அறியப்பட்ட வரலாற்றுச் சான்றுகளின்படியேகூட, தமிழகம் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு அந்நியமான பூமியல்ல! சமண – பௌத்த; சைவ – வைணவ மத மாற்றங்கள் தொடர்ந்து அரசியல் அதிகாரப் போட்டியோடு நடைபெற்ற மண் இது. பின்னை நாட்களில், கிறிஸ்தவமும், இஸ்லாமும் இப்பட்டியலில் சேர்ந்தன என்பதாலும், இவை இரண்டும் வேறு புவியியல் பகுதியிலிருந்து இங்கு வந்தவை என்பதாலும், இந்தியாவில் உதித்த (சனாதன இந்து அல்லாத) ஏனைய மதங்கள் இன்று ‘இந்து’ மதத்தால் உட்கொள்ளப்பட்டன என்பதாலும், இன்றைய “மதமாற்றம்” என்ற சொற்றொடர் அந்நியமாய் – வெளியே வைத்துப்பார்க்கப்படுவதையும், அது நேரடியாக “இந்து விரோத” காரியமாகப் பார்க்கப்படுவதையும் நாம் நேர்மையோடு உணர்ந்திட வேண்டும். இந்த வரலாற்றுப் பக்கங்களை கவனிக்காமலும், அல்லது வேண்டுமென்றே விலக்கியும் வைத்துதான் பலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். அந்த வகையில் தான் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ‘மதமாற்றம் ஒரு வன்கொடுமை’ என்ற நூல் மதமாற்றத்தை ஒரு பெரும் குற்றமாக – வன்முறையாக -…