Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்

மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு என்ற பெயரால் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்திலே மீண்டும் இரண்டாவது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 2021ல் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்டமன்றத் தீர்மானத்தை 142 நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனத்தை தொடர்ந்து இந்த புதிய தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது. ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்ற அண்ணாவின் பொன்மொழியை மீண்டுமொருமுறை தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ரவியின் செயல்பாடு நினைவுபடுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வு பெரும் விவாதத்தை அரசியல் அரங்கில் உருவாக்கியிருந்தது. இதற்கு எதிராக அதிமுக-பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். நீட் எதிர்ப்பு என்பதை கடந்து மாநிலங்களின் அதிகாரம், ஒன்றிய அரசின் அதிகாரத் திணிப்பு, ஃபெடரலிசம் தொடர்பான விவாதங்களின் பக்கம்…

Read More

கர்நாடகாவில் உடுப்பி அரசு பெண்கள் பியுசி கல்லூரியில் 11,12 வகுப்புகளில் படிக்கும் 8 முஸ்லிம் மாணவிகளை ஹிஜாப் – தலை முக்காடு அணிந்ததன் பெயரில் வெளியேற்றிய நிகழ்வானது நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற தன்மை எதிர்கொண்டு வரும் நெருக்கடியைத்தான் எடுத்துச் சொல்கிறது. கடந்த டிசம்பர் 27 அன்று சீருடையும் தலையில் ஹிஜாபும் அணிந்து கொண்டு வந்த மாணவிகளுக்கு சீருடையின் காரணத்தைச் கல்லூரியின் கதவுகள் அடைக்கப்பட்டன. தங்களது படிப்பை கைவிட தயாராக இல்லாத மாணவிகள் கல்லூரியின் கேட்டுக்கு வெளியே இருந்து படிக்க தீர்மானித்தனர். விஷயம் தீவிரம் அடைவதைக் கண்ட இந்துத்துவ பாசிச அமைப்புகள் தலையிட ஆரம்பித்தனர். அதிகாரிகளும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து கல்லூரியை மூடினாலும் மாணவிகளின் கோரிக்கை கீழ்ப்படிய மாட்டோம் என்ற முடிவை எடுத்தார்கள். தலை முக்காடு அணிந்ததன் பெயரில் மாணவிகளை வெளியேற்றிய நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது என கர்நாடகா துவக்க மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கல்லூரி முதல்வரிடம் அறிவித்தார். தற்போது கர்நாடக மாநிலத்தில்…

Read More

ஆட்சியும் அரசாங்கமும் விமர்சிக்கப்படுகின்றபோது அதனை நேர்மறையாக எதிர் கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களின் மதத்தையும் இனத்தையும் பிரச்சினைகளுக்கு உட்படுத்துவத்துவதை கவலையோடுதான் நாம் பார்க்க வேண்டும் பிறமத வெறுப்பும் வகுப்பு வாதமும் இனவெறியும் நிரந்தர நோயாக மாறிப்போன ஒரு மோசமான நிலைமையில்தான் இந்தியர்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனித உணர்வுகளை பாதிக்கக்கூடிய இந்தத் தீரா நோயின் பலன்தான் இனக் குருட்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களும் காதுகளும் உண்மையை அறிவதற்கோ சரியான தகவல்களை ஏற்றுக் கொள்வதற்கோ தயாராக இருக்காது. உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிராக குறைப்பார்கள். இருப்பதை எடுத்துச் சொல்பவர்களை ஏளனத்தோடு இழிவுபடுத்துவார்கள். பின் சத்திய காலத்தில் உண்மைகளுக்கு இடமில்லை என்றும் இனி வரும் காலம் பெரும் பொய்களின் காலம் என்றும் நிரூபிப்பார்கள். இந்த நோய் அரசாங்கத்தையும் ஊடகங்களையும் பாதித்தால் ஏற்படும் இன்னல்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும். கும்பல் படுகொலைகளுக்கும் இனவெறி தாக்குதல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கான கூச்சல்களுக்கும்…

