Author: முஜாஹித்

பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ஒரு சொல்லாடல் என்றாலும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இந்த வார்த்தை மிகவும் பிரபலமானது.ஆம் சமூக விரோதிகள் என்கிற வார்த்தை தான் அது.முதலில் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்களும், பா.ஜ.க வினரும் அந்த வார்த்தையை ஜல்லிக்கட்டு போராட்டம் வீரியமெடுக்க தொடங்கியதிலிருந்து பிரயோகப்படுத்தி வந்தனர்.அந்த வார்த்தையானது தொடர்ந்து கடந்து அந்த போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் பலர் அந்த சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டனர் இது திசைமாறி போகிறது என கூறி ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகினர்.அந்த வார்த்தையை அவர்களாக கூறினார்களா அல்லது கூற வைக்கப்பட்டார்களா என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை காவல்துறை பாதுகாப்பு அளித்து ஆதரித்து வந்த தமிழக அரசும் திடீரென அந்த போராட்டத்தை வன்முறையை கொண்டு முடித்து வைத்தது.ஏன் அவ்வாறு செய்யப்பட்டது என்பதற்கு தமிழக அரசு அளித்த விளக்கமும் கூட சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்து விட்டனர்…

Read More

தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு போராட்டமும் அகில இந்திய அளவில் கவனம் பெறும்.அதற்கு முக்கிய காரணம் இங்கு நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் உரிமைக்காக, உணர்வுரீதியாக நடப்பதால் தான்.அந்த வகையில் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டமும் அகில இந்திய அளவில் மட்டுமல்ல உலகத்தின் கவனத்தையும் பெற்றது. மக்கள் போராட்டத்தில் அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுமே உலகின் கவனத்தை தூத்துக்குடியின் பக்கம் திருப்பியது. மக்கள் போராட்டத்தில் நடைபெற்ற அரசின் வன்முறையில் 13 உயிர்கள் பறிக்கப்பட்டன, ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரே போனாலும் அவர்கள் அனைவரின் நோக்கம் ஆலையை மூட வேண்டும் என்பதாகவே இருந்தது. உயிரை பறித்தாலும் நோக்கத்தில் உறுதியாக இருந்த அம்மக்களின் எண்ணத்தைப் பார்த்து அதற்கு அடிபணிந்த அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. மக்களின் கோரிக்கையை மதித்து இந்த ஆலைக்கு சீல் வைத்துள்ளோம் என தமிழக அரசு கூறினாலும் இந்த ஆலையை…

Read More