Author: லியாக்கத் அலி

இந்தியாவில் கொரானா இரண்டாம் அலை அதிதீவிரமாக உயிர்களை பலிவாங்கிக் கொண்டுருப்பதற்கு மதம் சார்ந்த நிகழ்வுகளும் அரசியல் அணிதிரட்டல்களும் முக்கிய காரணிகள் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அரசியல் அணி திரட்டல்களுக்கு ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.. ஆனால் மத வழிபாட்டு கூடல்களில் பிடிவாதம் பிடிக்க என்ன நோக்கம் இருக்க முடியும்? சாலையோரம் பிணங்கள்.. வீடுகள் தோறும் மரண ஓலங்கள்.. நிச்சயமற்ற வாழ்க்கை முகத்தில் அறையும் போதாமைகள்.. கொரானா கொடுந்தொற்றுக் காலத்தின் இந்த கையறு நிலை, மக்களின் எந்த நம்பிக்கையையும் உறுதி செய்யாமல் விரக்தியின் விளிம்புக்கு தள்ளி விட்டிருக்கிறது. கொரானா உயிர்கொல்லி நோய் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. மக்கள் நெருக்கமாக புழங்கும் இடங்களில் அது வேகமாக பரவுகிறது என்பதும் அனைவருக்கும் தெரிகிறது. விளைவுகளும் புரிகிறது. இருப்பினும் சமய கேந்திரங்களில் வழிபாட்டிற்கு மக்கள் ஆர்வமாக குமிகிறார்கள். வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். ஏன் இப்படி அழிச்சாட்டியமாக நடக்கிறார்கள்? மதங்கள் இந்த…

Read More

மாணவர் சந்திக்கும் பிரச்சினைகள் : தொழில் நுட்பவசதிகள் அனைத்து பகுதிகளையும் இதுவரை சென்றடையாமல் இருப்பதும், தொடர்பு சமிக்ஞைகள் சரியாக கிடைக்காத பகுதிகளில் செல்பேசியைத் தூக்கிக்கொண்டு வீதிக்கும், தோட்டத்துக்கும், மேற்கூரைக்கும் அலையும் அவலத்திற்கு மாணவர்களை ஆளாக்குவது, இலகுவான கற்றல் சூழலுக்கு வழிவகுக்காது. அப்படியே வசதிகள் வாய்க்கப் பெற்றாலும் அதனை சரியாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் பெருந்துயரங்களை விளைவிக்கிறது. இப்படிப்பட்ட தவறான பயன்பாட்டால் உயிர் மற்றும் உடமைகளை மாணவர்கள் இழந்து தவிக்கிறார்கள். தொழில் நுட்பக்கருவிகள் ஏற்கனவே மனிதர்களைத் தனித்தீவுகளாக மாற்றி வைத்துள்ள நெருக்கடி ஒருபுறம் இருக்க, இப்போது செயலிகள் மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கத் தயாராகி வருகின்றன. இணைய வழிக்கல்வியில் எந்த வரைமுறையும் காலக்கோடும் இல்லாமல் மாணவர்கள் இஷ்டத்துக்கு சுரண்டப்படுவதும், நேரங்காலம் என்று எந்த கட்டுப்பாடும் இன்றி மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதும் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகள் மூடப்படுவது கற்றலை தாமதப்படுத்துகிறது. அமெரிக்காவின் மழலையர்் பள்ளிகளிலேயே கல்வி வளாக சூழல் இல்லாதது குழந்தைகளின்…