Read More

முக்கியமான 5 மாநிலத் தேர்தல் போராட்டக் களத்தில் இருக்கின்றபோதும் மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கவும் கூட்டாட்சியை சிதைக்கவும் மோடி அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. புதிய ஒவ்வொரு சட்ட உருவாக்கத்தின் போதும் சட்டத் திருத்தங்களின் போதும் முழு அதிகாரத்தையும் புதுதில்லியில் மையப்படுத்துவதற்குண்டான முயற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நிதி ஒருங்கிணைப்பு என்ற ஊகமயமான பொருளாதார திட்டத்தை ஜிஎஸ்டின் ஊடாக உருவாக்கினார்கள். மாநிலங்களின் பொருளாதார உரிமையும் பாதுகாப்பும் ஒன்றியத்தின் அகங்காரத்தின் கீழ் அடிமைப்பட்டு போனதுதான் ஜிஎஸ்டின் ஊடாக நடந்தது. கூட்டுறவு துறைகளில் சட்டத் திருத்தம், வங்கி கட்டுப்பாட்டு திருத்தம், NIA சட்டத்திருத்தம் போன்ற சமீப காலத்தில் சங்பரிவார் அடுப்பங்கரையில் வேகவைத்து எடுத்ததும் வெந்து கொண்டிருப்பதுமான ஒட்டுமொத்த சட்டங்களும் கூட்டாட்சிக்கு வேட்டு வைப்பதுதான். இதோ, இப்போது இந்திய ஆட்சியியல் சேவை துறையான IAS (கேடர்) சட்டப்பிரிவு 6ல் திருத்தங்களைச் செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். ஜனவரி 25க்கு முன்பாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கருத்துக்களை கேட்டு ஒன்றிய அரசு அனுப்பிய…

Read More

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளை குறித்து  உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டுஒன்றிய மாநில அரசுகளுக்கும் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றங்களுக்கும் சிலஉத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேற்படி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் விஷயத்தில்பல்வேறு கருத்து முரண்பாடுகள் உருவாகி உள்ளது. பஞ்சாப் மாநில அரசின் தவறு என்றுஒன்றிய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் வழக்கமாகச் செய்யும் தேர்தல்நாடகம் என பஞ்சாப் மாநில அரசும் பிற எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.ஜாப் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் இவ்விஷயத்தை தங்களுக்குசாதகமாக மாற்றி பிரச்சாரம் செய்வதற்காக பாஜக முதலில் முனைப்பு காட்டியது. ஒன்றியஅரசும்பஞ்சாப் மாநில அரசும் தனித்தனியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். அவ்விசாரணைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரதமர் இரண்டு மணி நேரம் சாலை வழியாக பயணம் செய்வதற்கு முடிவு எடுத்தது யார்?, அதற்கு என்ன காரணங்கள்?, ஹெலிகாப்டர் பயன்படுத்த வேண்டாம் என இறுதி நிமிடத்தில் முடிவு எடுக்க என்ன காரணம்?, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவின்,…

Read More

சமூக ஊடகங்களில் தொடர்ந்து தங்கள் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்நாட்டிலுள்ள நூற்றுக்கும் அதிகமான பிரபல முஸ்லிம் பெண்களை ஏலத்திற்கு விட்ட ‘புல்லி பாய்’ என்ற பெண் விரோத, துவேச ஆப்பினுடைய விஷயத்தில் 2 விசாரணைகள் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறது. முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் உத்தரகாண்டைச் சேர்ந்த ஸ்வேதா சிங்கை மும்பை சைபர் காவல்துறை கைது செய்திருக்கிறது. பிறகு அசாம் ஜோர்ஹர்ட்டை சேர்ந்த பொறியியல் மாணவன் நீரஜ் பிஷ்னோய்தான் இந்த ஆப்பை உருவாக்கியதில் முக்கியமானவன் என டெல்லி காவல்துறை குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. உத்தரகாண்டில் இருந்து மாயங்க் அகர்வால் என்ற 21 வயது இளைஞனையும் பெங்களூருவில் இருந்து விஷால் குமார் என்ற பொறியியல் மாணவனையும் மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்து விசாரணையை அதிவேகமாக முன்னெடுத்துக் கொண்டு சென்றுள்ள நிலையில்தான் அதுவரைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்த டெல்லி காவல்துறை தற்போது களத்தில் இறங்கியுள்ளது. ‘ புல்லி பாய்’க்கு பின்னால் இருந்து செயல்பட்டது…

