Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்

மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

கடந்த வார ஆரம்பத்தில் ஒரு உக்ரேனிய பெண் ரஷ்யாவின் படை வீரர்களை எதிர்த்து நிற்பது போல் திரித்து சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது நிஜத்தில் அந்த வீடியோவில் இருந்தது அப்போது பதினோறு வயதே ஆகியிருந்த அஹத் தமீமி, தன்னுடைய தாய் மண்ணை ஆக்கிரமிக்க வந்த இஸ்ரேலிய படைவீரரை எதிர்த்து நின்ற ஒரு குழந்தைதான் அவள். இதோ அவளின் கதை… அஹத் தமீமி சட்டவிரோதமாக இஸ்ரேலின் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நபி சாலிஹ் எனும் மேற்குக்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பாலஸ்தீனிய கிராமத்தில்தான் வளர்ந்தால். அவளின் சிறு வயதிலேயே இஸ்ரேலிய ராணுவத்தினரால் அவளின் சமூகம் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது அவர்களின் வாழ்வாதாரமான நன்னீர் ஓடைகள் முடக்கப் படுதல் மற்றும் அவளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாகி வந்துள்ளனர். எல்லா பாலஸ்தீனியர்களையும் போலவே, இஸ்ரேலால் மீண்டும் மீண்டும் அஹத்தின் குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டனர் மற்றும்…

Read More

இன்று சர்வதேச மகளிர் தினம். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் ஒதுக்கப்படுவது போல பெண்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மனித சமூகத்தில் சரிபாதி பெண்கள். பெண்களை தவிர்த்துவிட்டு, ஒதுக்கிவிட்டு சமூக முன்னேற்றம் என்பது கற்பனையான ஒன்றே. அவர்களுடைய இயல்பின் அடிப்படையில் அவர்களுக்கான முழுமையான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து தளங்களிலும் அவர்கள் அவர்களுக்கான இடம் அளிக்கப்பட வேண்டும். அவருடைய கரங்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும். சம காலகட்டத்தில் கல்வியில் பெண்கள் பெருமளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. குறிப்பாக தென் மாநிலங்களில், அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில். கல்வி, விஞ்ஞானம் தொடர்பான துறைகளில் பெரும் சாதனையாளர்களாக, கல்வியாளர்களாக பெண்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொருளாதாரம், அரசியல், சமூகம் போன்ற தளங்களில் பெண்கள் பங்களிப்பு போதிய அளவில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் மற்றும் தலித் பெண்கள் இவ்வாறான விஷயங்களில் மிகவும் பின்தங்கியே…

Read More

மூன்றாவது முறையாக ‘ஜனநாயக முறையில்’ சர்வாதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற ‘புகழுக்குரிய’ ரஷ்யாவின் ‘குடியரசுத் தலைவர்’ விளாடிமிர் புடின், சுதந்திர ஜனநாயக நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க கூடிய நேரத்தில் வெளிவந்துள்ள ஒரு ஆய்வு அறிக்கை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்வீடனில் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள வரைட்டீஸ் ஆஃ டெமோக்ரசி (வி – டெம்) என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட டெமோக்ரசி ரிப்போர்ட் 2022 அறிக்கையில் ஏகாதிபத்தியத்தின் முறையும் செயல்பாடுகளும் மாறி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் தங்களது அதிகார பலத்தால் உலகத்தை மென்மேலும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். 180 நாடுகளில் உள்ள 3700 நிபுணர்கள் 300 இலட்சம் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை தயார் செய்துள்ளனர். இதில் கடந்த பத்தாண்டுகளில் உலகில் ஜனநாயக முறைமைகளுக்கு ஏற்பட்ட மோசமான மாற்றங்களும் அதன் மூலம் உருவான தீய விளைவுகளையும் எடுத்துச் சொல்லி…

