ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டத்தை (Armed Forces (Special Power) Act 1958- AFSA) வடகிழக்கு பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதற்காக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முயற்சிகள் வரவேற்புக்குரியது. அப்பகுதிகளில் நிலைமைகளை மேம்படுத்த அரசு எடுத்துவரும் முயற்சிகள் பலனளிக்கும் பட்சத்தில் இப்பகுதிகள் முழுமையாகப் அஃப்சாவிலிருந்து விடுவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘பிரச்சினைக்குரிய பகுதிகள்’ என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் ஆயுதப்படைக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரத்தை அளிக்கும் அஃப்சா சட்டம் செயல்படுத்தப்பட்டதால் சொல்லணா அக்கிரமங்களும் மனித உரிமை மீறல்களும் அரங்கேறின. இதற்கு எதிராக பெரும் விமர்சனங்களும் எழுந்தன. ‘சட்டங்களுக்கு கட்டுப்படாத சட்டம்’ என குறிப்பிடப்பட்ட அஃப்சா சட்டத்தை திரும்ப பெற பலமுறை முயற்சிகள் நடந்த போதிலும் ராணுவத்தில் உள்ள லாபிகளும், அரசியல் தலைமைகளின் சுயநல விருப்பங்களுமே இதற்கு இதுவரை பெரும் தடையாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு நாகாலாந்தில் லோன் மாவட்டத்தில் ராணுவத்தால் 15 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.…
Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்
“கோட்சேவை தெய்வமாக கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 20 முதல் குஜராத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இனக்கலவரங்கள் நடந்த ஹிம்மத் நகர், கம்பத் போன்ற இடங்களில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அவரிடத்தில் கேட்டுக் கொள்கிறேன். இது மகாத்மாவிற்கு கோவிலைக் கட்டியவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் மிகச்சிறிய செயல்”. குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட ட்விட்டர் செய்தி இது. இது நமது நாட்டில் பலரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல் விமர்சனத்தின் தொடர்ச்சி மட்டுமே. ஆளுபவர்களை இதை விடவும் கடுமையான சொல்லாடல்களால் விமர்சித்த வரலாறு பாஜகவிற்கு உண்டு. அச்சுறுத்தல் நிறைந்த இக்காலகட்டத்திலும் சங்பரிவாரின் கோட்சே மீதான காதலை சங்பரிவார் விமர்சகர்கள் எப்போதும் சுட்டிக்காட்டிக் கொண்டேதான் உள்ளார்கள். ஆனால், இந்த வரலாற்று உண்மைகளை உரத்துச் சொல்வது என்பது நரேந்திர மோடி கட்டமைத்துக் கொண்டிருக்கும் புதிய இந்தியாவில் குற்றச் செயல்களாக பார்க்கப்படுகிறது. ஜிக்னேஷ் மேவானி மீதான தொடர் கைதுகள் அதைத்தான்…
ஆர் எஸ் எஸ் – பாஜக அஜண்டாவில் உள்ள குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை, ராமர் கோவில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடைமுறைப்படுத்திய பிறகு, அதன் அடுத்த கட்டமான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குண்டான முனைப்பில் ஒன்றிய – மாநில பாஜக அரசுகள் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெறுவது என்ற ஒற்றை நோக்கோடும் முஸ்லீம் சமூக இன அழிப்பின் ஒரு பகுதியாகவும்தான் மேற்சொன்ன சட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது. இப்போது பொது சிவில் சட்டம் நோக்கிய நகர்வுகள் முனைப்பு காட்டப்படுவதும் அதே நோக்கோடுதான். இவ்வருட இறுதியிலும் 2023லும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களும் 2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலும் கவனத்தில் கொண்டுதான் நீண்ட நெடுங்காலமாக சங்பரிவார் கும்பல் வலியுறுத்தி வரும் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விவாதங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பாஜக ஆளும் உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ள அம்மாநில …
