Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்

மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனைகளின்’ பின்பலத்தில், மக்கள் நல அரசியலின் முழக்கங்களின் ஊடாக உருவானதுதான் இந்தியா எனும் நமது நாடு. கால ஓட்டத்தில் ‘சத்திய சோதனைகளின்’ பாதை அசத்தியத்தின் இராஜபாட்டையாக மாறிவிட்டது. மக்கள் நல அரசியல், சில ஆதிக்க சக்திகளின் சுயநல அரசியலாக மாறிவிட்டது. அதன் பலனை இந்த நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உண்மைகளை பொய்களாக்கி, உணர்வுகளை மட்டுமே மையமாக்கி மக்களை ஏமாற்றும் பின் சத்தியக் காலம் (Post Truth era) இது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ஜே பி நட்டா, எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பது என்ற பேரில் அவர்கள் நாட்டை எதிர்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில், மோடி அரசின் குறைபாடுகள் கொண்ட கொள்கைகளையும் தோல்விகளையும் விமர்சிப்பதையெல்லாம் தேச துரோகமாக சங்பரிவார் கும்பலும் பாசிச பாஜகவும் கட்டமைத்து வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும்…

Read More

‘ஒரு நாடு.. ஒரு வரி..’ என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை முன்வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் – ஜூலை 1 2017 அன்று – நரேந்திர மோடி அரசு நடைமுறைப்படுத்திய சரக்கு சேவை வரி (GST) முறைமை பெரும் தோல்வியாக மாறிவிட்டது. பெரும் தோல்வி மட்டுமல்ல, அது இந்த நாட்டுக்கு சுமையாகவும் சூழ்ச்சியாகவும் மாறிவிட்டது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஒரு பக்கம் ஜி எஸ் டியை நடைமுறைப்படுத்துவதில் பெரும் குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கிறது. பல ஆடிட்டர்களும் தெளிவில்லாமல் புலம்பி கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் அறிவுபூர்வமற்ற பல முடிவுகள் எடுக்கப்பட்டு மக்களின் மீது ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்டிகரில் நடைபெற்ற 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் மாநில அரசுகளையும் மக்களையும் பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எவ்வித அடிப்படை காரணங்களும் இல்லாமல் வரி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சில உணவுப்…

Read More

ஸகியா ஜாஃபரியின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ‘மிகவும் துரதிஷ்டவசமானது’ என்று சொல்வதற்கு கூட தகுதியற்ற ஒன்றாக உள்ளது. 2002இல் குஜராத் இனப்படுகொலையின் போது அகமதாபாத் குல்பர்க் சொசைட்டியில் சங்பரிவார் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி இஹ்சான் ஜாஃபரி உள்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இப் படுகொலையில் அன்றைக்கு குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்பட அறுபத்தி மூன்று பேருக்கு உள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவைதான் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக முன்பு உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணை குழு (எஸ் ஐ டி) அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, ரவிக்குமார் ஆகிய நீதிபதிகளை கொண்ட இருக்கை தீர்ப்பளித்துள்ளது. (அந்த தீர்ப்பில் அவர்கள் யாரும் கையெழுத்து போடவில்லை என வரும் செய்தி உண்மையாக இருந்தால், அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமான முறையில்…

