அசாருதீன் கேப்டனாக இருந்தபோதுதான் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன். பாகிஸ்தானுடனான ஏதோ ஒரு மேட்ச் அது. எங்கள் பக்கத்து வீட்டில் ஆங்கிலோ இந்திய குடும்பத்தினர் வசித்தார்கள். எங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர்கள். அவர்கள் வீட்டில் அவர்களோடு சேர்ந்து நான், அப்பா, தம்பி என ஒரு பெரிய கும்பலாக மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த வீட்டில் இருந்த வயசான அங்கிள் பழைய கிரிக்கெட் கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இப்படி பெரிய கும்பலோடு உட்கார்ந்து மேட்ச் பார்ப்பது ஜாலியாக இருந்தது. ஒருகட்டத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் பந்துகளுக்கு இந்திய வீரர்கள் வரிசையாக இரையாகிக் கொண்டிருந்தார்கள். எனக்கு சோகம் தொற்றிக்கொண்டது. ஆனால் அந்த அங்கிள் அதையும் ரசித்துக் கொண்டிருந்தார். வாசிம் அக்ரமின் யார்க்கர்களைச் சிலாகித்துப் பாராட்டினார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். பின் என் அப்பாவிடம் கோபமாக “என்னப்பா தேசப்பற்றே இல்லாம இருக்காரு?” எனக் கேட்டேன். அதிகம் தமிழ் தெரியாத அந்த அங்கிளுக்குப்…
Author: டான் அசோக்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என நாம் பாடத்தில் படித்திருக்கிறோம். அதை மோடியின் ஆட்சி தரைமட்டம் ஆக்கிக்கொண்டிருக்கிறது. உலகத்திலேயே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு ஆதரவாக ‘Pro CAA protest’ என்கிற பெயரில் ஒரு அயோக்கிய கூட்டம் போராடுகிறது என்றால் அது பாஜகவின் சங்கிக் கூட்டம்தான். இத்தனை நாட்கள் அமைதியாக போராடிய Anti CAA போராட்டக்காரர்களை அடித்து நொறுக்கவும் இஸ்லாமியர்களின் உடைமைகளை திருட்டு நாய்களைப் போல திருடிச்செல்லவும் மத்திய அரசின் ஆசீர்வாதத்தோடு இறங்கியுள்ளது இந்த வன்முறைக் கூட்டம். கேஜ்ரிவால் என்கிற டெல்லி எடப்பாடி, “போலீஸ் தன் கண்ட்ரோலில் இல்லை” என சொல்லிவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. சரி, போலீஸ்தான் அவரது கண்ட்ரோலில் இல்லை, குறைந்தபட்சம் அடிபட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூடச் சொல்லவில்லை இந்த சாஃப்ட் சங்கி. இந்திய சமூக அமைப்பு, சாதி அமைப்பு, மத அமைப்பு, சாதிய ஒடுக்குமுறை, பார்ப்பனீயம், மத துவேஷம் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் அறிவில்லாமல், வெறும்…