அந்த காலகட்டம் இன்றைய இந்தியாவில் எந்த அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிராக வன்முறைகளும், வகுப்புவாதங்களும், சாதி பிரச்சனைகளும், மத கலவரங்களும் தூண்டப்படுகிறதோ, கட்டவிழ்க்கபடுகிறதோ, அதே போல ஒரு காலகட்டத்தில் இனவெறி தூண்டப்பட்டு கருப்பின மக்களுக்கு எதிராக இனவெறி கோலோச்சியிருந்த காலகட்டம். கருப்பின மக்கள் வஞ்சிக்கப்பட்டு சித்ரவதைகளும் கொலைகளும் அரங்கேறிய காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் மல்கம் லிட்டில்(Malcolm Little, மே 19, 1925 – பெப்ரவரி 21, 1965) எனும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் நெப்ரஸ்கா மாநிலத்திலுள்ள ஒமாஹாவில் கிரானாடாவைச் சோ்ந்த ஹெலன் லுாயி லிட்டில் மற்றும் ஜாா்ஜியாவின் ஏர்ல் லிட்டில் தம்பதிகளின் ஏழு பிள்ளைகளில் நான்காவதாக பிறந்தார். ஏர்ல் லிட்டில் தாம் வாழ்ந்த பகுதியில் கறுப்பின மக்களுக்கான செயற்பாட்டாளராக இருந்து வந்தார். அவர் மனைவி ஹெலென் லிட்டில் அதே பகுதியில் கறுப்பின மக்களுக்கான ‘நீக்ரோ வேர்ல்ட்’ என்ற தினசரியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். தாய் தந்தை…