Author: முஹம்மது பஷீர்

தனிநபர் கருத்து பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட செயலிதான் வாட்ஸ் அப். இந்த செயலியின் மூலமாக பரப்பப்படும் செய்திகளை பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள் என கடந்த வியாழக்கிழமை ஆராய்ச்சி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியானது மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்படும் செய்திகளை எந்த அளவிற்கு நம்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவதற்காக நடத்தப்பட்டது ஆகும். குறிப்பாக இந்த ஆய்வு Facebook, Google, whats App, youtube போன்ற சமூக ஊடகங்களை மையமாக வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. பிரேசில், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. 77 சதவீதம் மக்கள் செய்தி தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகள் என செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை செய்திகளை நம்புகிறார்கள். 41% மக்கள் பேஸ்புக் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 27% மக்கள் இன்ஸ்ட்டாகிராம் செயலியின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 15% மக்கள் டிக் டாக்…

Read More

மீண்டும் ஃபலஸ்தீன் மீது யூத இஸ்ரேலிய அரசு குண்டு மலை பொழிவித்து ஃபலஸ்தீன சகோதர, சகோதரிகளை வஞ்சித்துள்ளது. தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளான ஐநா சபை, சமூக ஆர்வலர்கள், சமூக நீதிக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் எல்லாம் எங்கே என்ற கேள்வி இப்போதும் மறவாமல் எழுகிறது. திட்டமிட்டே ஒரு சமூகத்தின் மீது அரங்கேற்றப்படும் வன்முறைகள், அடக்குமுறைகள் எல்லாவற்றையும்வேடிக்கைப் பார்த்து கடக்கும் இந்த மனோபாவத்தைப் பார்க்கின்ற வேளையில் நீதிக்கானப் போராட்டத்தில் பாராபட்சம் காட்டுபவர்கள்தான் அடிப்படைவாதிகள், வர்க்கவாதிகள், சாதியவாதிகள் என்ற முடிவிற்கே வர மனம் எத்தனிக்கிறது. நீங்கள் பேசும் மனித ஜீவ அபிமானங்கள் யாருக்கானது? நீங்கள் பேசும் சமூகநீதி யாருக்கானது? நீங்கள் பேசும் சுதந்திரமும், உரிமைகளும் யாருக்கானது? நீங்கள் பேசும் சுதந்திரம், உரிமை இவையெல்லாம் நீங்கள் சார்ந்த சமூகத்துக்கானதுதான் என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், நீங்களும் ‘அநீதியாளர்களின் பங்காளிகள்’…

Read More

ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமாக முந்தைய தலைமுறையைவிட வித்தியாசமான தன்மைகள், குணநலன்கள், பண்புகள் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். முந்தைய தலைமுறையுடன் மாறுபட்டு இருப்பதுதான் இயற்கையும்கூட. ஏனெனில் பூலோக ரிதியாக அனைவரும் ஒரே இடத்தில் பிறந்தாலும் கூட, ஒவ்வொரு நபரும் பிறக்கின்ற காலம் அந்த காலத்தின் இயல்பும் பழக்க வழக்கங்களும் தலைமுறைகளுக்கிடையே பெரும் வித்தியாசத்தை உருவாக்குகிறது. அத்தகைய தலைமுறை மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டி.டி.எஃப் வாசன் எனும் இளைஞரை அவரது பிறந்தநாள் அன்று காண வேண்டி கூடிய கூட்டம் நமக்கு உணர்த்துகிறது. இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று அதனைப் படம் பிடித்து youtube , instagram போன்ற இணையதள பக்கத்தில் பதிவிடும் நபர்தான் இந்த டி.டி.எஃப் வாசன். வெறுமனே வாகனத்தில் சென்று அதனைப் பதிவிடும் நபரை இவ்வளவு இளைஞர்கள் பின்தொடர்கிறார்கள். இவ்வளவு இளைஞர்கள் அவரைக் காண உற்சாகமாக ஒன்று கூடுகிறார்கள் என்பது சமூக தலைவர்களிடம் சமூக செயற்பாட்டாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read More

பாஜக அரசானது தன்னை மிகவும் வலிமையான சக்தியாக, யாராலும் தகர்க்க முடியாத சக்தியாக மக்களின் மனதில் நிறுவ முயல்கிறது. எனவேதான் தன்னை எதிர்த்து கேள்வி கேட்கும், எதிர்த்து நிற்கும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் களப்போராளிகளையும் அச்சுறுத்தி எதிரிகளே இல்லாமல் ஆக்குவதற்கான அனைத்து வேலைகளையும் பாசிஸ மோடி அரசு செய்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே சமூகப் போராளியும் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தலைவருமான அஃப்ரீன் ஃபாத்திமா அவர்களின் வீடு சட்டத்திற்குப் புறம்பான முறையில் இடிக்கப்பட்டுள்ளது. இது இன்று நேற்று நடக்கின்ற நிகழ்வு அல்ல. பாசிசம் எல்லாக் காலத்திலும் தனது எதிரிகளைக் கண்டு அஞ்சியே வந்துள்ளது. அதன் காரணமாகவே சட்டத்திற்குப் புறம்பான வழியில் அவர்களின் மீது பொய்க் குற்றங்களை சுமத்தியும், கைது செய்தும், வாழ்க்கை வளங்களை அழித்தும் வந்துள்ளது.ஏனெனில் இந்த பாசிஸவாதிகள் நேரிடையாக கொள்கையிடனோ, சித்தாந்தத்துடனோ அல்லது நேர்மையான முறையில் சட்ட ரீதியாகவோ போராட வக்கற்ற முதுகெலும்பற்ற நபர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். ஒருவரின் வீடு என்பது…

