உலகம் இயங்குவது கணித தத்துவங்களில் தான் ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு விஞ்ஞான அறிஞர்களும் , கல்வியாளர்களும் , தத்துவார்த்த மேதைகளும், ஆன்மீக வழிகாட்டாளர்களும் ஏற்றுக்கொண்ட ஒரு பதம். உலகம் இயங்குவதற்கான அத்தனை செயல்பாடுகளும் குறிப்பிட்ட சமன்பாட்டின் கால இடைவெளிக்குள் நடந்தேறுகிறது என்கிற தத்துவத்தை கிமுவில் இருந்தே அனைவரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். நம்முடைய இந்த இஸ்லாமிய பாரசீக மேதையும் அதனை குறிக்கோளாக கொண்டே கணித தத்துவங்களை வடிவமைத்துக்கொடுத்துள்ளார். இந்திய கணித மேதை ஆர்யபட்டா, பிரம்மகுப்தா,பாஸ்கரா ஆகியவர்களுக்கு முன்பாக அதாவது வேதகால கணித மேதைகளாக அறியப்படும் யஜுர்வேதசமிதா (1200-900) , பிங்கலர் போன்றோரும் கணித சமன்பாட்டினை உருவாக்கியுள்ளனர். இவை சீனம்,கிரேக்கம், கெமத் (எகிப்து) ஆகிய பிராந்தியங்களுக்கும் பிரயாண வரைவுகள் தயாரிப்போர் வாயிலாக பரவியிருந்தது. ஆனால் இவர்கள் உருவாக்கி வைத்த கணித சமன்பாடுகள் கால அளவீடு மற்றும் எடை அளவீடுகளைக் குறிப்பதாக மட்டும் இருந்தது. ஆனால் நவீனகாலத்திற்கு முந்தைய அதாவது இருண்ட காலம் என கூறப்படும்…
Author: நஸ்ரத் ரோஸி
1) ஜாபிர் இப்னு ஹைய்யான் (721-815) அபு மூஸா ஜாபிர் இப்னு ஹைய்யான் எனும் பாரசீக விஞ்ஞானி பிறந்தது தற்போதைய இரான் நாட்டின் கொரசான் மாகாணத்தில் உள்ள துஸ் நகரத்தில், அப்போது உமைய்யத் கலிஃபாக்கள் ஆட்சி நடைபெற்றுவந்தது. பக்தாத்,எமன் மற்றும் கூஃபா நகரங்களில் தம் வாழ்க்கையை தொடர்ந்த அவரது ஆன்மீக குரு சூஃபி ஞானி ஜாபர் இப்னு முஹம்மது அஸ்’ஸாதீக் ஆவார். இவர் ஷியாக்களின் ஆறாவது இமாம் ஆவார். ஷியா பிரிவில் சென்றுவிட்டாலும் இவர் நபிகள் நாயகம் அவர்களின் குரைஷி குலத்தில் பிறந்தவர்கள் தான், இவரது தந்தை முஹம்மது அல் ஃபக்ரு , இமாம் அலியின் நேரடி வாரிசாவார். . ஹனஃபி மற்றும் மாலிகி இமாம்களின் குருவும் இவர் தான். சூபிய தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இவருக்கு பல மாணவர்கள் உண்டு அவர்களில் ஒருவர் தான் இப்னு ஹைய்யான். இப்னு ஹைய்யான் பல்கலையில் வல்லுனர் ஆவார். “அரபுலகின் ரசாயன இயலின் தந்தை” என…
இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது. அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்குக் சிந்தனைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இந்த வாசிப்பு தினத்தில் உலக திருவேதமான குர்ஆனில் கல்வி பற்றி கூறப்பட்டிருக்கும் விபரங்களை கூற விழைகிறேன். உங்கள் அனைவருக்கும் இதன் மூலம் குர்ஆன் தமிழாக்கத்தை ஒருமுறை படித்துப்பார்க்க வேண்டுகோள் வைக்கின்றேன். அல்-குர்ஆன் கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம் அறிவு எனும் பொருள்படும் ‘இல்ம்’ என்ற பதம் அல்குர்ஆனில் 80 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தைக் கொடுக்கும் அல்பாப் எனும் சொல் அல் குர்ஆனில் 16 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்நுஹா என்ற சொல் 2 தடவைகள் வந்துள்ளன. அல் குர்ஆனில்…
