Author: ர.முகமது இல்யாஸ்

தந்தை பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியைக் கட்டிக்காத்த பெரியாரின் பிறந்த நாளை இவ்வாறு கொண்டாடுவது முற்றிலும் வரவேற்கத்தக்கது. சமூக நீதியையும் பெரியாரையும் ஒன்றிணைத்து, ஒரே நாளில் நினைவுகூர்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற போதும், கடந்த காலங்களில் பெரியாரை வெறும் `சமூக நீதிக் காவலர்’ எனச் சுருக்குவதன் பின்னணியில் இந்தியத் தேசிய நலன்களும், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுகவின் வர்க்க நலன்களும் இல்லாமல் இல்லை. பெரியார் பிறந்த நாளை ‘சமூக நீதி நாள்’ என அறிவித்தவுடன் ‘தலித் அல்லாதோர் கூட்டமைப்பு’ கட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், வழக்கம் போல இது பாமகவுக்குக் கிடைத்த வெற்றி எனவும், கடந்த 33 ஆண்டுகளாக பாமக செப்டம்பர் 17 அன்று ‘சமூக நீதி நாள்’ கொண்டாடி வருகிறது எனக் கூறியுள்ளார். பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் பாமக தான் தலித்துகளுக்கு எதிராக வட…

Read More

இந்திய முஸ்லிம்களுக்குப் புதிய நெருக்கடி ஒன்று தற்போது உருவாகியிருக்கிறது. தாலிபான் விவகாரத்தில் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கோரும் நிர்பந்தம் கடந்த இரண்டு நாட்களாக இங்கிருக்கும் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாலிபான்களை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவர் அரசியல் புரிதலுக்கு ஏற்ப நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நான் தாலிபான்களை எதிர்க்கிறேன். தாலிபான் எதிர்ப்பு என்பதை ஏகாதிபத்தியங்களின் தரப்பிலோ, பார்ப்பன தரப்பிலோ, Hindu Nazi enablers ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாதி இந்து லிபரல்களின் தரப்பிலோ நின்றுகொண்டும், இந்தத் தரப்புகளின் ஒப்புதலுக்காகவும் செய்யவில்லை. தாலிபான்களால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படவிருக்கும் அப்பாவி ஆப்கன் முஸ்லிம்கள் – ஆப்கன் சிறுபான்மையினர் தரப்பில் நின்று எதிர்க்க விரும்புகிறேன். தாலிபான்களின் பெண் ஒடுக்குமுறை, கலைகள் மீதான வெறுப்பு, இஸ்லாம் பற்றிய அவர்களின் கடுமையான கோட்பாட்டுப் புரிதல் முதலானவற்றின் அடிப்படையில் தாலிபான்களோடு முரண்பட்டு எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது. தாலிபான்களைக் காரணமாக வைத்துக் கொண்டு, இந்திய முஸ்லிம்கள் மீதான தங்கள் வெறுப்பைத் தணித்துக் கொண்டிருந்த பலரை இன்று…

Read More

கன்னியாகுமரியில் பாரத மாதாவை இழிவுபடுத்திப் பேசிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா. அவரைக் கைது செய்ததோடு ஆளும் திமுகவின் முன்னணி தலைவர்கள் அதனை நியாயப்படுத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சி.பி.எம் கட்சி அவருக்கு எதிராக கன்னியாகுமரியில் போஸ்டர் ஒட்டுகிறது. குமரி காங்கிரஸ் தவிர, தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்களும் ஜார்ஜ் பொன்னையா மீது தவறு இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆக, பாரத மாதாவைத் தமிழ்நாட்டில் படிப்படியாக இந்துக் கடவுளாக மாற்றும் பணிகள் நம் கண்ணெதிரே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. செந்தில் வேல், புதிய தலைமுறை கார்த்திகேயன் உள்ளிட்ட இந்து லிபரல் ஊடகவியலாளர்களும் பாரத மாதாவை இந்துக் கடவுளாகவும், பாரத மாதா குறித்து பேசுவது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகவும் கருதுகிறார்கள். பாரத மாதா என்பது இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் தேச பக்தியை அளவிடும் கருவியாகவே தொடக்கத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு ‘பாரத் மாதா…

Read More

தப்லீக் ஜமாத் கடந்த 100 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் அமைப்பு. ‘வானத்திற்கு மேலே இருப்பவற்றையும், பூமிக்குக் கீழே இருப்பவற்றையும் மட்டுமே பேசுவோம்’ என்ற கொள்கையின் கீழ், உலகக் கண்ணோட்டத்தை வைத்திருப்பவர்கள் தப்லீக் ஜமாத்தினர்; உலகம் முழுவதும் ‘வழிகேட்டிற்கு’ சென்ற முஸ்லிம்களை மீண்டும் பள்ளிவாசல்களுக்கு வரவழைப்பதே எங்கள் பணி என்று இயங்குபவர்கள். எந்த வித உலக அரசியலையும் இந்த மனிதர்களிடம் பேச முடியாது. பாபர் மசூதியை இடித்தது அநியாயம் என்று அவர்களிடம் ஒருமுறை வாதிட்ட போது, ‘பொறுமையைக் கடைபிடியுங்கள் பாய்’ என்று அறிவுறுத்தினார்கள். தப்லீக் ஜமாத்காரர்கள் தொழுகைக்கு அழைக்க தெருக்களில் நுழைந்தாலே, ’அல்லாஹ் போலீஸ் வர்றாங்க’ என்று சிறுவர்கள் எல்லாம் தெறித்து ஓடுவோம். இந்த அப்பாவிகள் மீது ‘கொரோனா ஜிஹாத்தில்’ ஈடுபட்டதாகத் தண்டனைக் கணக்கு எழுதியிருக்கிறது இந்தியாவின் இந்துப் பெரும்பான்மை கூட்டு மனசாட்சி. இரு நபர்கள் சந்தித்தாலே, கைகுலுக்குவதும், கட்டியணைப்பதும் முஸ்லிம் சமூகத்தின் தவிர்க்க இயலாத பண்பு. தப்லீக் ஜமாத்தினர் இன்னும்…

Read More

‘ஆசாதி என்று நாங்கள் கூறுவதன் பொருள், காஷ்மீர் நிலத்தின் மீதான அந்நிய ஆக்கிரமிப்பை நீக்குவது மட்டுமல்ல; காஷ்மீரிகளை வறுமை, பிற்போக்குத்தனம், அறியாமை, நோய், அநீதி, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலானவற்றில் இருந்து விடுதலையளிப்பது. அத்தகைய விடுதலையை நாங்கள் ஒரு நாள் அடைந்தே தீர்வோம்’ மக்பூல் பட் (1938 – 1984) ‘ஆசாதி காஷ்மீரின் தந்தை’ என்றழைக்கப்படும் மக்பூல் பட், 1984ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் சில காலம், இந்தியாவின் ஏஜென்ட் எனவும், இந்திய அரசின் சிறையில் சில காலமும், தூக்குத் தண்டனையும் பெற்றவர் மக்பூல் பட். இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதையும், காஷ்மீர் தனி நாடாக சுதந்திரம் பெற வேண்டும் என்பதையும் முன்வைத்து, தொடர்ந்து மக்களை அமைப்பாகத் திரட்டியவர் மக்பூல் பட். அவரது இறுதி ஆசையான, காஷ்மீரில் தன் உடலை அடக்கம் செய்வதைக்…

Read More