Read More

கற்றல் – கற்பித்தலில் எழுந்துள்ள சிக்கல்கள் கல்விச் சூழலில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சமீபகாலமாக தொடர்ந்து கூடிக்கொண்டே வந்திருக்கின்றன. இதில் கொரானாகால கல்விச்சூழல் பெற்றோர் – ஆசிரியர் -மாணவர் என்ற முத்தரப்புக்கும் இந்த நெருக்கடிகளை அதிகப்படுத்தி புதிய சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. அத்தகைய பிரச்சினைகளை தொகுத்தும் பகுத்தும் பார்க்கலாம். பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கல்வி விலை உயர்ந்த பண்டமாக மாறிவிட்ட வர்த்தக அமைப்பில், வருமானத்தை இழந்து எதிர்கால அச்சத்தில் நிற்கும் உழைக்கும் மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக வேகமாக மாறிவருகிறது. வருமானத்திற்கான வழிகள் அடைக்கப்பட்டு, அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களுக்கே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் நிலவுவதால் கல்வியை இரண்டாம் பட்சமாக கருதும் போக்கு விளிம்புநிலை மக்களிடம் பரவியிருக்கிறது. கல்விச்சூழலை விட்டு சாமான்ய மக்கள் செய்வதறியாது முற்றிலுமாக ஒதுங்கி நிற்கிறார்கள். கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்களில் 50% மேற்பட்டோர் எழுத்தறிவற்ற வர்களாகவே இருக்கிறார்கள் எனும் பின்னணியில் நவீன தொழில் நுட்ப கருவிகளின் மூலம் முன்னெடுக்கப்படும் கல்வியை…

Read More

நம் நிலையெல்லாம் இப்படியாக இருக்க, கொரானா கால கல்விச்சூழலை நெளிவுசுளிவோடு அணுகிய நாடுகள் செய்ததென்ன? தைவான், நிகராகுவா, ஸ்வீடன் உள்ளிட்ட சில நாடுகள் பள்ளிகளை மூடுவது குறித்து சிந்திக்கவே இல்லை. பள்ளிகளை விடுத்து. பிற இடங்களில் குழந்தைகளுக்கு உள்ள ஆபத்தை விட, கல்வி கொடுக்க முடியாத நிலையில் வரும் இன்னல்கள் அதிகம் என்பதால், பள்ளிகளைத் திறப்பதால் பெரும் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பில்லை என்று தெளிவாக முடிவெடுத்தனர். குறிப்பாக ஸ்வீடனின் இந்த அணுகுமுறையை நார்வே, டென்மார்க் உள்ளிட்ட அருகாமை நாடுகள் சரியான முடிவு என்று தற்போது ஏற்றுக்கொண்டுள்ளன. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் எல்லைகளை மூடுவதற்கும் ஒப்புக்கொள்ளாமல் உள்நாட்டு ஒழுங்கு மற்றும் தொடர் கண்காணிப்பின் மூலமாகவே நல்ல பலன்களைக் கண்டுள்ளது அந்தநாடு. இதே போல் ஜப்பானில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகின்றன. 1000 குழந்தைகள் உள்ள பள்ளியில் 10 நுழைவாயில்கள் வைத்து உடல் வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனைகளுக்குட் படுத்தப்பட்டு…

Read More

இந்திய பன்மைச் சூழலில் சமத்துவம் என்பதை பெருமளவு சாத்தியப் படுத்தியவை கல்விக்கூடங்கள் என்றால் அது மிகையாகாது. வேறுபட்ட பழக்கங்கள், பழகுமுறை பண்பாடுகள், பேச்சு வழக்குகள், சாதி – மத பிளவுகள், சமூக சடங்காச்சாரங்கள் ஆகியவற்றிற்கு இடையே கல்வி கற்க ஓரிடத்தில் வந்து குழுமிய மாணவர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்தனர். உரிமைகளைப் பேசினர். சமூகத் தளைகளை அகற்றி சிந்திக்கத் தலைபட்டனர். ஆசிரியர் – மாணவர் உறவு கற்பித்தலுக்கான கருவியாக மட்டும் அமையாமல், மனிதமனங்களைக் கட்டிப்போடும் நுட்பமான உளவியல் சங்கிலியாகவும் உருவெடுத்தது. அந்த சங்கிலித் தொடர்பைத் துண்டிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அதில் முக்கியக் கண்ணியாக இணையவழிக் கல்வியைக் கையில் எடுத்துள்ளது சிபிஎஸ்இ. கல்விச் சூழலில் கூடுதல் ஏற்றத் தாழ்வைப் புகுத்தும் இணையக்கல்வி, பள்ளிக்கூடங்களின் பின்னணியில் செயலாற்றும் சமூகப் பொறுப்பை அரித்துத்தின்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில் குறைந்தபட்சம் 3-10…