இஸ்லாமிய பொற்காலத்திற்கு முதல் அடித்தளமிட்ட பல்கலை பாடசாலையான பைத்துல் ஹிக்மா உருவாக்கப்பட்டதன் நோக்கம் உலகில் அதை போலவே பல பல்கலைகள் உருவாக காரணமாயிருந்தது, அவ்வகையில் ஃபாத்திமத் கலிபாக்காளின் ஆட்சியில் எகிப்தில் தாருல் இல்ம் / தாருல் ஹிக்மா ( House of Knowledge) எனும் மற்றொரு மகா நூலகமும் தோற்றுவிக்கப்பட்டு குர்ஆன் கல்வியும் உலக கல்வியும் போதனம் செய்யப்பட்டது. அல்ஹகீம் பி’அம்ரல்லாஹ் எனும் ஃபாத்திமத் கலீபா அதனை தோற்றுவித்தார். ஒரு பக்க ஷெல்ஃபில் 40,000 புத்தகங்களை அடுக்க முடியும் என்றால் அதன் பிரம்மாண்டம் உங்களது கற்பனைக்கானது. கிமுவில் எரிந்து சாம்பலாக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியா நூலகம் மீண்டும் அதே இடத்தில் ஃபாத்திமத் கலிபாக்களால் தாருல் ஹிக்மா என்ற பெயரில் மறுவுருவாக்கம் செய்யப்பட்டது. தாருல் ஹிக்மா என உலகம் முழுவதும் அதன் கிளைகள் உண்டு. குறிப்பாக சவூதி-ஜித்தா, மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் இன்றும் அவை பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. முஸ்லிம்கள் பெரும்பாலும் போர்களிலும் நாடுபிடிப்பதிலும்…
கி.பி.எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி அரபுலக விஸ்தரிப்பு மிக நீண்ட தொலைவினை எட்டியிருந்தது. உமைய்யத் கலிஃபாக்களின் காலத்திலேயே வடக்கு ஆப்பிரிக்கா தொட்டு ஐரோப்பிய -ஸ்பானிய (ஐபீரியன் தீபகற்பம்) முனையை அடைந்து தற்போதைய பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாம் தனது கிளையை பரப்பியிருந்தது. கி.பி.750 ஆண்டுவாக்கில் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இஸ்லாமிய பேரரசு இருந்தது. பிரிட்டிஷ் மற்றும் பைஸாண்டிய ரோம அரசுகள் தங்களது ஐரோப்பிய, ஆசிய நிலப்பகுதிகளை போரில் இழந்து நிலப்பரப்பினை சுருக்கிக்கொண்ட காலம். நபிகளாரின் இறப்பிற்கு பிறகு நிகழ்ந்த முதல் உள்நாட்டு போரில் அரபு ராஜ்ஜியத்தை கைப்பற்றியிருந்த முஉஹாவியா இப்னு அபு ஸுபியான் தலைமையில் அமைந்த உமைய்யத் அரசு, இரண்டாம் மர்வான் காலத்தில் அப்பாஸிய கலிபாக்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதே 33,00,000 லட்சம் மக்கள் இஸ்லாமிய ராஜ்ஜியத்தில் வாழ்ந்துவந்தனர். கலிபா ஹிஷாம் இப்னு அப்துல் மாலிக் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் அதன் உச்சத்தை தொட்டிருந்த்து. முகமது பின் காஸிம் காலத்தில் தட்ச்சீலத்தை தாண்டி…
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பல துறைகளிலும் நாடு வளர்ச்சியடைந்துள்ளதை குறிப்பிடும். பெண்களின் கல்வி நிலையை கொண்டும் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடப்படுகிறது. 2014-2019ம் ஆண்டு வரையிலான கர்நாடகா, அசாம், பீஹார், அருணாசலப்பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் உயர்நிலை கல்வியை முடிப்பதற்கு முன்பாக பள்ளி படிப்பை நிறுத்தி விடும் சூழல் நீடிக்கிறது. இடைநிற்றல் விகிதம்: 2014-2015ம் ஆண்டில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த இந்திய அளவில் 17.79% ஆக இருந்தது. 2015-16-ம் ஆண்டுகளில் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் 16.88% , தொடக்க கல்வி இடைநிற்றல் விகிதம் 4.09% ஆகவும் இருந்திருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் இந்த சதவீதம் உயர்ந்திருக்கிறது. அந்த கல்வி ஆண்டில் இடை நிலை கல்வி மட்டத்தில் இடைநிற்றல் சதவீதம் 19.81%, தொடக்க கல்வி இடைநிற்றல் 6.34…