Author: காஜா காதர்

விஜயின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வழக்கம் போல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியாக முஸ்லீம்களை சித்தரித்து தனது திரைக்கடமையை செம்மையாக நிறைவேற்றியுள்ளார் இயக்குனர் நெல்சன். இந்திய சூழலில் முஸ்லீம்களின் உயிரும் , உடமைகளும் பல வித அசச்சுறுத்தலுக்கு ஆளாகி, மிகப்பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நேரத்தில், தொடர்ந்து முஸ்லீம்களை கொடூரமானவர்களாக, நாகரீகமற்றவர்களாக சமீபத்தில் வெளி வந்த ஆன்டி இந்தியன், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் மீண்டும் ஒருமுறை காட்சிப்படுத்தி இருப்பது இயக்குனர் மற்றும் நடிகரின் அரசியல் அறியாமையே. , இதை எடுத்த இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் எவ்வளவு கொடூரமான மனநிலை உடையவர்கள் என்பதையே நமக்கு காட்டுகிறது. தன்னை பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தவராக காட்டிக்கொள்வதாலும் வெறுப்பு மனோநிலைக்கு தீனி போடுவதின் மூலமும் வசூல் அறுவடை செய்யலாம் எனும் மனக்கணக்கில் இது போன்ற திரைப்படங்கள் எடுப்பவர்கள் பாஸிட்களை விட மோசமானவர்கள். இன்னும் சமூக நலன் அரசியல் பற்றி…

Read More

இந்தியா என்பது பல்வேறு இனங்களும், மதங்களும், மாறுபட்ட நம்பிக்கைகளும் கொண்ட மக்களால் ஆன தேசம். இங்கிருக்கும் பலதரப்பட்ட பண்பாட்டு, கலாச்சார வித்தியாசங்களும், பன்முகத்தன்மையும் தான் இந்நாட்டை மிகவும் தனித்துவமிக்கதாக ஆக்குகிறது.அதே நேரம் இந்த மாறுபட்ட கலாச்சாரமும், வேறுபாடுகளும் பாசிச சக்திகளின் நாசகர திட்டங்களுக்கும், இந்து என்ற அடையாளத்தின் கீழ் அணிதிரட்டவும் இன்னும் ஒற்றை கலாச்சார திணிப்புக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தான் தேசிய கல்வி கொள்கை, நீட் உட்பட கல்வி சார்ந்த பல எதேச்சதிகார போக்கை ஒன்றிய அரசு கையில் எடுத்தது. அதன் நீட்சியாக தான் சமீபத்தில் குஜராத் மற்றும் கர்நாடக அரசு வரும் கல்வியாண்டு முதல் பள்ளியினபாடத்திட்டத்தில் பகவத் கீதை என்ற இந்து மத வேத புத்தகம் போதிக்க பட இருப்பதாக அறிவித்திருப்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் பெங்களூருவில் முஸ்லீம் பெண்கள்  ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து “பள்ளியில் மத அடையாளம் இருக்க…

Read More

சமீபத்தில் தீபாவளியை ஒட்டி வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஆழமான தாக்கத்தையும், அதிர்வலைகளையும் உருவாக்கியதோடல்லாமல், பொதுவெளியில் ஆரோக்கியமான பல விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. அரசு நிர்வாகத்தின் இயல்பை, அலட்சியத்தை, ஆதிக்கமனோபாவத்தை, அதிகார துஸ்பிரயோகத்தை, சாதிய சார்பு நிலைகளையெல்லாம் கொஞ்சமும் சமரசமில்லாமல் தைரியமாக காட்சிப்படுத்தியதும் அதேபோன்று விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை, பிரச்சனைகளை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையெல்லாம் தோலுரித்து காட்டியதும் தான் ஜெய் பீம் வெகு மக்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறிப்போயிருப்பதற்கு மிக முக்கிய காரணமாகும். இப்படி ஜெய்பீம் எல்லா தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்டு, சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக கொண்டாட பட்டுக் கொண்டிருக்கும் போது, அதை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கெதிரான திரைப்படமாக சுருக்கிவிட முயன்றிருக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். படத்தில் காட்டபட்ட சர்ச்சைக்குரிய காலண்டர் குறியீடு உண்மையில் தவிர்த்திருக்கபட வேண்டியதுதான். ஆனால் அது சர்ச்சைக்குள்ளாகி சுட்டிக்காட்ட பட்டவுடன் உடனடியாக மாற்றபட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .ஆனால் தொடர்ந்து இதை ஊதி பெருசாக்கி அரசியல்…

Read More

ஸ்டார்ட் கேமரா! ஆக்சன்,ரோலிங் தொடர் மழையாலும், வெள்ளத்தாலும் தனியொரு தீவை போல் பரிதாபமாக காட்சியளிக்கும் சென்னை மாநகரின் தற்போதைய நிலை பார்ப்போரை நிச்சயம் பதைபதைக்கச்செய்யும். வீதியெங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மக்கள், சிலபோது அத்தியாவசிய தேவையான உணவுக்கு கூட வெளியேற முடியாத அவலம் காட்சி ஊடகத்திலும், சமூக வலைத்தளத்திலும் பரவலாக பகிரப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், சில மக்கள் நலன் அரசியல் கட்சிகளும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சென்ற தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை, கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் செல்வதை போல் ஹாயாக போட்டோஷூட் நடத்தியது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் படும் கஷ்டங்களிலும், துயரங்களிலும் விளம்பரம் தேட அலையும் இவர்களை பார்க்கும் போது சிலருக்கு வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கலாம். ஆனால்…

Read More