Read More

நீங்கள் ஒரு சமூகத்தின் மீது சுமத்தும் ஒரு குற்றச்சாட்டை கடந்து வர‌ அந்த சமூகத்திற்கு பல ஜென்மங்கள் தேவைப்படும் என்று கூறி இஸ்லாமிய சமூகத்தின் வலியை திரையில் கொண்டுவந்து அதனை வெகுஜன மக்கள் விவாதித்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் அடுத்த பலியை சுமத்தியிருக்கிறது இன்னொரு கூட்டம். மாநாடு திரைப்படம் ஒரு சமூகத்தின் மீது எவ்வாறு தீவிரவாத பிம்பம் சுமத்தப்படுகிறது. அந்த அவப்பெயரின் காரணமாக அந்தச் சமூகம் எந்த அளவுக் கொடுமைகளை அனுபவிக்கிறது என்று கூறி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் வலியை பொதுச் சமூகத்தில் காண்பித்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் தங்களின் வலியை பொதுச் சமூகம் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதே என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு முன் சமூகத்திற்கான அடுத்த வேதனையாக வந்து நிற்கிறது அடுத்த குற்றச்சாட்டு. முகநூல் உபயோகிக்கும் பெண்கள் அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று ஓர் அறிவற்ற முஸ்லீம் எப்பொழுதோ பேசிய ஒரு வீடியோவை எடுத்துக்கொண்டு…

Read More

ஒரு தீமையைக் கண்டால் அதனை உங்கள் கைகளால் தடுங்கள் முடியாவிட்டால் வாயால் அதனை தடுங்கள், அதற்கும் முடியாவிட்டால் நீங்கள் முழுவதுமாக அதிலிருந்து விலகிவிடுங்கள . இதன் பொருள் ஒரு முஸ்லீம் சமூகத்தில் ஒரு தீமை ஏற்படும் நேரத்தில் அதனைக்கண்டு வெறுமனே இருத்தல் கூடாது என்பதுதான். இதில் முதலாவது நிலையாக இருக்கக்கூடிய கையால் தடுப்பது என்பது ஒரு தந்தை தனது மகனை கண்டிப்பது போன்று, ஒரு ஆசிரியர் தனது மாணவரை கண்டிப்பது போன்று. ஒருஅரசு அதிகாரி தனது மக்களுக்கு தண்டனை வழங்குவதை ஒத்ததுதான். ஆக மக்களை கண்டிக்கவேண்டுமானால் சமூகத்தின் மீது அக்கறையும் அன்பும் இருந்தால் மட்டும் போதாது அதற்கான அதிகாரமும் நமக்கு தேவை. இவ்வாறு சமூகத்தின் மீது அக்கரை உள்ள சமூகத்தை குறித்து கவலைப்டக்கூடிய நபர்தான் கேரளாவை சேர்ந்த அணீஸ் ரஹ்மான் அவர்கள். இவர் நேற்றைய தினம் டெல்லி பலகலைக்கழகத்திலிருந்து தனது LLB படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். மேலும் வழக்கறிஞராக பயிற்சி…

Read More

ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் கே.ஏ.சிதீக் ஹசன் சாகிப் அவர்கள் ,  தனது உடல் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், சொற்பொழிவாளர், இஸ்லாமிய அறிஞர் மற்றும் சமூகத்துக்காகவும் அடித்தட்டு மக்களுக்காகவும் நாள்தோறும் உழைக்கக் கூடியவர். ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் துணைத்தலைவர் மற்றும் தலைவராக நான்கு முறை திகழ்ந்துளார்(1990 முதல் 2005 ஆம்ஆண்டு வரை). பள்ளிகள், வீடுகள், பொது கிணறுகள், மசூதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை வழங்கி சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக செயல்படும் டெல்லியை அடிப்படையாக கொண்ட மனித நல அறக்கட்டளை( Human Welfare Foundation Vision 2016 ) விஷன் 2016 திட்டத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் பேராசிரியர் ஹசன் அவர்கள் இருந்தார். இந்தியாவில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்காக அவர் பல திட்டங்களுக்கு, குழுக்களுக்கு  தலைமை தாங்கினார். விஷன்  2016 (தற்பொழுது , ​​விஷன்  2026). மிகப்பெரிய அளவில் சமூகத்துக்கு பயனளிக்ககூடிய மிகப்பெரிய…

Read More

சட்டக் கல்லூரியிலும் மீறப்படுகிறது சட்டம் … நீதியை வகுப்பறையில் பேசினால் சஸ்பெண்ட் களத்தில் பேசினால் குண்டர் சட்டம் மீறியும் பேசினால் கொலை அதையும் மீறினால் எதையும் செய் ஆனால் ஒன்று மட்டும் சத்தியம் பேச உன்னிடம் இடமில்லையெனில் உன்னிடம் சமத்துவம் பேச என்னிடமும் இடமில்லை , குரல்வளை நெறிக்கப்பட்டாலும் எங்கள் குரல் ஓயாது -சகோதரன் பஷீர்

Read More