வாழ்க்கையில் இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் தனிமரமாக இருக்கும் ஒருவனுக்கும், தன் இறுதி நாட்களை தான் அறியாமலயே கடந்து கொண்டிருக்கும் நாய்க்குமான பாச பிணைப்பை பயணங்கள் வழியே அழகியலாக கொடுக்க எடுத்த முயற்சியே இந்த “777 சார்லி”. முதல் இருபது நிமிடங்கள் நாயகனின் கதாபாத்திர அடர்வை ஆழப்படுத்துகிறேன் பேர்வழி என்று இயக்குனர் பார்வையாளனை சற்றே சோதிக்கிறார். இருந்தாலும், அந்த மூன்று இட்லிகள், வயதான தம்பதி, ஆதிகா, காயின் பாக்ஸ் உரையாடல் என்று ஆங்காங்கே இருக்கும் ‘க்யூட்’ மொமண்ட்களும், ராஜ் பி.ஷெட்டியின் அறிமுகக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. மேலும், அந்த நாய் ஒரு அசாதாரண சூழலில் வாழும் காலத்தில் அதற்கு ‘கீட்டன்’ என்ற பெயரையும், தன்னை ஒரு சுதந்திர உயிரியாக உணரும் தருணத்தில் அதற்கு ”சார்லி” என்ற பெயரையும் பயன்படுத்திய விதத்தில் இயக்குனரின் இந்த “பஸ்டர் கீட்டன் – சார்லி சாப்ளின்” கருத்தாக்கத்தை நாயின் வாழ்வோடு பொருத்தியது அழகியல். பொதுவாக, மனிதர்களின்…
Author: மு காஜாமைதீன்
“எங்க கிடக்குற கழிசடையெல்லாம் ஏன்டா இங்க வந்து என் உசுர வாங்குறீங்க..?” என்கிற ரீதியில் ஒரு தலித் மாணவன் வகுப்பறையில் சந்திக்கும் அவமானத்தை ஒருநாளும் ஒரு உயர்சாதி மாணவன் எதிர்கொள்ளும் வாய்ப்பில்லை. அவனை எந்த ஆசிரியரும் நீயெல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று தப்பித் தவறி கூட கேவலமாகப் பேசப் போவதில்லை. ஒருவேளை அவன் ஏதாவது ஒரு பாடத்தில் சோடை போயிருந்தால் கூட “ஏன்டா உனக்கென்னடா ஆச்சு.. கண்ட கண்ட கழுதைங்க கூட சேர்ந்து உருப்படாம போயிடாதேடா” என அதிகபட்சமாக சமுதாயத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்ட மாணவனை ஒப்பிட்டுத்தான் கண்டிக்கப்பார்கள்.. பக்கத்தில் இருக்கும் “குப்பத்து பொறுக்கிப் பசங்க” பெண்களை வன்கேலி செய்து வம்பிழுப்பதாகத்தான் ஷங்கரால் வசனம் எழுத முடியும். அதேபோல் கிரிக்கெட்டின் நேர்முக வர்ணனையில் மெத்தப் படித்த மேதாவியான டீன் ஜோன்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ஆட்டக்காரர் ஹாஷிம் ஆம்லாவை “தீவிரவாதி” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு நடையைக் கட்ட…
பதினெட்டு வயது A.H. அல்மாஸ் மற்றும் அவரது இரண்டு தோழிகளும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டப் போது வகுப்பாசிரியர் அவர்களை உடனடியாக வகுப்பிலிருந்து வெளியேறுமாறு திட்டியிருக்கிறார். ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காகதான் அவர்கள் வகுப்பில் உட்கார அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். “நாங்கள் வகுப்பின் கதவருகில் வந்த போது, ஹிஜாபோடு தாங்கள் உள்ளே நுழைய முடியாதென்றும், எங்களை ஹிஜாபை கலையுமாறும் ” சொன்னதாக அல்மாஸ் நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். அப்போதிருந்து 6பேர் அடங்கிய முஸ்லீம் பெண்கள் கர்நாடக உடுப்பியில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரியில் வகுப்புக்கு வெளியே உட்காருமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கு கல்லூரி தரப்பிலிருந்து ஹிஜாபானது சீருடையின் ஒரு அங்கமாக இல்லாத போது மாணவிகள் கல்லூரியின் விதியை மீறியுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அப்பெண்கள் நம்மிடம் கூறும் போது, ஹிஜாப் எங்கள் நம்பிக்கையின் ஒரு பகுதி, ஒரு அங்கம் அதை பின்பற்றுவதென்பது இந்திய சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட எங்கள் உரிமை…
எழுதியவர் : மு.காஜா மைதீன் மதியத்தைத் தாண்டி மாலையைத் தொடவிருந்த ஒரு பொழுதில், ஒரு கோப்பைத் தேநீருக்கு காத்திருக்கும் நேரத்தில் அந்த மாணவனின் உயிரைக் குடிக்க அங்கே துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது. புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரான உமர் காலித் அந்தத் தாக்குதலில் உயிர்பிழைத்துவிட்டார். காந்தி, கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கௌரி லங்கேஷ் என்று பாசிசத்தின் நடப்புக் கணக்கில் உமர்காலித் பெயர் சேராமல் போனது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தான். டெல்லி கான்ஸ்ட்டியூசன் க்ளப்பில் நடைபெற்ற இந்த தாக்குதலில் உமர் காலித் தவிர வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், பத்திரிகையாளர் அமித்சென் குப்தா, சாலிடாரிட்டி அமைப்பின் பிஎம்.சாலிஹ், காணாமல் போன நஜீப் தாயார் ஃபாத்திமா நபீஸ், ரோகித் வெமுலாவின் தாயார், டாக்டர் கபீல்கான் என்று பலரும் அங்கே இருந்தனர். அதாவது சமீப காலங்களில் ஆளும் பாஜகவிற்கு யாரெல்லாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்களோ அனைவரும் ஒரே மேடையில் இருந்துள்ளபோது தான்…
மார்ச் 6ஆம் தேதி நாசிக்கில் தொடங்கிய விவசாயிகள் பேரணி ஆறு நாட்களில் 60,000 விவசாயிகளுடன் மும்மை மாநகரையே ஸ்தம்பிக்க வைத்தது மராட்டியத்தில். விவசாயக் கூலிகள், பழங்குடியினர், முதியவர்கள், பெண்கள் என இந்த எளியவர்களின் குரலுக்குக் குலைநடுங்கிப் போனது மராட்டிய பா.ஜ.க. அரசு. ஆனால், இந்தப் பெரும் பேரணி போகிற போக்கில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வல்ல. எண்ணற்ற விவசாயிகளின் தற்கொலைகள், அரசுகளின் கார்ப்ரேட்களுக்கான ஆதரவு நிலைப்பாடு, புறந்தள்ளப்படும் விவசாயக் கோரிக்கைகள், மத்திய மாநில அரசுகிள்ன விவசாயம்சார் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை போன்ற தொடர் புறக்கணிப்பின் பெருவெடிப்பே மராட்டிய விவசாயிகளின் இந்த நீண்டப் பேரணி. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடந்த இந்தப் போராட்டத்தின் வெற்றி மொத்த இந்திய விவசாயிகளின் ஒரு தொகையீட்டு நிகழ்வாக சாமன்யர்களின் பொதிபுத்தி கொண்டாடுவதற்கான காரணங்களும் இல்லாமில்லை. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தமுள்ள 24.39 கோடிக் குடும்பங்களில் 18 கோடிக் குடும்பங்கள் விவசாயப் பின்புலம் கொண்டவை. இப்படியான ஒரு…