். எது சரி? எது தவறு? என்பதை தன் 40 ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக துல்லியமாக கணிக்கும் அறிவுக்கூர்மையை அவன் பெற்றிருக்கிறான். அது மட்டுமல்ல தன்னுடைய 40 ஆண்டுகால அந்த வாழ்க்கையிலே ஒரு மிகப்பெரும் நெட்வொர்க் ஒன்று அவனைச் சுற்றி உருவாகின்றது. அவனுடைய பெற்றோர்கள், உறவினர்கள், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், அரசு என அவனுடைய இந்த வாழ்நாள் என்பது அவனைச் சுற்றி ஒரு மிகப்பெரிய ஒரு சமூகத்தை உருவாக்குகின்றது . ஆகையால் திருமறைக் குர்ஆன் 40 ஆண்டுகாலம் என்பதை, ஒரு முதிற்சியினுடைய அடையாளமாக காட்டுகின்றது. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு இந்த 40 ஆண்டுகால பயணத்தில் பலவிதமான அனுபவங்களை பெற்றுக் கொண்டு,…

Read More

என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டு கைதி ஆனான்; அவனது தாயோ மன உளைச்சலில் பைத்தியக்காரி ஆனாள்! மனைவி இருந்தாள் இறை அச்சத்தோடு பத்தினியாக… வாரிசுகள் கிடந்தன பசியும் பட்டினியுமாக… ஊர் முழுக்க கை ஏந்தினாள் பிச்சை எடுக்க அவளின் வாரிசுகள் நல்ல முறையில் தலையெடுக்க… சிறைச் சாலையில் தொலைத்தான் அவனது இளமையை நாடு இழந்தது அவனது நல்ல திறமையை… சுற்றம் சூழ்ந்து ஏசியது அவனை ‘பாவி’ என்று நடுநிலையாளர் அறிவர் இதற்கு காரணம் ‘காவி’ என்று! குண்டு வெடித்த மறுகணமே குற்றவாளி ஆனான்… பத்தாண்டுகள் விசாரணை கழித்து நிரபராதி ஆனான்… நாங்கள் இஸ்லாத்தை ஏற்றது குற்றமா? எங்களுக்கு தீவிரவாதி பட்டமா? விழித்தெழு என் அருமை மனித இனமே அநீதியை வென்றெடுப்போம் இனி இந்த கணமே! தலைவர்களே நம்மிடம் உள்ளது நல்ல இளைஞர் படை! அவர்களைச் செய்ய வேண்டும் சட்ட வல்லுநர்களாய் அறுவடை! கண்ணீருக்கு இனிமேல் நேரம் ஏது சகோதரியே! துடைத்து விட்டு…

Read More