தியாகத்தின், சகோதர வாஞ்சையின், நீதியின் அடையாளமாக இந்துத்துவ சக்திகளால் கொண்டாடப்படும் இதிகாச நாயகன் ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் ராமநவமி. வட இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ராம நவமியின் போது கலவரங்களும் அக்கிரமங்களும் தாக்குதல்களும் சமீப காலமாக நடைபெற்றதாக பதிவுகள் ஏதுமில்லை. ஆனால் இவ்வருடம் ராமனின் பெயரால் கொண்டாடப்படும் ராம நவமி கொண்டாட்டங்கள் வன்முறை நிகழ்வுகளாக மாற்றியமைக்கப்பட்ட செய்திகள்தான் வெளிவந்துள்ளது. மத்திய பிரதேசம் குர்கானில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்து தகர்த்து விட்டார்கள். கலவரத்திற்கு முஸ்லிம்கள்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டித்தான் இந்த அழிவு நடவடிக்கையை அவர்கள் கைமேற்கொண்டுள்ளார்கள். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடுதான் இந்த நடவடிக்கை நடைபெற்றுள்ளது. மும்பையில் மாங்குர்தில் இனவெறி தாக்குதலால் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகர்க்கப்பட்டது. இரவு நேர தொழுகையின்போது ஒரு பள்ளிக்கு முன்பாக சங்பரிவார் கும்பலைச் சேர்ந்த சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சலிட்டனர். அதைத்…
இந்தியாவின் கல்வி பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். மிகச் சிறந்த கல்வியாளர்களை, சமூகவியல் நிபுணர்களை, தத்துவவாதிகளை உலகுக்கு அளித்த ஆகச் சிறந்த கல்வி நிறுவனம். உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அபுல்கலாம் ஆசாத்தின் கனவுகளை சுமந்து பெரும்பெரும் கல்வியாளர்களால் வடிவமைக்கப்பட்ட நிறுவனம் அது. ஆனால் இன்றைக்கு அந்நிறுவனம் சங்பரிவார்க் கும்பலால் பெரும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதனுடைய நிர்வாகக் கட்டமைப்பிலும் கல்விக் கட்டமைப்பிலும் இந்துத்துவவாதிகளை புகுத்துவது முதல் தாக்குதல். இரண்டாவதாக அதனுடைய கல்வி அமைப்பில் மாற்றங்களை புகுத்துவது. சமூகத்தின் அடித்தட்டில் உள்ள திறமையான மாணவர்களும் படிப்பதற்கான வாய்ப்பு JNUவில் இருந்து வருகிறது. அதை தடுக்கும் வண்ணமாக நுழைவுத் தேர்வை புகுத்தியதுடன் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளில் பெறும் குறைவை ஏற்படுத்தியது மூன்றாவது தாக்குதல். அதையும் கடந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், குறிப்பாக இந்துத்துவ…
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் இந்தியா இருந்த பொழுது 1920லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட சிறைவாசிகள் அடையாள சட்டத்தை திரும்பப் பெற்று, தற்போது குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022 நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை துணை அமைச்சர் அஜய் மிஸ்ராவால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. முறையான காரணம் இருப்பினும் காரணம் இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்ட ஒருவரது விரல் அடையாளம், கை அடையாளம், கால் அடையாளம், உயிரியல் மாதிரி உள்ளிட்டவைகளை சேகரிப்பதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கும் சிறை அதிகாரிகளுக்கும் அளிப்பதுதான் இந்த சட்டம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட உடன் நடைமுறைக்கு வரும். நூற்றாண்டுகளுக்கு முன்பு குற்றத்தை நிரூபிக்க பழமையான முறைமைகள் மட்டுமே நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் காலாவதியாகிவிட்டது என்றும் அதிநவீன உலகில் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி குற்ற விசாரணையை நடத்தவும் குற்றத்தை நிரூபிக்கவும் வேகமான, அறிவியல்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம் எனவும் ஒன்றிய அரசு கூறுகிறது. இது சரியான…
பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்தும் ஒன்றிய அரசு, இப்போது அத்தியாவசிய மருந்துகளின் விலையை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சையையும் சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது. ஏப்ரல் 1 முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஒரேயடியாக உயர்த்தி உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் தேசியப்பட்டியலில் (என்.எல். இ.எம்) உட்படுத்திய, விலை நிர்ணய அதிகாரம் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட மருந்துகளுக்குத்தான் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்.பி.பி.ஏ) 10.7 6 சதவீதம் விலை உயர்வை அறிவித்துள்ளது. பாராசிட்டமால், அசித்ரோமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள், வேதனை குறைப்பான்கள், நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள், இதயம், ஈ என் டி மருந்துகள், ஆன்டி-செப்டிகுக்கள் உட்பட சர்வ சாதாரணமான பயன்பாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மருந்துகளும் இந்த விலை உயர்வு பட்டியலில் உள்ளன. ஒன்றிய தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில், உட்கட்டமைப்பு துறையின் பொருளாதார ஆலோசகரின் அலுவலகம்தான் இந்த விலை உயர்வை தீர்மானித்துள்ளது.…
ஆப்பிரிக்க தேசங்களில் கதைகளாய் வந்துகொண்டிருந்த நிகழ்வுகள் இதோ அண்டை நாடான இலங்கையில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. இப்படியும் நடக்குமா என்று எண்ணி போகும் அளவிற்கு இலங்கையின் சூழல்கள் மாறிக்கொண்டிருக்கிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற இலங்கை இன்றைக்கு அதன் வரலாற்றில் மிக மோசமான கால கட்டங்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்களின் வாழ்க்கை தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட காலகட்டத்திற்குப் பிறகு இலங்கை தமிழ் மக்கள் அகதிகளாக இந்திய மண்ணிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் பெரும்பாலானோர் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். பணம் இருப்பவர்களுக்கு பொருட்கள் கிடைக்க முடியாத நிலைமை. உணவுப் பொருள்கள், எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், மருந்து போன்றவைகளெல்லாம் கிட்டாக்கனியாக, எட்டாச் சரக்காக மாறியிருக்கிறது. கல்வி வளாகங்களில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், வரலாற்றில் எங்கும் காணப்படாத காரணம். ஆம், தேர்வு எழுத காகிதங்கள் இல்லை. பெரிதான…
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அதாவது தலை முக்காடு அணிந்து வருவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவிற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ருதுராஜ் அவஸ்தி தலைமையிலான குழு தள்ளுபடி செய்திருக்கிறது. மேலும் ஹிஜாப் என்பது இஸ்லாம் மதத்தில் கட்டாயமல்ல என்றும் கூறியிருக்கிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது இயல்பானதும் கூட. இறைத்தூதரின் காலகட்டம் முதல் இன்று வரை உள்ள இஸ்லாமிய மத தலைமையும் அறிஞர்களும் கட்டாயம் என்று சொல்லியுள்ள ஒரு செயல்பாட்டை, ஹிஜாபை இஸ்லாத்தின் தவிர்க்கவியலாத ஒரு செயல்பாடு அல்ல என பத்வா கொடுத்துள்ளார் மௌலானா அஸ்வதி. மத நம்பிக்கைகளுக்கும் அதன் அடிப்படையிலான செயல்பாடுகளுக்கும் ஆச்சாரங்களுக்கும் முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25ஆம் பிரிவுக்கு எதிரானது கர்நாடக அரசின் உத்தரவு என…
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த கவலையை விட அந்த முடிவுக்கு பிறகு நாட்டில் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்துதான் மக்கள் கவலைப்படுகிறார்கள். தேர்தலை ஒட்டி பெட்ரோல் டீசல் விலை சிறிதளவு கூட அதிகரிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு என்னவாகும் என்பது பெரும் கவலையாக மாறியுள்ளது. நாளை முதல் அதிகரிக்கப் போகும் பெட்ரோல் டீசல் விலையும் வரிகளும் பெரும் சிக்கலை இந்திய மக்களின் வாழ்க்கையில் உருவாக்கப் போகிறது. பெட்ரோல் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார்கள் இடம் கொடுத்ததன் மூலம் சதத்தை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது பெட்ரோல் டீசல் விலை. இதன்மூலம் தனியார் நிறுவனங்களும் அரசும் மக்களிடத்தில் பெரும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் தலையிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என ஒன்றிய அரசு கூறினாலும் தேர்தல் காலங்களில் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டது எவ்வாறு…