Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்

மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

1991 மே 21 அன்று தமிழக மண்ணில் ஏற்பட்ட ஒரு தீராக் களங்கம் திரு ராஜிவ் காந்தி அவர்களின்  படுகொலை சம்பவம். தேர்தல் பிரச்சாரத்திற்காக  ஸ்ரீபெரும்பூதூர் வந்திருந்த போது  அவரை விடுதலைப் புலிகளை சார்ந்த சிலர் படுகொலை செய்தார்கள். இந்த படுகொலைக்கு பின்னால் பல்வேறு சர்வதேச, அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு இந்த கொலைக்கு விடுதலை புலிகள் மட்டுமே காரணம் என்ற பிம்பம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அதனோடு தொடர்புடையவர்கள் என்று பலரும் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் இருக்கிறார்கள். நீண்ட நெடும் காலமாக கிட்டத்தட்ட 27 வருடங்களாக இந்த கொலையோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படக்கூடிய பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு நபர்கள் இன்றும் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் பேரறிவாளன் போன்றோர் எந்த தவறும் செய்யவில்லை, இதனுடனான தொடர்பு மிக மிக குறைவு என விசாரணை அதிகாரிகளால் சொல்லப்பட்டும்கூட…

Read More