இந்தியாவில் ‘தேவைக்கு அதிகமான ஜனநாயகம்’ இருப்பதுதான் இங்குச் சீர்திருத்தச் செயல்பாடுகளைச் செய்யத் தடையாக உள்ளது என நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் புலம்பி மூன்று வருடமாகிறது. இவர் இப்படிச் சொல்வதற்கு முன்பே (மத்தியிலும் மாநிலத்திலும்) இரு தேர்தல் முறை தான் வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையாக இருக்கிறது எனக் கண்டுபிடித்த கட்சிதான் பாஜக. இப்போது அவர்கள் அந்தத் தடையை நீக்குவதற்காக முனைப்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஒன்றிய அரசு அதனைக் குறித்து ஆய்வு செய்ததற்கான குழுவை நியமித்துள்ளது முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு நபர்களை உள்ளடக்கிய குழுவிற்கு ஆய்வு செய்ய வேண்டிய விஷயங்கள் நிர்ணயிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதுதான் இலட்சியம். அதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் தேர்தல் சட்டங்களிலும் நடைமுறைகளிலும் என்னென்ன மாற்றங்களைக்…
Author: கே. எஸ். அப்துர் ரஹ்மான்
காலத்தின் தேவைக்கேற்ப மறுமலர்ச்சியின் வெளிச்சத்தை ஏந்தி மானுட சமூகத்திற்கு நேர்வழி காட்டிட களம் கண்ட இஸ்லாமிய இயக்கம் உருவாக்கிய மகத்தான மாணவர் இயக்கம் தான் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO). ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்திய தலைவர் மர்ஹும் சிராஜுல் ஹசன் சாஹிப் கூறியதைப் போல இஸ்லாமிய இயக்கத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன்றுதான் எஸ் ஐ ஓ. மாணவ – இளைஞர்களிடையே இஸ்லாமிய அழைப்பை எடுத்துரைப்பது, மாணவ – இளைஞர்களிடையே இஸ்லாமிய அறிவை- உணர்வை உருவாக்கி இஸ்லாமிய அச்சில் பார்த்தெடுப்பது, நன்மையை ஏவி தீமையை அளிக்கும் உயரிய போராட்டத்தில் எதிர்கால தலைமுறையின் ஆக்கபூர்வ பங்களிப்பை உறுதிப்படுத்துவது, கல்வித்துறையையும் கல்வி வளாகங்களையும் நுகர்வியல் – பொருளாதார கலாச்சாரம் சீரழிவுகளில் இருந்து மீட்டெடுப்பது, இஸ்லாமிய மறுமலர்ச்சியின் எதிர்கால தலைவர்களாக வழிகாட்டிகளாக உருவாக்குவது உள்ளிட்ட உயரிய லட்சியங்களோடுதான் எஸ் ஐ ஓ உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து முதலாளித்துவ…
ஒன்றிய அரசின் ‘மக்கள் விரோத – ஜனநாயக விரோத’ செயல்பாடுகளுக்கு எதிராக ராகுல் காந்தியின் தலைமையிலான நாடு தழுவிய ‘பாரத் ஜோடோ யாத்ரா – மக்கள் ஒற்றுமை பயணம்’ கன்னியாகுமரியில் செப்டம்பர் 7 ந்தேதி ஆரம்பித்துள்ளது. ‘மிலே கதம், ஜோடோ வதன் – பாதைகள் ஒருங்கிணையட்டும், நாடு ஒன்றாகட்டும்’ என்ற முழக்கத்தோடு ஆரம்பித்துள்ள இந்த போராட்ட எழுச்சிப் பயணம் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள மிகப்பெரும் அரசியல் நிகழ்வாகும். கன்னியாகுமரியில் ஆரம்பித்து 150 நாட்கள், 3570 கிலோமீட்டர் நடந்து பயணித்து காஷ்மீரைச் சென்றடையும் இந்த மக்கள் ஒற்றுமை பயணம் 12 மாநிலங்களையும் இரண்டு யூனியன் பகுதிகளையும் கடந்து செல்கிறது. இப்பயணம் முழுவதும் ராகுல் காந்தியுடன் 118 பேர் பங்கெடுக்கின்றனர். மிகச் சிறப்பான ஏற்பாடுகளை இப்பயணத்திற்காக காங்கிரஸ் செய்துள்ளது. அச்சத்தையும் வெறுப்பையும் பரப்பி ஒன்றிய அரசால் இக்கட்டான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கக்கூடிய, கவலைகளை சுமந்து நிற்கக்கூடிய இந்தியாவின் வழிகளின் ஊடாக நாட்டை மீட்டெடுக்க ராகுல்…
“நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி; எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட; மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட. இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.” இதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக என்ற வார்த்தைகளில் சமூகத்துவ, சமய சார்பற்ற (socialism and secularism) ஆகிய சொற்களை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுப்பிரமணிய…
ஜஸ்வந்த்பாயி நயி, கோவிந்த்பாயி நயி, சைலேஷ் பட், மிதேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர் பாயி வொஹானிய, பிரதீப் மோர்தியா, ராஜு பாய் சோனி, ரமேஷ் சந்தன…. இவர்கள் யார் தெரியுமா..? இவர்கள்தான் பிராமணர்கள். ஆகவே இவர்கள் நல்லவர்கள் என்று கூறி குஜராத் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகள். 2002 மார்ச் மூன்றென்று நரேந்திர மோடி முதல்வராக இருந்த பொழுது குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் காலகட்டத்தில் ஒரு குடும்பம் முழுவதையும் கொன்றொழித்த கயவர்கள் இவர்கள். 5 மாதம் கர்ப்பிணியாக இருந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்கள், அவரது மூன்று வயது குழந்தையை தரையில் அடித்து கண்முன்னே படுகொலை செய்தார்கள், அவர்களது குடும்பத்தில் இருந்த பிறந்து ஒரு தினம் மட்டுமே ஆன பச்சிளம் பாலகன் உட்பட 7 மனித உயிர்களை, முஸ்லிம்களை கொடூரமாக கொன்றார்கள். அதற்காக நடைபெற்ற நீண்ட நெடிய சட்டப்…
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சிபிஐ ஒரு கூண்டுக்கிளி என பாஜக விமர்சித்தது. ஆனால் இன்றைக்கு பாசிச பாஜகவின் ஆட்சிக் காலத்தில் அமைப்புச் சட்ட நிறுவனங்கள் அனைத்தும் வாலாட்டும் வேட்டை மிருகங்களாக மாறிவிட்டன. EC (தேர்தல் ஆணையம் – Election Commission)யும் ED (அமலாக்கத்துறை – Enforcement Directorate)யும் இப்போது எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவதற்குண்டான ஒன்றிய அரசின் ஆயுதங்களாக மாறிவிட்டன. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, இயன்ற அளவு இன வெறி – இனவெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுவது. அதன் மூலம் தேர்தலில் வெற்றியை பெற முயற்சிப்பது. வெற்றி பெற இயலாவிட்டால், வெற்றி பெற்ற கட்சியின் எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் பிடிக்க முனைவது, அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றுவது. அதுவும் இயலாவிட்டால், பிறகுதான் அமலாக்கத் துறையின் மாஸ் என்ட்ரி. பாசிச பாஜகவின் திட்டங்களுக்கு ஒத்துழைக்காத எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடுவது. அமலாக்கத்துறை என்பது பொருளாதார குற்றங்களை விசாரிப்பதற்கான ஒன்றிய அரசின் ஏஜென்சியாகும். ஆனால் அதுதான் இப்போது ஒன்றிய…
சுதந்திர இந்தியாவின் 75 ஆம் வருடத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆதிவாசி சமூகத்தில் இருந்து முதல் ஆளுநராக பதவி வகித்த திரௌபதி முர்மு, ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவர், சுதந்திரத்திற்கு பிறகு பிறந்து குடியரசுத் தலைவர் ஆனவர், வயது குறைவான குடியரசுத் தலைவர் போன்ற சிறப்புகளும் அவருக்கு உண்டு. பாஜகவின் மிகவும் திட்டமிடப்பட்ட நகர்வுகளின் மூலம்தான் திரௌபதி முர்மு இந்த உயர் பதவியை அடைந்திருக்கிறார். கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஆதிவாசி, தலித் சமூகங்களுக்குள்ளே ஊடுருவதற்கான வழிகளை எளிமைப்படுத்துவதற்கும் அவர்களுடைய நம்பிக்கையை பெறுவதற்குமான மிகச் சிறந்த அரசியல் நகர்வாகத்தான் ஆர்எஸ்எஸ் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக ஆக்கி உள்ளது. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் இவரது பெயர் பட்டியலில் இருந்தது. திரௌபதி…
