Author: எஸ். ஹபிபுர் ரஹ்மான்

நபீலா இஸ்லாம், பங்களாதேஷில் இருந்து குடி பெயர்ந்தவர்களின் மகளான இவர் ஜார்ஜியா மாகாண செனட் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண். நபிலா இஸ்லாம் (32) இவர் ஜார்ஜியா மாகாண செனட் தேர்தலில் அட்லாண்டா எனும் புறநகர் மாவட்டத்தை பிரநிதிப்பபடுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அமெரிக்க இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இந்த நபீலா, பங்களாதேஷிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பங்களாதேஷ் உழைப்பாளர் வர்கத்தை சேர்ந்தவர்களின் மகள். “கடும் போட்டி வாய்ந்த இந்த ஆண்டில் நாங்கள் 53 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளோம். எங்களுடைய இந்த வெற்றி அளவானது எங்களின் திறமையான குழு மற்றும் கடினமாக உழைத்த தொண்டர்களாலேயே சாத்திய பட்டுள்ளது. நாங்கள் வலிமையான பிரச்சாரத்தை நடத்தி கடுமையாக போராடினோம். மாநில செனட்டில் தங்களின் குரலாக நான் ஒழிப்பேன் என்று என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.” என்று தனது ரிப்பேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குவின்னட் கவுண்டி எனும்…

Read More

பாத்திமா லத்திப்பின் மரணம் தொடர்பான சிபிஐ அறிக்கையை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர் புதிய விசாரணை கோரியுள்ளனர். இன்று நவம்பர் 9 – 2022 -டோடு 19 வயதான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸில் முதுகலை மானுடவியல் மாணவி பாத்திமா லத்தீப் தன்னுடைய விடுதி அறையில் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு சீ.பி.ஐ தங்களுடைய விசாரணையை நிறைவு செய்த நிலையில் பாத்திமாவின் குடும்பத்தினர் அதன் அறிக்கையில் நிறைவடையவில்லை. சிபிஐ பாத்திமாவின் மரணத்தை வீட்டு நினைவால் செய்துகொள்ளப்பட்ட தற்கொலை என்று கூறியுள்ளது. இந்த முடிவானது பாத்திமாவின் இறுதி கடிதத்தில் அவர் “தன்னுடைய மரணத்திற்கு காரணம் சுதர்சன் பத்மநாபன் தான்” என்று குறிப்பிட்டதற்கு முரணாகவும் மேலும் அவர் சந்தித்த மனநல துன்புறுத்தல்கள் குறித்தான சாத்திய கூறுகளை நிராகரிப்பாதாகவும் இருந்துள்ளது. இந்த சுதர்சன் பத்மநாபன் என்பவர் ஐஐடி மெட்ராஸின், தத்துவவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் இணை…

Read More

“நம்பத் தகுந்த சான்றுகள் இல்லை” என்று கூறி டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் வாலிபரை விடுவித்த நீதிமன்றம் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் முஸ்லிம் இளைஞர் நூர் முகமதுவிற்கு எதிராக டெல்லி காவல்துறையினரால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் டெல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. “குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்த விதமான வெளிப்படையான ஆதாரங்களும் இல்லை மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்காக இருக்கும் நான்கு சாட்சியங்களுமே நிலையானதாக இல்லை” என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக லைவ் லா இணையதளம் குறிப்பிட்டுள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி புலத்ஷ்யா பிரம்சலா நூற் முகம்மதின் மீது 1860, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 147, 148, 427, 436 மற்றும் 149 ஆகிய பிரிவுகளில் போடப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்துமே விடுவித்துள்ளார். இந்த முஸ்லிம் இளைஞர் கஜூரி காஸ் எனும் காவல் நிலையத்தில் சீமா அரோரா எனும் பெண், தன்னுடைய கடை…