Read More

புதிய வருடம் காலடி எடுத்து வைக்கின்ற போது மீண்டும் ஒரு கொள்ளை நோயின் மேகங்களால் உலகம் இருள் மூடிக் கிடக்கிறது. கோவிடின் மற்றொரு வடிவமான ஓமைக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. தினந்தோறும் வரும் செய்திகளின் அடிப்படையில் நமது நாடும் அதிலிருந்து விதிவிலக்கல்ல என்றே தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களில் நடந்ததைப் போன்றதொரு ஊரடங்கை நோக்கித்தான் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகமே கிராமம் ஆகிப்போன உலகமயச் சூழலில் எங்கேனும் ஒரு சிறு தேசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் உலகம் முடங்கிப் போகும் சூழல்தான் தற்போது உள்ளது. இப்புது வருடத்திலும் மனித சமூக முன்னேற்றத்தில் ஓமைக்ரான் ஒரு தடைக்கல்லாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இச்சூழலில் நம்மால் முடங்கிப் போய்விட முடியாது, முன்னேறிச் சென்றே ஆகவேண்டும். மனித அறிவின், தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வெகுவிரைவாக இந்த கொள்ளை நோய் விரட்டியடிக்கப்படும் என்ற விஷயத்தில் எவ்வித ஐயமுமில்லை. அந்த வழியில் அறிவியல் உலகம் வெகுதூரம் பயணப்பட்டு…

Read More

இஸ்லாம் அல்லது முஸ்லிம் சமூகம் தன் நிலையிருந்து கீழ் நோக்கி பயணிக்கின்ற போது அதனை அதனுடைய உண்மையான இடத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த உலகத்தில் பல்வேறு அறிஞர்களும் தலைவர்களும் பாடுபட்டுள்ளனர். உமர் இப்னு அப்துல் அஜீஸ் துவங்கி சஹீத் ஹசனுல் பன்னா, சைய்யது அபுல் அஃலா மௌதூதி வரை அந்த பட்டியல் மிக நீளமானது. இந்த முஜத்திதுகள் மேற்கொண்ட தஜ்தீத் வேலைகளின் காரணத்தினால்தான் இஸ்லாம் இன்னமும் உயிர்த்துடிப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சஹீத் ஹசனுல் பன்னா, சைய்யது அபுல் அஃலா மௌதூதி மற்றும் சஹீத் செய்யது குதுபின் சிந்தனை நீட்சிகள்தான் இன்றைய நவீன இஸ்லாமிய உலகை, அறிஞர்களை ஆட்கொண்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் தஜ்தீத் – மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தேசச் சூழல்களுக்கு தக்கவாறு அவைகள் திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. ராஷிதுல் கனூஷி, சயீது ரமலான், சங்கீதி, எர்துகான் போன்ற…

Read More

காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்ற தொகுதி மறு நிர்ணயம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொகுதி மறு நிர்ணய ஆணையம் சமர்ப்பித்த தலைகீழான தொகுதி நிர்ணய பரிந்துரைகள் கஷ்மீரில் பரவலான எதிர்ப்பை உருவாக்கியுள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 370ஐ நீக்கி, மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை முடக்கியதுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது மட்டுமின்றி, மாநிலத்தின் சட்ட மற்றும் கலாச்சார தனித்துவத்தை அழிக்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமைப்பு சட்டபூர்வமான அந்தஸ்தை ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்காமல் இருக்க முடியாது என்பதை நன்றாக அறிந்து கொண்டுள்ள ஒன்றிய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் தருகின்ற பொழுது அதன் ஆட்சி கட்டிலில் பாஜக அமர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டுதான்…

Read More

“புதிய வரலாறு உருவாகிறது. சுல்தான்களின் பரம்பரைகள் இங்கே உருவானது. இல்லாமலும் போனது. ஆனால் பனாரஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் இந்த நகரத்தை ஆக்கிரமித்தார்கள். அழிக்க முனைந்தார்கள். அவுரங்கசீப்பின் கொடூரங்களை, குற்றங்களை வரலாறு அறியும். வாளின் மூலம் நம் கலாச்சாரத்தை அழிக்க அவர் முயற்சித்தார். ஆனால், ஒரு அவுரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் இங்கே உதயம் கொள்வார்.” 800 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்படும் காசி விஸ்வநாதர் ஆலயமும் கங்கை நதியும் ஒருங்கிணைக்கும் படித்துறையின் புதிய கட்டமைபை துவங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி செய்த சொற்பொழிவின் சுருக்கம் தான் மேலே உள்ள வரிகள். அனைத்து ஆச்சார முறைகளையும் முழுமையாக செய்து கங்கா நதியில் குளித்து (ஸ்நானம்) பூஜைகளை செய்த பிறகு, மோடி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் தலைவர் ஜே பி நட்டா முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான துறவிகள் முன்னிலையில் மேற்படி நிகழ்வை துவக்கி…

Read More