Read More

சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் முதல்முறையாக ஆர் பிரியா என்ற தலித் சமூகத்தை சேர்ந்த 29 வயது இளம்பெண் மேயராக பதவி ஏற்றுள்ளார். முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேயராக இருந்த நாற்காலியில் புராதன வட சென்னை பகுதியைச் சார்ந்த சகோதரி அமரப் போகிறார். இந்திய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மேயராக ஒரு தலித் பெண் பொறுப்பு ஏற்பது என்பது நிச்சயமாக திராவிட அரசியலின் மிகச்சிறந்த பங்களிப்புதான். இன்றைக்கு இந்தியாவில் விவாதத்திற்கு ஆளாகி வரும் திராவிட அரசியல் அஜண்டாவின் முன்னெடுப்பாகத்தான் இவற்றை காண வேண்டும். முரண்களும் விவாதங்களும் இருப்பினும் தமிழ்நாட்டில் முன்னிலைப்படுத்தப்படும் சமூக நீதியின் தொடர்ச்சியாகத்தான் ஆர். பிரியா உள்ளிட்ட தலித் சமூக மக்களின் முன்னேற்றத்தை நாம் அவதானிக்க வேண்டும். தீவிர வலதுசாரி அரசியலுக்கு எதிரான மாற்று அரசியல் முன்னெடுப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதற்குண்டான செய்தியும் இதில் அடங்கியிருக்கிறது. அனைத்து சமூக மக்களுக்கும் அரசியல்…

Read More

இனப்படுகொலையின் இருபதாண்டுகள்: இந்தியாவும் குஜராத்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய, பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கிய, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குஜராத் இனப்படுகொலையை ஒரு கலவர நிகழ்வாக மட்டுமே நம்மால் பார்க்க இயலாது. அதற்கும் அப்பால் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்தையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றி அமைத்த ஒரு வரலாற்று பேரழிவு நிகழ்வாகவே அதை நாம் பார்க்க வேண்டும். பன்முகச் சமூகம், மதச்சார்பற்ற இந்தியா என்ற தத்துவத்தின் ஆத்மாவை அசிங்கப்படுத்திய ஒரு நிகழ்வு நடந்து இருபதாண்டு கடந்திருக்கிறது. 2002 பிப்ரவரி 27 அன்று சில கயவர்களால் கோத்ராவில் வைத்து சபர்மதி எக்ஸ்பிரஸில் தீ வைக்கப்பட்டது. அதில் அயோத்தியில் இருந்து குஜராத்திற்கு வந்துகொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர் இறந்தார்கள். அதைத்தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் குஜராத் மாநிலம் முழுவதும் கலவரம் மூண்டது. அவை அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களாகவே இருந்தது. குஜராத்தில் உள்ள 26 மாவட்டங்களில்…

Read More

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் உடனான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சந்திப்பு தேசிய அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி உள்ளது. பாசிச பாஜக அரசை ஒன்றியத்திலிருந்து மாற்றவில்லை என்று சொன்னால் நாடு நாசமாக போகும் என்ற முன்னறிவிப்புடன் சந்திரசேகர ராவ் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார். சென்ற முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசை ஆதரித்த சந்திரசேகர் ராவ் இப்போது அவர்களுக்கு எதிராக படை திரட்டுவது குறிப்பிடத்தக்கது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முனைப்போடுதான் ராவ் களமிறங்கி உள்ளார் என அவரது கட்சியினர் கூறுகிறார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முடிவு மார்ச் 10 அன்று வெளியாகும். அப்போது உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் பாஜகவிற்கு பலத்த அடி விழும்…

Read More

உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நேற்று உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார். “நேற்று ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசினேன். மௌனம்தான் பதிலாக இருந்தது. அதனால்தான் நான் ரஷ்ய மக்களிடம் உரையாற்றுகிறேன். நாம் 2,000 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரு அண்டை நாடுகள். அதன் எல்லையில் இரண்டு லட்சம் ராணுவ வீரர்களும், ஆயிரம் கவச வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆட்சியாளரை வேறொரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாட்டிற்குள் செல்ல அனுமதித்துள்ளீர்கள். இது ஒரு பெரிய போரின் தொடக்கமாக இருக்கும். இந்தப் போருக்கு எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். தூண்டிவிடப்படும் ஒரு தீப்பொறி, அது எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கும். அந்த நெருப்பு உக்ரேனிய மக்களுக்கு சுதந்திரத்தை அளிக்கும் என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். உக்ரேனிய மக்கள் இப்போதும் சுதந்திரமாகவே உள்ளனர். நாங்கள் நாஜிகள் என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். நாஜிகளுக்கு எதிராக எண்பது இலட்சம் உயிர்களை தியாகம் செய்த ஒரு நாடு எப்படி நாஜிகளை ஆதரிக்க முடியும்?…

