மெல்ல திரை விலவதாய் தோன்றுகிறது. விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்தவரைலும் ‘டெல்லிமாநாடு’ என்ற வார்த்தை வெளிப்படவே இல்லை. தமிழகத்தின் முதல் உள்ளூர் தொற்றான மதுரை நோயாளியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது கூட அவருக்கு கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும் எனவே கொரோனாதான் என உறுதியாகச் சொல்லவியலாதெனவும் தெரிவித்தார். பின் மறுநாள் காலை அந்த மதுரை நோயாளி மரணச்செய்தி வெளியானது. அப்போதுகூட முஸ்லிம்கள் குறித்து எதிர்மறை சித்திரம் எதுவும் வரையப்பட்டிருக்கவில்லை. பின் காட்சி மாறி விஜயபாஸ்கர் ஓரங்ட்டப்பட்டு சுகாதாரத்துறை செயலர் ஊடகங்களை சந்திக்கிறார். ‘டெல்லி மாநாடு, முஸ்லிம்கள்’ என்ற பதம் கொரானாவை விட வேகமாக பரவுகிறது. சொல்லி வைத்தாற்போல திடீரென தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. கொரோனா தொற்றாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தனை முஸ்லிம்களுக்கும் உண்மையிலேயே முறையான சோதனை நடத்தப்பட்டிருக்கிறதா? ரத்தமாதிரி மற்றும் பிற பரிசோதனை முடிவுகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? எனில் சர்வதேச முடிவுகளின் அடிப்படையில் அது ஒத்துப் போகக்கூடியதுதானா? இவர்கள்…