தேசியவாதம் என்றால் என்ன? இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசியவாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’, ‘தேசியவாதம்’, ‘தேசம்-நாடு’ போன்ற பதங்கள், 17-ம் நூற்றாண்டில் வெஸ்ட்பேலியா அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தன. ஐரோப்பிய தேசியவாதம் ஐரோப்பாவின் தேசியவாதம் மூன்று முக்கிய இயல்புகளைக் கொண்டிருந்தது. முதலாவதாக, ஐரோப்பிய தேசியவாதம், ஒட்டுமொத்த மக்களை உள்ளடக்கியதாக ஒருபோதும் இருந்ததில்லை; ‘தேச’த்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்கூட. அது எப்போதுமே ‘உள்ளுக்குள் எதிரி’ (உதாரணத்துக்கு யூதர்கள்) என்ற கருத்தாக்கத்தை எழுப்பிக்கொண்டேயிருந்தது. இரண்டாவதாக, அது ஏகாதிபத்தியத் தன்மை கொண்டதாகவே இருந்தது. மூன்றாவதாக, தேசம் என்பது தன்னளவில் உச்ச வடிவத்தை அடைந்தது. தேசத்தை வலுவாக்குவது பரவலான கருத்தாக இருந்தது. ஏனைய நாடுகளை ஒப்பிட, மிகப் பிற்காலத்தில், 19-ம் நூற்றாண்டில் உருவான தேசமான ஜெர்மனி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியது. தேசியவாதம் என்ற கருத்தாக்கத்தில் மற்ற நாடுகளைவிட உறுதியானதாக…
Author: ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V
இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது? இன்று தமிழினம் ஈழத்திலும் தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இதுகுறித்த அக்கறையும், கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. நம்மால் மக்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே. அதற்கான நமது சிந்தனைகள் எல்லாம் அடிப்படையில் பகுத்தறிவின் மீது கட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மக்களுக்கு சிக்கல்களைப் பகுத்தறிவைக் கொண்டு விளக்கிப் புரியவைத்தால், மக்கள் ஒன்று திரண்டு ஆதரிப்பர் என்ற எண்ணம் இருக்கிறது. இப்பொழுது இந்த கருதுகோள் தவறு என்றால் என்னவாகும்? அரசியலில் உணர்வும், பகுத்தறிவும்: பொதுவாக மனிதன் பகுத்தறிவானவன் என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே அரசியல் செயல்பாடுகள் அலசப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் மக்கள் அரசியலைப் பற்றி சிந்திப்பதில்லை, மாறாக அவர்களின் உணர்வுகளின் வழியாக அரசியலைப் பார்த்து எது…
பொதுமக்கள் மத்தியில் தமிழ் தேசியம் என்கிற ஒரு அடிப்படை சிந்தனை தோன்றி தொடர்ந்து உரையாடப்பட்டும் வருவதில் இருந்து தமிழ் தேசியம் ஏன் முக்கியமாக கருதப்படவேண்டும் என்னும் அடுத்த கட்ட உரையாடலுக்கு நாம் செல்லவேண்டியது அவசியம். ஆகவே, பொதுக்கொள்கையோ தனி தலைவனோ இல்லாத தமிழ் தேசியம் அடிப்படையில் ஒரு மக்கள் இயக்கமாக இருப்பதையே நாம் கவனப்படுத்துதல் அவசியமாகிறது. தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம், நீண்ட காலமாக தமிழ்ச் சமுதாயத்தின் உள்ளத்தில் கிளர்ந்த அரசியல் மற்றும் மனித உரிமை மீட்சியின் கூட்டு வெளிப்பாடாக அமைகிறது. ஆக தமிழ் தேசியம் என்பது தங்கள் அரசியல் உரிமையைக் கோர விளையும் ஒரு இனத்தின் ஒளிவு மறைவு அற்ற உள்ள வெளிப்பாடு என்றே கொள்ள முடியும். ஆகவே தமிழ் தேசியம் தற்போது பரவலாக பேசப்படுவது போல் அரசியல் தளத்தில் விவாதிக்கப்படும் ஆற்றலை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதே தெளிவு. மாறாக, அச்சிந்தனை போக்கை உணர்ச்சிமிகு அரசியலாகவும் பாசிச இனச்சிந்தனையாகவும்…