Read More

தஞ்சாவூர் மைக்கேல் பட்டியில் கிறுஸ்துவ பள்ளி ஒன்றில் படித்து வந்த அரியலூரின் மாணவி பள்ளியின் நிர்வாகி மதம்மாறவேண்டும் என்று வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார். எனவே தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர் இதே கோரிக்கை மீண்டும் வேறு நிகழ்ச்சிகளை காரணம் காட்டி எழுப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன் திருமதி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் (அக்டோபர் 2002) ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ கொண்டுவரப்பட்டது. கடும் எதிர்ப்புகளினால் அச்சட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஓராண்டிற்குப் பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் கர்நாடக மாநிலத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்துடன் ஒன்பது மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. மதமாற்றத்திற்கு தடை வேண்டும் என்று கோறுபவர்கள் கூறும் காரணம் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதுதான். சட்டம் இருந்தால் தான் மதமாற்றத்தை தடுத்து நிறுத்த முடியும் என்கிறார்கள். பாஜக கட்சி ஆட்சியில் இருக்கும்…

Read More

அகமதாபாத் நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்பூர்வமான இனப்படுகொலை. ————————————————- ——- சங்பரிவாருக்கு ஆதரவான சமூக சூழ்நிலையை உருவாக்குவதற்காக முஸ்லிம்களை பலிகடாவாக்கும் பல நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதல்கள், உடனடியாக தயாரிக்கப்படும் குற்றவாளிகளின் பட்டியல், கைதுகள், பயங்கரவாதச் சட்டங்களைத் திணித்தல், நீண்ட விசாரணைகள், ஜாமீன் மறுப்பு போன்ற விஷயங்கள் மிகத் திறமையான திரைக்கதைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அவற்றிற்கான உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லாமலேயே. இறுதியில் தீர்ப்பு வரும்போது, சிலர் தண்டிக்கப்படுவார்கள், பலர் விடுவிக்கப்படுவார்கள். இதுதான் காலா காலமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த பாசிச விளையாட்டில் அப்பாவி கைதிகளும், அவர்களது உறவினர்களும், பாசிசத்தின் அதிகார பசிக்காக பலியான அப்பாவி மக்களும், அவர்களது உறவினர்களது வாழ்க்கையும்தான் இறுதியில் சீரழிந்து போகும். எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் சங்பரிவார் உருவாக்கிய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு முதல் எத்தனை, எத்தனை மனிதர்கள் இவ்வாறு பலி செய்யப்பட்டுள்ளனர். மதானியும், ஜக்கரியாவும், சித்திக் காப்பனும், உமர்…

Read More

கர்நாடகாவில் உருவான ஹிஜாப் பிரச்சனையொட்டி இந்தியாவில் நடந்து வரும் செயல்பாடுகளை கண்டித்தும் விமர்சித்தும் டிவிட் இட்ட அமெரிக்க தூதரை கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். இயல்பானதும் கூட. மதச்சுதந்திரம் தொடர்பான விஷயத்தில் அமெரிக்காவின் சர்வதேச தூதராக இருக்கும் ரசாத் ஹுசைன், ஹிஜாப் தடை என்பது மதச் சுதந்திரத்தின் மீதும் பெண்களின் மீதும் நடைபெறும் வரம்பு மீறல் என குறிப்பிட்டிருந்தார். இதைக் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி அரிந்தம் பக்ஷி, விஷயம் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது என்றும் இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளும் அமைப்புச் சட்டமும் இவ்விஷயத்தை உரியமுறையில் கையாளும் என்றும் பதிலளித்தார். இந்திய நாட்டின் உட் பிரச்சினைகளை குறித்து வெளியிலிருந்து அறிக்கைகள் அளிப்பது சரியானதல்ல என்றும் அவர் கூறினார். அதிகாரப்பூர்வமான இடத்தில் இருந்துகொண்டு அளிக்கும் பதில் என்பதால் அது இப்படித்தான் இருக்கும். அதே நேரத்தில் அந்த அலுவலரின் பதிலில் பல…

Read More