Author: முஹம்மது ஜாஃபர்

கடலூர் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசல் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தது. 200 ஆண்டுக்கால பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதிய வடிவிலான கட்டடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பள்ளியின் உள்ளே ஓர் ஓரமாய் ‘நகரா’ எனும் சப்தம் எழுப்பும் கருவி சப்தமில்லாமல் சாந்தமாய் நின்றுகொண்டிருந்தது. ஒலிபெருக்கியும், மக்களின் வீடுகளில் கடிகாரமும் இல்லாத காலத்தில் மக்களைத் தொழுகைக்காக அழைப்பதற்கு இக்கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல பழமையான பள்ளிவாசல்களில் இன்றும் நகரா பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் இசைக்கப்பட்டும் வருகிறது. நகராவின் ஓசையுடன் பள்ளிவாசல்களின் பழமையும், வரலாறும் இளம் தலைமுறையின் செவிகளில் இனிமையாய் ஒலிக்கட்டும்!

Read More