Read More

ராதிகா வெமுலா, தலித் உரிமைகள் ஆர்வலர் மற்றும் தலித் ஆராய்ச்சி மாணவர் மற்றும் தன்னுடைய தற்கொலையின் மூலம் 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்ட ரோஹித் வெமுலாவின் தாய் ஆவார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்ரா கலந்து கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை, ராதிகா வெமுலா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் அவருடைய தேசம் தழுவிய பேரணி தெலுங்கானா தலைநகரத்திற்குள் நுழையும் போது இணைந்துள்ளார். ராதிகா விமுலா தன்னுடைய டுவிட்டர் பதிவில் “@பாரத் ஜோடோ யாத்ராவிற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், மற்றும் ராகுல் காந்தியுடன் அவரது @இந்திய தேசிய காங்கிரசை பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இன் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குவதை தடுப்பதற்காகவும், ரோஹித் மெமோலாவிற்கு நீதி கிடைப்பதற்காகாவும், ரோஹித் வெமுலா சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தலித்களின் பங்களிப்பை உயர்த்துவதற்கும், உயர் நீதித்துறையில் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களை சேர்ப்பதற்கும்,…

Read More

குஜராத் மாநிலத்தில் ஒரு முஸ்லிம் ஆண் அவரது பெற்றோர்கள் மற்றும் மத குருக்கள் அவர்களைத் தொடர்ந்து தங்களுக்குள்ளேயே இந்த பிரச்சனையை தீர்த்துக் கொண்ட கணவன் மனைவி ஆகியோர் மீது மாநிலத்தின் ‘லவ் ஜிகாத் தடை சட்டத்தின்’ கீழ் பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் – ஐ குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த எஃப்.ஐ.ஆர் – ஐ தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வது என்பதானது தரப்பினர்களுக்குத் தேவையற்ற துன்புறுத்தலே தவிர வேறில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. லைவ் லா – வின் படி. நீதிபதி நிர்மல் ஆர். மேத்தா இந்த எஃப்.ஐ.ஆர் – ஐ ரத்து செய்து மற்றும் அதை தொடர்ந்து எழும் அனைத்து குற்றவியல் நடவடிக்கைகளையும் ஒத்தி வைத்துள்ளார். அந்த எஃப் ஐ ஆர் இன் படி, வழக்குப் பதிவு செய்த அந்த பெண் தன்னுடைய கணவர் சமீர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் மற்றும் அவர்களது திருமணத்தை நடத்தி வைத்த மத…

Read More

ஹிஜாப் வழக்கில் இரட்டை தீர்ப்பு: நீதிபதி துளியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், நீதிபதி குப்தா ஹிஜாப் தடையை ஆதரித்தும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். உடுப்பியில் முன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மாணவிகள் வகுப்பறைகளில் ஹிஜாப் அணியும் உரிமையைக் கோரி தொடர்ந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் மார்ச் 15 அன்று தள்ளுபடி செய்த தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை வியாழக்கிழமையன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி ஹேமந்த் குப்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹிஜாப் ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படை கடமை இல்லை என்று கூறி அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் முக்காடு அணிய தடை விதித்து தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட 26 மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார். நீதிபதி சுதர்ன்ஷூ துளியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து மதத்தின் அடிப்படை கடமையா எனும் முழே கருத்தை குறித்த சர்ச்சையே…

Read More

“ஏதோ ஒரு தூண்டுதலின் அடிப்படையில் என்ன நிகழும் என்பதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் நான் குதித்து விட்டேன்.” என்று கூறுகிறார் முஹம்மது மாணிக், இவர் மேற்கு வங்கத்தின் மல்நடி எனும் இடத்திற்கு அருகில் நடந்த துர்கா பூஜை விழாவில் ஆற்று நீரில் மூழ்கவிருந்த ஒன்பது பேரை காப்பாற்றி தற்போதைய இணையதள பிரபலமாக திகழ்கிறார். எதிர்பாராத விதமாக அந்த திடீர் வெள்ளத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாணிக், மல்பஜார் எனும் கிராமத்திற்கு அருகே உள்ள மேற்கு திசிமாலா எனும் பகுதியை சேர்ந்தவர். வெல்டராகிய இவர் தன் மனைவி, ஆண் குழந்தை, தன் இளைய தம்பி மற்றும் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். “அனைத்து வருடங்களையும் போல்தான், நான் துர்கா பூஜாவிற்கு சென்று கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு திருவிழாவை ரசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த ஆண்டானது என்னுடைய வாழ்க்கையின் மிகவும் வேதனை மிகுந்த நேரமாக மாறிவிட்டது” என்று முகமது மாணிக் மக்தூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.…