தமிழ்த் தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள். தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரிடம் அது குறித்த ஒத்த கருத்து இல்லை. இதனால் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படும் குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏராளம். இந்நிலையில் தமிழ்த்தேசியம் என்பதன் சாரம் என்ன, அதன் நோக்கம் என்ன என்பதைப் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாக உள்ளது. தேசியவாதம் என்றால் என்ன? இந்தக் கேள்வியை நாம் கேட்டே ஆக வேண்டும். தேசியவாதம் என்பதன் பொருள்தான் என்ன? இதற்கான விடை, பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அத்தனை எளிதானதல்ல. ‘தேசியம்’, ‘தேசியவாதம்’, ‘தேசம்-நாடு’ போன்ற பதங்கள், 17-ம் நூற்றாண்டில் வெஸ்ட்பேலியா அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் ஐரோப்பாவில் புழக்கத்துக்கு வந்தன. ஐரோப்பிய தேசியவாதம் ஐரோப்பாவின் தேசியவாதம் மூன்று முக்கிய இயல்புகளைக் கொண்டிருந்தது. முதலாவதாக, ஐரோப்பிய தேசியவாதம், ஒட்டுமொத்த மக்களை உள்ளடக்கியதாக ஒருபோதும் இருந்ததில்லை; ‘தேச’த்தின்…
தமிழ் தேசியம் குறித்து விவாதிக்கும் பொதுவான நிலைகள் இரண்டு அடிப்படை வினாக்களில் இருந்து துவங்குவது எளிமையான அணுகுமுறையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏன்? எப்படி? என்ற மூல கேள்விகளுடன் தமிழ் தேசியத்தை தொடர்பு படுத்தி விவாதிப்பதன் வழி தமிழ் தேசியத்தின் உள்ளடக்கத்தையும் அதன் போதாமைகளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன். முதலாவதாக தமிழ் தேசியத்தின் தேவை என்ன? என்பதிலிருந்து இது குறித்த உரையாடலை தொடங்க முடியும் என்றாலும் தமிழ் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த தெளிவு மிக முக்கியமாகும். ஆனால் துரதஷ்ட வசமாக ‘இதுதான் தமிழ் தேசியம்’ என்று அறுதியிட்டுக் கூறக் கூடிய உறுதியான; எல்லாரும் ஏற்றுக் கொண்ட கொள்கை வரையறையை தமிழ் தேசியம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. தமிழ் தேசியம் ‘தமிழ்த் தேசியம் ஒரு பல்முக சிக்கலான கருத்துருவம். அனைவரும் ஏற்றுக்கொண்ட அல்லது நிலையான வரையறை தமிழ்த் தேசியத்துக்கு இல்லை. பல்வேறு காலகட்டங்களில், சூழமைவுகளில், நிலைகளில்…
1.தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்திலிருந்து கோட்பாட்டு வரையறைகளின் அடிப்படையில் முற்றிலும் மாறுபட்டது ஆகும். இந்தியத் தேசியம் பிரிட்டிசு குடியேற்றக் காலத்தில் உருவான அரசியல் கருத்தாக்கமாகும். தமிழ்த்தேசியம் அதே குடியேற்றக் காலத்தில் உருவானதாக இருப்பினும் அடிப்படையில் மொழியினச் சமூக அடிப்படையில் உருவானதாகும். 2.இந்தியத்தேசியம் பிரிட்டிசு எதிர்ப்பில் ஒருங்கிணைந்த பல்வேறு தேசிய இனங்களின் கூட்டிணைவின் விளைவாக உருப்பெற்றது. பிரிட்டிசு ஆட்சிக்குப் பின் இந்தியத்தேசியம் பிரிட்டிசு இந்தியாவை பல மாறுதல்களுடன் தனதாக்கிக்கொண்டது. வரையறைகள் ஏதுமற்று, தமது குடியேற்ற நலனுக்கும் சுரண்டல் வசதிக்கும் ஏற்ப பல்தேசிய மக்களை வலுக்கட்டாயமாக இணைத்து பிரிட்டிசார் இந்தியா எனும் அரசுக்கட்டமைப்பை உருவாக்கினர். அதனூடாக வளர்ந்த இந்தியத் தேசியம் தன் பெயர் உட்பட அனைத்திற்கும் பிரிட்டிசாரையே சார்ந்து நின்றது. பாகிஸ்தானும் பங்களாதேசும் இலங்கையும் பர்மாவும் பிரிட்டீசு இந்தியாவில் உள்ளடங்கியிருந்தன. அவை தனித்தனியே பிரிந்துசென்றுவிட்ட போதிலும் இந்தியா எனும் கட்டமைப்பு தொடர்கிறது. இதுவே, வரையறையற்ற, கற்பிதமான இந்தியத்தேசியக் கருத்தாக்கத்தின் தன்மைக்கான சான்றாக உள்ளது. 3.தமிழ்த்தேசியம் என்பது…
