Author: நேமத்துல்லா

(இந்த கட்டுரை, முஹம்மது முஜம்மில் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதிவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.) பொதுவாக மக்களிடையே அறிவியல் குறித்து மேலோட்டமான ஒரு கருத்து உள்ளது. அதாவது, அறிவியலால் அனைத்தையும் மதிப்பிட முடியும், நமது கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க முடியும் என்பதே. ஆனால் அது பிழையானது. உதாரணத்திற்கு ஒரு கூற்றை எடுத்துக் கொள்வோம். “ஐஸ்வர்யா ராய் அழகானவர்” இந்த கூற்றை அறிவியல் அடிப்படையில் நம்மால் நிரூபிக்க இயலுமா? அவரது அழகை அறிவியலால் மதிப்பிட முடியுமா? முடியுமானால், ஒருவர் ஐஸ்வர்யா ராய் அழகில்லை என்று கூறுகிறார் எனில் அவர் அறிவியலின் அடிப்படையில் தவறான கருத்துடையவர் ஆவார். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்வது. அழகு போன்ற மனித பண்புகள் சார்ந்தவற்றில் ஒவ்வொரு மனிதரின் பார்வைக்கும் வேறுபாடுகள் இருக்கும். இது போன்ற மனித பண்புகளை அறிவியலின் அடிப்படையில் மதிப்பிடவோ விளக்கவோ முடியாது. இப்படி அறிவியலால் விளக்க முடியாத பல விஷயங்கள் இவ்வுலகில் உள்ளன. அப்படிப்பட்ட…

Read More

‘மனிதாபிமான போர் இடைநிறுத்த’ நேரத்தில் காஸா ஊடக அலுவலகத்தின்படி, இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,532 ஆக இருந்தது, காணாமல் போனவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 7,000இல் நின்றது. கொல்லப்பட்டவர்களிலும் பாதிக்கப்பட்டவர்களிலும் 40% குழந்தைகள்தாம். இன்னும் சொல்லப்போனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களும் குழந்தைகளுமாகத்தான் இருந்தனர் 21ஆம் நூற்றாண்டில் நடந்த எந்த ஒரு மோதலிலும் இத்துணை பெரும் விகிதத்தில் குழந்தைகள் கொல்லப்பட்டதில்லை. காஸாவின் மக்கள் தொகையில் 80% பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.  காஸாவில் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பை நடத்த வேண்டும் என்று இஸ்ரேலிய அமைச்சர்கள் அத்தனை பேரும் வெளிப்படையாகக் கூச்சலிட்டனர்.  இதன் பிறகும் மேற்கத்திய உலகத் தலைவர்களில் சிலரைத் தவிர அனைவருமே இஸ்ரேல் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை அதன் தற்காப்பு உரிமையாகவும் அல்லது ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலின் தவிர்க்க முடியாத விளைவாகவும் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகின்றார்கள்.  ஆக மேற்கத்தியத் தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றார்கள். அவர்கள் இஸ்ரேலைத்…

Read More