இந்தியாவின் நீதித்துறையானது வெளிப்படையாக அபாயகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாகவே இதுவரை வரலாற்றில் கண்டிராத செயல்பாடுகளையும், இருவேறு தீர்ப்புகளையும் வழங்கி வருகின்றனர். நேற்றைய தினம் ( Nov 7. 2022 ) உச்சநீதின்ற நீதிபதிகளாகிய தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் ( EWS – Economic weaker section ) பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், யு.யு. லலித் மற்றும் ரவீந்திர பட் இது செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள். பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதே ஒரு வேடிக்கை தான். புரட்சியாளர் அம்பேத்கர் இடஒதுக்கீடை குறித்து தெளிவாக விளக்கிவிட்டார் ‘இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்கள் அதாவது பின்தள்ளப்பட்டோர்களுக்கானது’. பொருளாதாரம் என்பது நிலையற்றது. இன்றைய செல்வந்தன் நாளைய ஏழையாக மாறலாம், இன்று ஏழையாக இருப்பவன் நாளைய செல்வந்தனாக மாறலாம். இவர்கள் EWS -ற்கு 10% இடஒதுக்கீடு என்று…
Author: இம்ரான் ஃபரீத்
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரால் தலித்துகளை தீண்டத்தகாதவர்கள் என்று அவர்கள் மீது மேல் சாதியினரின் அத்துமீறல்கள் இன்றளவும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மத்திய பிரதேசத்தில் சாகர் என்னும் ஊரில் உள்ள ஜைன கோவிலில் பிரசாத பொருளாக வைக்கப்பட்டிருந்த பாதாம் பருப்பை திருடி சாப்பிட்டான் என்று குற்றம் சாட்டி பதினோரு வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார் ஜைன அர்ச்சகர். இதனைப்பற்றி போலீஸிடம் புகார் கொடுத்தார் அச்சிறுவனின் தந்தை. ஆனால், இதுவரை அந்த அர்ச்சகர் கைது செய்யப்படவில்லை. இதுபோல, அச்சாதியினரின் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கமும், காவல்துறை அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவற்றை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை. பிற்படுத்தப்பட்ட இச்சாதியினர்களுக்கு எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. சமூகத்தில் அவர்களுக்கு சுதந்திரமாக வாழும் வாழ்க்கையும் கிடைப்பதில்லை. மேலும், உணவு, உடை, வருமானம், தண்ணீர்,கல்வி, சமூக அந்தஸ்து, அடிப்படை உரிமைகள் ஆகிய…
ஒரு மனிதனின் அடிப்படை தேவையென்பதே உடை, உணவு, இருப்பிடம் மற்றும் அவனது உரிமைகள் தான். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும் அவனால் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்படுவான். இந்திய நாட்டில் சிறுபான்மையினர்களை துடைத்தெறிவதற்காக அவனது அடிப்படை தேவைகளை தான் பாசிச சக்திகள் சுரண்ட நினைக்கின்றது. இந்தியாவில் பெயர்போன பல்கலைக்கழகமான JAWAHARLAL NEHRU UNIVERSITY ல் இறைச்சிகள் சாப்பிட தடைவிதிக்கப்பட்டது. ராமநவமியை முன்னிட்டு அதனை கொண்டாடிய ABVP அமைப்பினர்கள் இறைச்சிகள் சாப்பிட கூடாது என்று கூறி அங்குள்ள முஸ்லிம் மாணவர்களை தாக்கியுள்ளனர். இது வெறுமனே இறைச்சி சாப்பிட கூடாது என்பதற்காக தான் நடந்த தாக்குதலா என்று பார்த்தல் அதுமட்டுமல்ல. சில ஆண்டுகளாகவே கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன. பொதுவாக JNU போன்ற பல்கலைக்கழகங்களில் பலவிதமான சித்தாந்தங்கள் நிறைந்த மாணவர்கள் இருப்பார்கள். மேலும், அதுபோன்ற பல்கலைக்கழகங்களில் தான் பல சித்தாந்தங்கள் கொண்ட தலைவர்கள் உருவாகின்றனர். RSS இன்…
இந்திய நாட்டில் வெளிப்படையாக இஸ்லாமோஃபோபியாவை பரப்பும் பணியில் காவிக்கூட்டத்தின் ஆட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகின்றன. சில இடங்களில் மறைமுகமாக இஸ்லாமியர்களை வஞ்சித்துக்கொண்டிருந்த காவிக்கூட்டம் இன்று கல்வி வளாகம், நீதி மன்றம் என எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் வெளிப்படையாக வஞ்சிக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக முஸ்லிம் பெண்களை மையப்படுத்தி அவர்களின் செயல்கள் வீரியம் அடைந்துகொண்டே போகின்றன. ( BULLY BAI, SULLI DEALS ) போன்ற இணையங்களை தயாரித்து அதில் CAA, NRC போன்ற பிரச்சனைகளுக்கு முன்வந்து குரல் கொடுத்த முஸ்லிம் பெண்களின் படங்களை அந்த இணையத்தில் பதிவிட்டு அவர்களை ஏலம் விட்டு இழுவுபடுத்தும் நிலையை உருவாக்கினர். மேலும், கல்வி வளாகங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து முஸ்லிம்பெண்களை வீதியில் நிறுத்தினர். இது குறித்து வழக்குகள் தொடுத்தாலும் நீதி மன்றங்கள் அநீதிமன்றங்களாக செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் உரிமைகளை, இந்த நாட்டில் அவர்களின் இருப்பை நாளுக்கு நாள் கேள்வி குறிகளாகவும், இங்கு அவர்களின்…