Author: எஸ். ஹபிபுர் ரஹ்மான்

1. “அவரை காப்பதற்கான பின்புற சக்தி இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்” 2. உங்களுக்கு அச்சுறுத்தல் என கூறி உள்ளீர்கள், ஆனால் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள் தான் அச்சுறுத்தலாக மாறி உள்ளீர்கள். நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்ச்சிகளை நீங்கள் தூண்டிய விதம் தற்போது நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள் ஒருவர்தான் காரணமாக உள்ளீர்கள். இதற்காக நீங்கள் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். 3. “அவர் எவ்வாறு விவாதத்தை தொடங்கினார் என்பதை அனைவருமே பார்த்தோம். இப்படி பேசுவதெல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றுவேறு கூறிக்கொள்கிறார். இது மிகவும் வெட்கக்கேடாக இருக்கிறது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமுமே மன்னிப்பு கேட்க வேண்டும்”. 4. “இவரின் தேவையில்லாத பேச்சு ஒட்டுமொத்த நாட்டையுமே தீக்கிறையாக்கிவிட்டது”. 5. “இந்த நிகழ்ச்சியின் நிரலில் உள்ளதை பேசுவதை விட்டு இப்படி பொது இடங்களில் பேச தடை விதிக்கப்பட்டுள்ள விஷயங்களை குறித்து…

Read More

அஸ்ஸலாமு அலைக்கும்.. கடந்த ஜூன் 11ஆம் தேதி என்னுடைய கணவர் ஜனாப் ஜாவேத் அகமது போலீசால் ஜோடிக்கப்பட்ட மற்றும் போலி வழக்குகளில் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று சிறைச்சாலையின் அதிகாரிகள் சிறையில் அவரின் இருப்பை மறுத்துள்ளனர். குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகாலையிலிருந்தே அவரை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொகின்றனர் ஆனால் இதுவரை அலகாபாத் மாவட்ட மற்றும் நைனி சிறைச்சாலையின் அதிகாரிகள் இன்னும் என் கணவர் எங்கு இருக்கின்றார் என்பதை உறுதியாக சொல்லவில்லை. என் கணவர் உட்பட நைனி சிறைச்சாலையில் இருந்த பல கைதிகள் உ.பி முழுவதும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப் பட்டுள்ளனர் என்பது போன்ற பல வதந்திகள் ஊடகங்கள் மற்றும் பிறரிடமிருந்து வந்து கொண்டே இருக்கிறது.‌ இதனடிப்படையில் இவர்கள் தற்போது தியோரியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதில்களும் எங்களுடைய வழக்கறிஞருக்கு அதிகாரிகள் மூலமாக வரவில்லை. எங்களுடைய குழந்தைகள் அவரது பாதுகாப்பு…

Read More

முஹம்மது நபியை குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் பெருவாரியான மாவட்டங்களில் நுபுர் சர்மாவினை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற போராட்டமும் அதனைத் தொடர்ந்து வன்முறையும் வெடித்ததன் விளைவு இதுவரை 109 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, மொராதாபாத், ஷஹரான்பூர் மற்றும் ஃபெரோஸாபாத் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தினர். ஷஹரான்பூரில் 38 நபர்களும், அம்பேத்கர் நகரில் 23 நபர்களும், பிரயாக்ரஜ் பகுதியில் 15, ஹத்ராஸில் 24, மொராதாபாத்தில் 7 நபர்களும் மற்றும் ஃபெரோஸாபாத்தில் 2 நபர்களும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் இஸ்லாமியர்களே. லக்னோவின் தலைமை போலீஸ் அதிகாரி பிரஷாந்த் குமார் கூறுகையில், “கல்லெறிதல் நிகழ்வு இருபுறமும் சிறிது நேரத்திற்கு நடைபெற்றது, ஒரு RAF காவலாளி செங்கல் மூலமாக தாக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் ஷஹரான்பூர், ஃபெரோஷாபாத் மற்றும் மொராதாபாத் ஆகிய பகுதிகளில்…

Read More

சமீபத்தில் செய்யப்பட்ட ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்காண பாடநூல் திருத்தம் கர்நாடகாவில் அரசியல் சர்ச்சையை உருவாகியுள்ளது. ரோகித் சக்ரதீர்த்தா தலைமையிலான 7 பேர் கொண்ட பாடநூல் திருத்தக் குழு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள சமூகவியல் மற்றும் கன்னட பாடப்புத்தகங்களில் திருத்தங்களையும் மற்றும் சில புதிய விஷயங்களையும் சேர்த்துள்ளது. இந்த “திருத்த நடவடிக்கைகள்” ஜனநாயக, சமத்துவ மற்றும் சமூகநீதி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதா எனும் கேள்வியை ஏற்படுத்துகிறது. The National Coalition On The Education Emergency (NCEE – கல்வி அவசியமில்லை குறித்த தேசிய கூட்டணி) இனம் நாடு முழுவதும் உள்ள தனி நபர்கள் குழுக்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய அமைப்பு இந்தப் பாடத்திருத்த திட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெறக் கோரியும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சமீபத்திய திருத்தம் பிற்போக்கானதாகவும், தன்னிச்சையான, முறையிலும் ஒரு வலிமையான நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்ட…

