Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்

மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம் கிராமங்களை இரவோடு இரவாக புல்டோசர்கள் கொண்டு இடித்து தள்ளுவதும் அவர்களின் நெஞ்சின் மீது ஏறி நின்று ஆனந்த நடனமாடுவதும் சர்பானந்தா சோனுவால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக பாசிச பாஜக அனுபவிக்கும் ஒரு வகையான இன்ப வெறியாகும். அஸ்ஸாம் குடிமக்கள் விஷயத்தில் தேசியக் குடியுரிமைப் பதிவு பூர்வாங்க முடிவுகளை வெளியிடுவதற்கு முந்தைய நாட்களிலும் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறைந்தபட்ச உரிமை கூட இல்லை. இவை எதையும் ஊடகங்களும்உரக்கச் சொல்லுவதுமில்லை.. அசாமில் உள்ள விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் தரணிகாந்த் கோஸ்வாமியிடம் ஒரு நிருபர் இது குறித்து கேட்டார். ‘ஒரு ஊடுருவல்காரரை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது. கோஸ்வாமி, பருவா, கலிதா, குமார் மற்றும் தாஸ் போன்ற பெயர்கள் இருந்தால், அவர்கள் இந்தியர்கள். ஹசன், அலி மற்றும் முஹம்மது ஆகியோரின் பெயர்கள் ஊடுருவியவர்களுக்கு சொந்தமானது. அதாவது, ஒரு கிராமத்தை காலி செய்ய…

Read More

டெல்லியில் உள்ள இரண்டு ஊடக நிறுவனங்களில் நடைபெற்ற அரசின் சோதனையானது, ஊடக உலகில் மிகுந்த கவலைகளை உருவாக்கியுள்ளதை, இந்திய ஆசிரியர் சங்கம் (Editors Gild pf India) சமீபத்தில் பகிர்ந்து கொண்டது. ஏனென்றால், இது சட்ட நடவடிக்கைகள் என்பதை விட , அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை முடக்குவதற்கும் அச்சுருத்துவதற்குமான நடவடிக்கையே ஆகும். நியூஸ் க்ளிக் மற்றும் நியூஸ் லோண்டி ஆகிய இணைய ஊடகங்கள் சமீபத்திய நாட்களில் மாரத்தான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நியூஸ் லாண்டரியில் வருமான வரி (ஐடி) அதிகாரிகளின் ‘சர்வே’ (ரெய்டு அல்ல!) நண்பகல் முதல் நள்ளிரவு வரை நீடித்தது. நியூஸ் கிளிக் தலைமை ஆசிரியர் பபீர் புரகயாஷ்டாவின் வீட்டில் 114 மணி நேரம் அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகளால் பரிசோதனை நடத்தப்பட்டது. அமலாக்க இயக்குநரகம் (ED) , வருமானவரித்துறை அதிகாரிகளால் இதற்கு முன்பும் மேற்படி நிறுவனத்தில் சோதனைகள் நடைபெற்றுள்ளது. நிதி முறைகேடுகள் குறித்துதான் சோதனைகள் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. ஆனால்…

Read More

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் (ICHR) ‘ஆசாதி க அம்ரித் மகாத்சவ்’ என்ற தலைப்பின் கீழ் கொண்டாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில் 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைகின்ற வரை சுதந்திரத்திற்காக வேண்டி எல்லாம் இழந்து போராடிய பல தியாகிகளை புறந்தள்ளிவிட்டு ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியத் தொகை பெற்று ஆங்கேலேயர்களின் செருப்பு நக்கியாக வாழ்ந்த, காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்படுவோம் என்றவுடன் பயந்து உண்ணா நோன்பிருந்து தற்கொலை செய்துகொண்ட, தனக்குத்தானே ‘வீர்’ பட்டத்தை சூட்டிக் கொண்ட கோழை சாவர்க்கரின் புகைப்படத்தை சேர்த்திருக்கிறார்கள். இந்தியாவின் வரலாற்றை முற்று முழுதாக காவி மயப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு சங்பரிவார் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்களுடைய இருப்பை நிலை நிறுத்துவதற்காக காலம் காலமாக வரலாறுகளை மாற்றியமைப்பது பார்ப்பனியம்…