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத 65 வார்த்தைகளின் பட்டியலை மக்களவை சபாநாயகர் வெளியிட்டுள்ளார். சாதாரணமாக மக்களிடத்தில் பிறரை விமர்சனம் செய்கின்ற பொழுதும் அரசியல் மேடைகளிலும் புழங்குகின்ற வார்த்தைகள்தான் அவைகள். விமர்சனத்திற்கு உரிய வார்த்தைகளும் பயன்பாடுகளும் சபை குறிப்பில் இடம் பெறாது என மக்களவை செயலகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றிய அரசை விமர்சிக்கும் வார்த்தைகள் ஜனநாயகத்தின் உன்னத அவை என்று சொல்லப்படும் நாடாளுமன்றத்தில் எழக்கூடாது என பாசிச அரசு தீர்மானித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள பல வார்த்தைகளும் நரேந்திர மோடிக்கும் அவரது தலைமையிலான பாசிச பாஜக அரசுக்கும் எதிராக எழக்கூடிய வார்த்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. “புதிய இந்தியாவிற்கான புதிய வார்த்தைகள்” என இதைக் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை செய்துள்ளனர். சமூக ஊடகங்கள் நரேந்திர மோடி அரசின் இந்த போலித்தனத்தை குறித்த கிண்டல்களால் நிறைந்துள்ளன. இருப்பினும் பாசிச பாஜக அரசின் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் வரும் என நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை.…
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்துத்துவமயமாக்க வேண்டும். குறைபாடுகள் உடைய, மேற்கத்திய சித்தாந்தம் போதித்த மதச்சார்பற்ற தத்துவத்தைத்தான் இந்திய அமைப்புச் சட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேற்கத்திய சித்தாந்தமான சோசலிசமும் இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல. இதில் உள்ள பல அடிப்படை விஷயங்களையும் மாற்றம் செய்ய வேண்டும்.. போன்ற பல்வேறு கருத்துக்களை கோல்வாக்கரின் சித்தாந்தங்களை மையமாகக் கொண்டு ஒரு பாஜக தலைவர் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் அவரிடம் பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜே பி நட்டா விளக்கம் கேட்டுள்ளார். அதற்கான விடையை காண நாம் காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை விமர்சித்து ஆர் எஸ் எஸ்ஸின் குருஜி கோல்வால்கர் எழுதியுள்ளார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது. அவர் எழுதிய ஞான கங்கையை அவர்களால் புறக்கணித்து பேசவும் முடியாது. ஏனெனில், ஆர்எஸ்எஸ் முன்பு வேலைகளை செய்ததும் இப்போது செய்து வருவதும் கோல்வால்கரின் சிந்தனைகளை மையப்படுத்தித்தான். அந்தச்…
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமை ஏற்ற பிறகு அவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் சங்க பரிவாரின் அஜண்டாக்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக அகில இந்திய செயற்குழுவில் அமித்ஷா சொன்னதைப் போன்று, இந்தியாவில் அடுத்த 40 வருடங்களுக்கு பாஜகவின் ஆட்சிதான் என்ற பேச்சை நிரூபிக்கும் வண்ணம்தான் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாகத்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் துவக்கமாக அசோக ஸ்தூபி நரேந்திர மோடியால் திறக்கப்பட்டுள்ளது. அசோக ஸ்தூபி திறப்பு விழா என்பது ஒரு நிகழ்வு மட்டும் அல்ல. இந்த நாட்டிற்கு பல்வேறு குறியீடுகளை, செய்திகளை அதன் ஊடாக பாரதிய ஜனதா அரசு அளித்துள்ளது. காந்தியின் இந்தியாவின் அடையாளமாக இருந்த அசோக ஸ்தூபி அல்ல இப்போதுள்ளது. அமைதியின் வடிவமாக இருந்த சிங்க உருவங்கள் இப்பொழுது ஆக்ரோஷ முகத்தோடும் கூறிய நகங்களோடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முகநூலில்…