தேசம் :- வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுமொழி, பொதுவான பொருளாதார வாழ்வு மற்றும் நாமெல்லாம் ஓரினம் என்ற உணர்வு 3 தேசம் :- வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுமொழி, பொதுவான பொருளாதார வாழ்வு மற்றும் நாமெல்லாம் ஓரினம் என்ற உணர்வு. தேசியம் :— மேற்கண்ட தேசத்தின் தன்னுரிமை, விடுதலை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கருத்தாக்கம். தேசியவாதம்:- தேசியவாதம் என்பது நாட்டினம் ஒன்றின் மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல், உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு சமூக இயக்கம் என்ற வகையிலாவது, தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில்…
கௌதம் அதானி ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற புதிதாக வெளியிடப்பட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியல் என்கிற ஆய்வு தெரிவிக்கிறது. முதலாவது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். அதானியின் சகோதரரும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடத்திற்குள் முதல் முறையாக வந்திருக்கிறார். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூபாய்.1.4 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 5.05 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கௌதம் அதானி தான் இந்தியாவின் முதன்முதலாக ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள 5 கம்பெனிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். கோவிஷீல்டு தயாரிப்பு கம்பெனியான சீரம் இன்ஸ்ட்டியூட்டின் சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 1 லட்சம் கோடிக்கு கீழே இருந்தது. கோவிஷீல்டு மூலம் சம்பாதித்த இந்த ஆண்டில் 74 சதவிகிதம் அவரது சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் நிகர சொத்து மதிப்பு…
ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக (Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும். இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. 1.முதல் கட்டம் மரபு இனம் (Race) 2. அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality) ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர…
தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான், நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லிமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன் என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம். இனவியலும், இனவியல் போராட்டங்களும் ‘இனம்’ என்பது ஒரு மக்களின் மரபுக் கூறு சார்ந்ததோ அல்லது பண்பாடு சார்ந்ததோ மட்டும் அல்ல; அது ஒரு மக்கள் கூட்டம் மற்றொரு மக்கள் கூட்டத்தை ஒடுக்கி மேலாண்மை செய்யும் ஒரு ஒடுக்குமுறைக்கான கருத்தியலாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே இன ஒடுக்குமுறையும் இருந்து வந்திருக்கிறது. அது போன்றே, ஒரு மக்கள் கூட்டத்தை அணைத்து ஓர்மை உணர்வூட்ட உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் சக்தியாகவும் இன உணர்வு இருந்து வந்திருக்கிறது. இன்றுவரை வரலாற்றின் உந்து…