Read More

குற்றவாளிகளின் இறுதி அடைக்கலம் (resort) அரசியல் என்ற சொல்வழக்கு உள்ளது. இது இந்திய அரசியலை மையப்படுத்தி சொல்லப்பட்ட ஒன்றல்ல எனினும், சமீப காலத்தில் இந்திய அரசியல் என்பது மிகவும் கேவலமான ஒன்றாக மாறி கொண்டுள்ளது என்பது உண்மை. அதிகாரத்தை அடைவதற்காக குறுக்கு வழிகளின் ஊடான பயணமும், ஆட்களை கவிழ்ப்பதும் குதிரை வியாபாரமும் தொடர்கதையாகி விட்டன. இந்திய அரசியலின் புதிய அடையாளமாக ரிசார்ட் அரசியல் மாறிவிட்டது. தங்களது கட்சியின் கொள்கை கோட்பாடுகளை, செயல்திட்டங்களை மக்களிடத்தில் சொல்லி வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், பிறகு தங்களுடைய சுய நலன்களுக்காக, அதிகார மோகத்திற்காக பிற கட்சிகளுக்கு தாவும் போக்கு அதிகரித்து வருகிறது. தாவுபவர்களை தக்க வைப்பதற்காகவும் தங்களிடம் இருப்பவர்கள் பிற கட்சிகளுக்கு தாவி விடாமல் இருப்பதற்காகவும் ரிசார்ட்டுகள் பயன்பட ஆரம்பித்துள்ளன. தமிழ்நாடு அரசியலின் கூவத்தூர் மாடல் ரிசார்ட் அரசியல், இப்போது தேசிய மாடலாக மாறிவிட்டது. இதோ, இப்போது அந்த வரிசையில் மஹாராஷ்டிரா இணைந்துள்ளது. மகாராஷ்டிராவில்…

Read More

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் ஜூலை 24 அன்று முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டி ஆரம்பமாகிவிட்டது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர், பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி மர்முவும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனதா தளம், பாஜக ஒன்றிய அரசுகளில் அமைச்சராக பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக்கியமான அமைப்புச் சட்ட பதவிக்கான தேர்தலை நாடு எதிர்நோக்கி உள்ளது. அரசின் தலைவராக பிரதமரும், நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவரும் இருப்பார்கள் என்றுதான் நமது அமைப்பு சட்டம் வரையரை செய்துள்ளது. அதனால் குடியரசுத் தலைவர் என்பவர் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அமைப்புச் சட்ட கண்ணோட்டம். குடியரசுத் தலைவர் பதவிக்கு அனைவருடைய ஒப்புதலோடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதுதான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் இம்முறையும் அதற்கான வாய்ப்பு இல்லை. இதற்கான முயற்சியை முன் நின்று…

Read More

இந்திய பாதுகாப்புத்துறையின் அக்னிபத் திட்டத்திற்கு செவ்வாய்க்கிழமையன்று கூடிய ஒன்றிய அமைச்சரவை கூட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. 17.5 வயது சிறுவர் முதல் 21 வயது வரையான இளைஞர்களுக்கு நான்கு வருட கால ராணுவ சேவையை மையமாகக் கொண்டுள்ள திட்டம்தான் இது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வருடம் முதல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இவ்வருடம் 46,000 பேரை இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய உள்ளனர். பெண்களும் இத்திட்டத்தில் சேரலாம். அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படும். இதில் நன்கு பயிற்சி பெற்ற 25 சதவீத நபர்களுக்கு ராணுவத்தில் நிரந்தர வேலை அளிக்கப்படும். மீதம் உள்ள நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். நான்கு வருட பயிற்சியின் இறுதியில் 11.71 இலட்சம் ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும். திருப்பி அனுப்பப்படும் மீதம் உள்ள 75% நபர்களுக்கு தொழில் செய்ய கடன் உதவி,…

Read More

இந்தியாவில் மத சுதந்திரம் மிகவும் கீழான நிலைமையில்தான் இருக்கிறது என அமெரிக்கா வெளியிட்ட வருடாந்திர அறிக்கை சுட்டிக் காட்டியது. இதை கண்டித்து 30-06-22 வெள்ளிக்கிழமை அன்று ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டது. 2021ல் இந்தியாவில் முஸ்லிம், கிருத்துவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பரவலாக கொலையும் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் நடந்ததுள்ளது என்பதைத்தான் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது. அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உட்பட பலரும் வெறுப்புடனும் பாரபட்சத்துடனும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் வெளிப்படையாக பேசுவதை சுட்டிக்காட்டிய அந்த அறிக்கைக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது. பன்முகச் சமூகங்கள் வாழுமிடம் என்ற அடிப்படையில் இந்தியாவில் மத சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் மதிப்பதாகவும், இனப்பாகுபாடு விஷயதில் உங்களுடைய நாடு ஒன்றும் சிறந்தது அல்ல என்ற விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அதிகாரி கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளின், பதில் குற்றச்சாட்டுகளின் சூடு ஆறுவதற்கு முன்பாகவே ஆளும்கட்சியில் உள்ள…