Read More

ஜோசப் சிரில் பாம்போர்ட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் 1945ல் உருவாக்கியதுதான் ஜேசிபி என்ற எந்திரம். ‘ஜிஹாத் கண்ட்ரோல் போர்ட்’ என்பதுதான் தற்போது சங்கிகள் ஜேசிபி இயந்திரத்திற்கு அளித்துள்ள புதிய பெயர். முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பாசிச பாஜக அரசுகள் கையாளும் புதிய ஆயுதம் இந்த இயந்திரம். அதற்கான அங்கீகாரம்தான் பாசிச பாஜகவினர் அதற்கு கொடுத்துள்ள பெயர் மாற்றம். ‘புல்டோசர் பாபா’ என்ற பெயரில்தான் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அழைக்கப்படுகிறார். மிகவும் மரியாதையுடன் இந்தப் பெயரால் பாஜகவினர் அவரை அழைக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை புல்டோசரால் அவர் எதிர் கொள்வதால் இப்பெயரால் அவர் அழைக்கப்படுகிறார். தன்னை விமர்சிப்பவர்களின், தனக்கு எதிராக செயல்படுபவர்களின் இருப்பிடங்களையும் அலுவலகங்களையும் வியாபார நிறுவனங்களையும் புல்டோசரால் இடித்துக் தள்ளும் பழிவாங்கும் நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் மேற்கொண்டு வருகிறார். உத்திரபிரதேசத்தின் புல்டோசர் கலாச்சாரம் மத்தியப் பிரதேசத்திற்கும் பரவி வருவதை சென்ற வாரம் நாம் பார்த்தோம். இராமநவமி கொண்டாட்டங்களின் போது …

Read More

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தின் PU அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணியும் காரணத்தால் முஸ்லிம் மாணவிகள் கடந்த மூன்று வாரங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கப் படாமலும் வருகை பதிவு மறுக்கப்பட்டும் இருக்கிறது. “இன்று எங்களை படிக்கட்டில் அமர வைத்தனர். இது எங்களுக்கு அசௌகரியத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வகுப்பிற்குள் இருக்கும் மற்ற மாணவர்களிடம் இருந்து பாட குறிப்புகளை கடன்வாங்கி எங்களுக்குள் நாங்களே பாடங்களை படித்துக் கொள்கிறோம். இதுவரை நாங்கள் மூன்று வார வகுப்புகளை தவறவிட்டுடிருக்கிறோம் மேலும் இதனால் எங்களுக்கு இந்த ஆண்டின் வருகை பதிவேட்டின் தேர்ச்சி பாதிக்கப்படலாம்”-ஆலியா பாதிக்கப்பட்ட மாணவி. அக்கல்லூரியில் உள்ள முஸ்லிம் மாணவிகள். தங்களின் ஹிஜாபை கழற்ற கட்டாயப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.இஸ்லாமியர் எனும் காரணத்தால் ஆசிரியர்களால் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.-ABVP ன் பேரணியில் காவி கொடிகளை ஏந்தி கலந்துகொள்ள கட்டாயப் படுத்தப் பட்டிருக்கின்றனர்.-அஸ்ஸலாமு அலைக்கும் சொல்ல தடை விதிக்கப்பட்டிருக்கின்றனர். தலையில் துப்பட்டா அணியும் காரணத்தால் மாணவிகள் தங்கள் மூத்த மாணவர்களின் தொல்லைகளுக்கும்…

Read More

மும்பையில் உள்ள இளம் தொழிலதிபரான ஷானவாஸ் ஷேக் எனப்படும் நபர் மும்பையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனக்கு மிகவும் விருப்பமான எஸ்.யூ.வி காரை விற்று இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். யுனிட்டி அன்ட் டிக்னிடி பவுன்டேசன் (ஒற்றுமை மற்றும் கண்ணியம் பவுன்டேசன்) என்ற என்.ஜி.வோவை ஆரம்பித்த இவர் கடந்த 2020 ம் ஆண்டிலிருந்தே தன் சேவையை தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் இவர் லாக்டவுன் காலத்தில் பாதிக்கப்பட்ட மும்பையின் சேரி பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல், அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்துதல், இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் தாய்நிலம் செல்ல உதவி செய்வதல் போன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார்.தன்னுடைய போர்ட் என்டோவர் காரை ஆம்புலன்ஸாக மாற்றியும் மக்களுக்கு பயன்தரும் வகையில் உதவிவந்தார். பின்பு ஒருநாள் அவரின் நண்பரும் அவருடைய தொழில் கூட்டாளருமான அப்பாஸ் ரிஸ்வி என்பவரின் சகோதரி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார்.மேலும்…

Read More

நாம் வாழும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டில் வாழும் குடிமக்கள் அனைவரும் தான் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுக்கவும் தான் விரும்பிய மனிதரை திருமணம் செய்யவும். நம் அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. அப்படிப்பட்ட இந்நாட்டில் ஒரு பெண் தான் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுத்ததற்காகவும். தான் விரும்பிய மனிதரை திருமணம் செய்தார் என்ற காரணத்திற்காகவும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு மனநோயாளி என்று முத்திரைகுத்தப்பட்டார் என்று கூறினால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆம். உன்மைதான். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் தான் சகோதரி அகிலா அசோகன் (எ) ஹாதியா ஷப்பீன்‌. இவர் டிசம்-9-1991 அன்று கேரளாவில் உள்ள கோட்டயத்தில் அசோகன் மற்றும் போன்னம்மாள் தம்பதியினருக்கு பிறந்தார். இவரின் தந்தை நாத்திகவாதியாகவும் தாய் இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவராகவும் இருந்தனர். இளம் வயதிலேயே இவர் தன் தாயுடன் சேர்ந்து இந்து மதத்தை வழிபட்டு வந்தார். இவர் கடவுள் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை உள்ளவராக இருந்தார்.…

Read More