Read More

இந்திய சுதந்திரத்திற்காக தங்களுடைய இருப்பின் சதவீதத்தை விட மிக அதிகமான உயிர், பொருள் தியாகங்களை செய்தவர்கள் முஸ்லிம்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் சூழல் மிக மோசமான ஒன்றாக மாறிவிட்டது. பிரிவினையும் பிரிவினையை தொடர்ந்து நடந்த கலவரங்களும்சரியான தூர நோக்கில்லாத தலைமைத்துவமும் முஸ்லிம்கள் வாழ்க்கையை மிகப் பெரும் சிக்கலுக்கு ஆளாகி விட்டன. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசாங்கமானாலும் மற்ற அரசுகளும் முஸ்லிம்களை ஒரு வாக்கு வங்கிகளாகவே பார்த்தார்கள். அவர்கள் வாழ்க்கைச் சூழலை மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதை குறித்தான கவலை அவர்களுக்கு இருக்கவில்லை. இந்த நிலையில்தான் 2005இல் மன்மோகன்சிங் தலைமையிலான ஒன்றிய அரசு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை குறித்து ஆய்வு செய்வதற்காக வேண்டி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில்2005 மார்ச் 9 அன்று ஒரு ஆணையத்தை அமைத்தது. ராஜேந்திர சச்சார்…

Read More

அரபிக்கடலில் அமைந்துள்ள அழகிய தீவுக்கூட்டம்தான் இலட்சத்தீவு. சேர மன்னன் சேரமான் பெருமானின் காலத்தில் இங்கு மக்கள் குடியேறி வாழ ஆரம்பித்ததாக பழங்கால நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தீவு தீப இலக்ஷம் என அழைக்கப்பட்டது. பிறகு திப்பு சுல்தானின் ஆளுகையின் கீழ் இத்தீவு நிர்வாகம் செய்யப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. 1956ல் சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு இந்திய ஒன்றிய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. மொழியியல் மற்றும் கலாச்சார ரீதியாக கேரளாவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இப்பகுதி மக்கள் மேல்மட்ட கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கேரளாவையே சார்ந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இங்குள்ள மக்கள் தொகை 64,473 ஆகும். 96.58% முஸ்லிம்களும், 02.77% இந்துக்களும் 00.49% கிருத்துவர்களும் இங்கு வாழ்கின்றனர். முதன்மை மொழி மலையாளம் ஆகும். ஆங்கிலம், இந்தி மற்றும் சில வட்டார மொழிகளும் பேச்சு வழக்கில் உண்டு. சுற்றுலா, மீன்…

Read More

அரபுக்களின் முட்டாள்தனமும் அறியாமையும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியும் இணைந்து அரபு மண்ணின் மையத்தில் திணிக்கப்பட்ட நாடுதான் இஸ்ரேல். நாடின்றி நாடோடிகளாக திரிந்து பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கத்தால் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் யூதர்கள். அதனது அழுத்தமான வெளிப்பாடுதான் ஹிட்லரின் ஜெர்மனியில் அரங்கேறியது. யூதர்கள் மீது கொடுமை செய்தவர்கள் ஐரோப்பியர்கள் அதாவது கிருத்தவர்கள். ஆனால், அக்கொடுமைகளுக்கு பின்னால் அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் அபகரிக்கப்ட்டு அளிக்கப்ட்டதோ பாலஸ்தீன மண் அதாவது முஸ்லிம்களின் மண். எந்த மண்ணில் யூதர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டதோ, எந்த மனிதர்கள் அவர்களுக்கு அடைக்கலம் அளித்தார்களோ அந்த மண்ணிற்கும் மனிதர்களுக்கும் கடும் பகைவர்களாகவும் கொடுமைக்காரர்களாயும் மாறிவிட்டனர் யூதப் சியோனிசப் பயங்கரவாதிகள். தியோடர் ஹேசில் என்ற சியோனிச பயங்கரவாதியின் மனதில் உதித்த திட்டத்திற்கு பிரிட்டனின் பால்மர் கொடுத்த வடிவம்தான் இஸ்ரேல். இது ஏதோ யூதர்களுக்கான அடைக்கலம் என்ற ஒற்றை வட்டத்திற்குள் அடங்கிவிடும் விஷயம் அல்ல. நூற்றாண்டுகளாய் தொடர்ந்து கொண்டிருந்த பகைமையின்…