Read More

கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நடந்த தசாரா ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த சில நபர்கள் வலுக்கட்டாயமாக அப்பகுதியில் உள்ள மஹ்மூத் கவான் எனும் மதரஸாவிற்குள் நுழைந்து அவ்வாளாகத்தினுள் ஹிந்துமத கோஷங்களை எழுப்பியும் மற்றும் ஹிந்து சடங்குகளையும் செய்துள்ளனர். 15 ஆம் நூற்றாண்டில் பிதார் பகுதியில் கட்டப்பட்ட இந்த முகமது கவான் மதரஸாவானது இந்திய தொல்லியல்துறை கணக்கெடுப்பின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. NDTV – ன் அறிக்கைப்படி இச்சம்பவம் தொடர்பாக 9 நபர்களின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமைக்குள் இது தொடர்பான யாரும் கைது செய்யப்படவில்லை என்றால் போராட்டங்களை நடத்தப் போவதாக முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவின் மூலம், இந்தக் கூட்டமானது மதரஸாவின் பூட்டை உடைத்து விட்டு உள்ளே சென்று பின் மதரஸாவின் படிகட்டுகளின் மேல் ஏறி நின்று “ஜெய் ஸ்ரீ ராம்”…

Read More

புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் – கர்ளாவி எகிப்தில் பிறந்தார். சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் ஒன்றியத்தின் முன்னாள் தலைவராக திகழ்ந்த இவர் இன்று (26/09/2022) இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார். என்று அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது 97 வயதாகிறது. இவர் முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஆன்மிக தலைவராக திகழ்ந்தவர் மேடம் எகிப்தில் முதன்முறையாக ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் (முகமது மூர்ஸி 2013) கவிழ்க்க நடத்தப்பட்ட சதிகளை கடுமையாக விமர்சித்தவர். மூர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஹோஸ்னி முபாரக் அதிபராக பதவியேற்ற பிறகு கர்ளாவியால் எகிப்திற்குள் மீண்டும் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. அல் – கர்ளாவி 120க்கும் மேற்பட்ட நூற்களையும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் எழுதிக் குவித்துள்ள இமாம் அவர்கள், முஸ்லிம் சமூகத்தை குறிப்பாக இளைய சமூகத்தை மேற்கத்திய கருத்தியல்/வாழ்வியல் பிடியிலிருந்து விடுவித்து இஸ்லாமிய வாழ்வியலின் படி வழிநடத்துவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டவர். இவரின் படைப்புகளில் மிகவும்…

Read More

ஹிஜாப் பெண்களுக்கான கண்ணியத்தை சேர்க்கிறது – ஹிஜாப் வழக்கின் செவ்வாய்க்கிழமை விசாரணையில் வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ். ஹிஜாப் கண்ணியத்தை வழங்குகின்றது மற்றும் அதை அணியும் பெண்ணை புனித படுத்துகிறது அதாவது ஒரு இந்து பெண் தலையை மறைப்பது போல் தான் இதுவும் இதுவும் மிகப் புனிதமானது என்று ஹிஜாப் தடையை எதிர்த்த வழக்கு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடந்த அமர்வில் கூறியுள்ளார். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அதன்சு துளியா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரர்களின் தரப்பு வாதங்களை கேட்டனர். அதில் வழக்கறிஞர் தேவ் “ஹிஜாப் முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தை வழங்குகிறது மேலும் இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் 21 கீழ் பாதுகாக்கப்பட்ட உரிமை என்றும் அது எவ்விதமான பொது ஒழுங்கையும் பாதிக்காது மற்றும் பிற மதத்தினரின் நம்பிக்கைகளையும் எந்தவகையிலும் பாதிக்காது. ஹிஜாப் அணிந்து பணி பெண்களால் யாருடைய அமைதிக்கும்…

Read More