அம்மா, இந்த உலகம் மிகவும் கொடூரமானது.சிறிதளவு நிலத்திற்காக அவர்கள்மனிதனை அநீதமாக ரத்தம் சிந்தவைத்தனர். அம்மா! நான் என் இறைவனிடம் சென்று உண்மைகளைச் சொல்வேன்,அவர்கள் எனது குழந்தைப் பருவத்தைப் பறித்தனர்,எனது கனவுகளை என்னுடன் சேர்த்து உயிருடன் புதைத்தனர். எனது இனிய, இனிய கண்கள்இப்போதுதான் கனவு காணத் தொடங்கின,பார்க்க முடியாத கொடூர காட்சிகளால்தற்போது அவை சிதைந்து காயம் அடைந்துவிட்டன. இடிபாடுகளும் புழுதியும்ஒரு காலத்தில் சிரிப்பு எதிரொலித்த இடத்தில்,தற்போது மௌனத்தை நிறைத்திருக்கின்றன,எனது வாழும் உரிமை பறிக்கப்பட்டது. இரவின் அமைதியில்,நான் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கிறேன்,எனது அழுகை விண்ணுலகை அடையும் என நம்புகிறேன்,அங்கு வேதனைகள் அற்ற நீதிமான ஆட்சி நடைபெறுகின்றது. அம்மா! நான் என் இறைவனிடம் சென்று உண்மைகளைச் சொல்வேன்,விரக்தியான நிலையிலும் கூட,என் இதயம் நம்பிக்கையின் ஒளியில் மிளிர்கிறதுமீண்டும் அமைதி நிறைந்த ஒரு உலகத்திற்காக. (தமிழாக்கம்: முகமது தௌபிக்)