Read More

தன் எஜமானர்கள் கைகாட்டும் நபர்கள் மீது பாய்ந்து குதறும் நாய்களைப் போல் இன்றைக்கு இந்திய அமைப்பு சட்ட நிறுவனங்கள் மாறி இருக்கிறது. பாஜக அல்லாத அரசுகளையும் கட்சிகளையும் அமைப்புகளையும் மிரட்டுவதற்குண்டான ஆயுதமாக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்குகளும் அவர்களுடைய விசாரணை முறைமைகளும் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் எதிராக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களின், அரசியல், சமூக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையின் ரெய்டுகள் நிரந்தரமாகி விட்டது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம் உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் அமலாக்கத் துறையின் வேட்டைக்கு பலியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் முதன்மையான அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையின் ரெய்டுகள் அன்றாடக் காட்சிகளாகிவிட்டது. இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்களிலும் அரசின் திட்டங்களை மக்களிடத்தில் வெளிச்சம் போட்டு காட்டும் ஊடக நிறுவனங்களிலும் ஒன்றிய அரசிற்கு ஒத்துவராத தொழிலதிபர்களின் நிறுவனங்களிலும்…

Read More

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த அவர் 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையில் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இன்னும் உள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதலில் மரண தண்டனையும் பிறகு அது ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டு 31 வருட காலம் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தலையீட்டின் காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொன்னதைப்போல 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுதந்திரக்காற்றை சுவாசித்து இருக்கிறார். இது அவருக்கு நிம்மதியின், சந்தோசத்தின் நிமிடங்கள். வாழ்க்கையின் வசந்த காலத்தில் இழந்த முப்பது வருட காலங்களை யாரும் அவருக்கு திருப்பித் தர இயலாது. ஏழு பேரில் ஒருவர் விடுதலையாகி விட்டார். மீதியுள்ளவர்கள் காலத்தின் கருணைக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான வாசல்கள் திறந்து கொண்டிருக்கிறது. அமைப்புச் சட்டத்தின் 142 வது…

Read More

1528-ல் முகலாய அரசர் ஸஹீருதீன் பாபரின் கவர்னர் மீர்பாகியால், இன்று அயோத்தியா என்று அழைக்கப்படக்கூடிய பைசாபாத்தில் பாபரி மஸ்ஜித் என்ற பெயரில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அப்பள்ளி கட்டப்பட்ட நாள் முதல் 1949 டிசம்பர் 22 இரவு வரை வழிபாடுகள் தொடர்ந்து நடந்து வந்தது. மறுநாள் காலை அதிகாலைத் தொழுகைக்காக பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அங்கு பள்ளியின் மையத்தில் சிலை வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்கள். பதறிப்போன முஸ்லிம்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்கள். அன்றைக்கு ஃபைசாபாத் மாவட்ட ஆட்சியாளராக இருந்த கேரளாவைச் சேர்ந்த கே கே நாயர் ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் செயல்பட்டு சிஆர்பிசி145 இன் படி தடையை போட்டார். பள்ளிவாசல் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதை எதிர்த்து பள்ளியை நிர்வகித்து வந்த மத்திய சன்னி வக்ஃப் போர்டு உடனடியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். இந்து அமைப்புகளும் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். இதனால் இறுதியில் இவ்வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கீழ் கொண்டு…

Read More