Read More

குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணிகள் கலவரத்தில் முடிந்திருப்பது துரதிருஷ்டவசமானது. கடந்த 62 நாட்களாக வெட்டவெளியில் கடும் குளிர், பனி மற்றும் மழை , நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிரிழப்பு ஆகியவற்றை சகித்துக்கொண்டு அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திவந்த விவசாயிகள்மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி தாக்குதலும் நடத்திய தில்லி காவல்துறை கண்டனத்திற்குறியது. இந்த முன்னுதாரனத்தை நாம் தூத்துக்குடியில் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். ஏற்கனவே காவல்துறை சமூக விரோதிகள் பேரணியில் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக சொல்லியும் விவசாயிகளும் அதை பொருட்படுத்தவில்லை. விவசாயிகள் சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும்.காவல் துறையின் தாக்குதலுக்கு ஒரு விவசாயி உயிரிழந்திருக்கிறார் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை ஐ.டி ஓ அலுவலகம் மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகளை தடுக்கத்தவறியதன் மூலம் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிஇருக்கிறது. சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்திருப்பதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குற்றம்…

Read More

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவ்வூர் என்னுமிடத்தில் செயல்படும் ஹிரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் பீகார் மாவட்டத்தை சேர்ந்த 37 மாணவ–மாணவிகள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக வேண்டி கடந்த சனியன்று தொடர்வண்டியில் பயணம் புறப்பட்டு இருக்கிறார்கள். சென்னையிலிருந்து அவர்கள் வேறு தொடர் வண்டி மூலமாக பீகார் செல்லவேண்டும். ஆனால் அரசு திடீர் என அறிவித்த ஒருநாள் மக்கள் ஊரடங்கு மூலமாகவும் அதைத்தொடர்ந்து ரயில்வே அறிவித்த பணி முடக்கம் காரணமாகவும் அந்த பிள்ளைகள் சென்னையில் சிக்கிக்கொண்டார்கள். ஒரு வேளை உணவை மட்டும் அங்கே இருந்த ரயில் நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற அந்தச் சிறு பிள்ளைகள் உடனடியாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினுடைய மத்திய தலைமைக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அங்கே இருந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழக தலைமைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து SIO தமிழக…

Read More

எழுதியவர் : அப்துர் ரஹ்மான், சமூக ஊடகவியலாளர் 1987 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி இந்துத்துவ பயங்கரவாதிகள் மீரட்டில் நடத்திய கலவரத்தின்போது, 42 முஸ்லிம் இளைஞர்களைச் சுட்டுப்படுகொலை செய்த உ.பி மாநில சிறப்பு இராணுவப்படையைச் சேர்ந்த 16 சிப்பாய்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மீரட், பாகல்பூர் படுகொலைகள் குறித்தெல்லாம் சிறுவயதில் கேள்விபட்டிருப்போம். விரிவான தகவல்கள் அதிகம் பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இக்காலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்தும் படுபயங்கரமான அட்டூழியங்களை மிஞ்சும் வகையிலான அக்கிரமங்கள் இந்தியாவில் அக்காலத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. அதில் ஒன்றே மீரட் படுகொலை. 1986 ஆம் ஆண்டு பாபர் மசூதி சீல் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பதட்டம் ஆரம்பித்தது. இந்நிலை இரு சமூகத்தின் தலைவர்களுடைய உணர்ச்சி தூண்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டு 1987 மார்ச்சில் கலவரமாக வெடித்தது. ஜூன் மாதம் வரை தொடர்ந்த இக்கலவரத்தில் 390 பேர் படுகொலை…

Read More

திருவிழாக்கள் என்று சொன்னாலே மகிழ்ச்சிக்குரிய தினங்கள். ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு சிறு சிறு இனக் குழுக்களுக்கும் திருவிழாக்கள் உண்டு, பண்டிகைகள் உண்டு , பெருநாட்கள் உண்டு. இந்திய திருநாட்டிலே ஏராளமான மதச் சிறுபான்மையினர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஏராளமான சின்ன சின்ன குழுக்களை சார்ந்த பழங்குடியினர் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான திருநாட்களை, பண்டிகைகளை, பெருநாட்களை கொண்டாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த திருவிழாக்கள் என்பது பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய தினங்களாக  இருக்கின்றது. தங்களுடைய  குடும்பத்தாரை, சொந்த பந்தங்களை, உற்றார் உறவினர்களை சந்திப்பதற்குண்டான மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்குத்தான் திருவிழாக்கள் முக்கிய பங்கினை அளிக்கின்றன. ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னாலும், ஒவ்வொரு திருவிழாக்களுக்கு பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கின்றது. முஸ்லிம்கள் பெருநாட்களை கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ் பெருமக்கள் பொங்கலை ஒரு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பின்னால்…

Read More