Read More

இணையவழிக் கல்வியை முன்னெடுப்பது குறித்து புதிய கல்விக்கொள்கையில் எந்த வரைவுத் திட்டமும் இன்றியே தெரிவிக்கப் பட்டிருந்ததை நாம் இந்த இடத்தில் நினைவுகூர கடமைப் பட்டுள்ளோம். அதை ஒரு கட்டாயத்தின் பேரில் பரிட்சித்து பார்ப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பு கொரானா காலத்தில் கைகூடி வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள் கல்விச் சூழலைவிட்டு அதிகமதிகமான குழந்தைகளை புறந்தள்ளும் நுட்பங்களைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நோக்கில் கல்வி பொதுமைப்படுத்தல் (Universalisation of education) என்பதில் முக்கியப்பங்கு வகித்த கல்விக்கூடங்களை சத்தமில்லாமல் இரண்டாம் பட்சமாக ஆக்குவதற்கு இணையம் உதவும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு ஏழை கிராமப்புற, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவனுக்கு கல்லாலான பள்ளிக்கட்டிடமே கல்வியையும் உணவையும் உத்திரவாதப்படுத்தும் அடையாள வில்லையாக (token) இருக்கும் நிலையில், இந்த கதவடைப்புச் சிக்கலை அவனால் எப்படி வாய்ப்பாக பார்க்க முடியும்? மத்திய பள்ளி கல்வி வாரியம் அப்படியான நல்வாய்ப்பாக இதை…

Read More

இந்தியாவில் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 28 கோடியே 63 லட்சத்து 76 ஆயிரத்து 216 ஆகும். கொரானா கால தற்போதைய நெருக்கடிகள், தேக்கநிலைகள் ஆகியவை சுட்டிக்காட்டும் அறிகுறிகளை வைத்தே இதில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு திரும்பமாட்டார்கள் என்று யுனஸ்கோ அறிக்கைத் தெரிவித்துள்ளது. வேதனை தரும் இந்த செய்தியை முன்வைத்தே நமது அணுகுமுறைகளை ஆய்ந்து பார்க்கலாம்.. இந்த மூன்றுமாத காலகட்டத்தில் இந்தியாவில் 14 கோடி பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கொரானாகால நெருக்கடிகள் இப்படியே தொடரும் பட்சத்தில் பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகள் மென்மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன. கொரானா கால கல்விச் சூழலை உலகளாவிய நிலையில் வைத்து பார்த்தோமானால் உலகம் முழுதும் பள்ளிகளில் கல்வி பயிலும் 172 கோடி குழந்தைகளில், கோவிட் அச்சம் உச்சம் தொட்ட ஏப்ரல் மாத காலகட்டத்தில், 95% மேல் கல்விக்கூடங்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். இவர்களை மீண்டும்…

Read More

/சிஏஏ தான் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.. நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தக் கூடியது. ஆனால் என் ஆர் சி எல்லா நாட்டுக்கும் தேவையானது. நம் நாட்டுக்கும் தேவையானது// என்று கொஞ்சம் பேர் சொக்காட்டானை உருட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.. இவர்கள் எல்லாரும் “என்ஆர்சியில் பேர் இருக்கிறதோ, இல்லையோ அதுகுறித்து எந்த ஒரு இந்துவும் கவலை கொள்ளத் தேவையில்லை” என்ற மோகன் பகவத்தின் பேச்சையும், “என்ஆர்சி குறித்து இந்துக்கள், புத்தர்கள், கிருத்துவர்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை” என்கிற அமித்ஷாவின் உத்திரவாதத்தையும் ஒரு முறைக்கு பத்து முறை வாசிப்பது நல்லது. சிஏஏவில் அதிகாரம் பூர்வமான வார்த்தைகளாக இடம் பெறும் மத ரீதியான வெறுப்பு, என்ஆர்சியில் நிர்வாக ரீதியில் உணர்த்தப் படுகிறது. ஒரு சட்டத்தை வெறுமனே அதனுடைய வாசகங்களைக் கொண்டு பார்ப்பதை விட அதன் சாரத்தைக் (spirit) கொண்டு சீர்தூக்கிப் பார்ப்பதே சிறப்பு. இங்கே வந்து நின்றுகொண்டு “வந்தேறிகளால் எவ்வளவு பிரச்சினை, அதையெல்லாம் களைய வேண்டியது…

Read More