Author: அஸ்லம்

மீண்டும் ஒரு படுகொலை தமிழகத்தை உலுக்கியுள்ளது. கோவையில் செயல்படும் சின்மயா வித்யாலயா பள்ளியில் பயின்று வந்த மாணவி தாரணி பாலியில் துன்புறுத்தல் காரணமாக பள்ளியிலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்துள்ளார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற கொடுறனே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவியின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் மாணவி கைப்பட எழுதியுள்ள கடிதத்தில் கூடுதலாக இருவரையும் தமது மரணத்திற்கு காரணமாக குறிப்பிட்டுள்ளார். மிதுன் சக்கரவர்த்தியை காவல்துறை கைதுசெய்து போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும், பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்னதாகவே அறிந்திருந்த பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததின் விளைவாகவே “இக்கொலை” நடந்தேறியுள்ளது. நெஞ்சை பிழிறச்செய்யும் இந்த கொலையை குறித்து சுதந்திரமாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் எவ்வித தயவுதாட்சணயமும் இன்றி தண்டிக்கப்பட வேண்டும். ஆரம்ப பள்ளிகள் முதல் ஐ.ஐ.டி…

Read More

இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டனர்.யூத தேசத்தை கட்டமைக்கும் வெறியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி குடியேற்றங்களை அதிகப்படுத்தியது. பல்வேறு நாடுகளிலிருந்து யூதர்கள் ஆசைவார்த்தைகள் காட்டப்பட்டும் சில நேரங்களில் மிரட்டப்பட்டும் இஸ்ரேலுக்குள் குடியமர்த்தப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளிலில் ஒன்றான எத்தியோப்பியாவில் இருந்த யூதர்தள் சிலர் அச்சுறுத்தப்பட்டு கட்டாயமாக குடியமர்த்தப்பட்டனர். (தற்போது அவர்கள் யூதர்களே அல்ல என்று கூறி அவர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையை வலதுசாரி யூதர்கள் செய்து வருகின்றனர்). குடியேற்றங்களை தொடர்ந்ததால் ஆகும் செலவை சமாளிக்க இஸ்ரேல் அரசு திணறியது. 1950களில் பொருளாதார சிக்கல் உருவானாது, இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள யூதர்களின்-குறிப்பாக அமெரிக்க யூதர்களின்- நன்கொடை, அமெரிக்கா அரசின் ஆறரை கோடி டாலர் உதவித்தொகை, ஜெர்மனியின் ஹோலோகாஸ்ட் நிகழ்விற்கான நஷ்டயீட்டு தொகை ஆகியவை ஆக்கிரமிப்பையும் அடாவடித்தனத்தையும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ள சாதகமாக இருந்தன. இஸ்ரேல் எகிப்துடன் நேரடியாக மோதும் போக்கை கையாண்டது. சினாய் தீபகற்பத்தை கைப்பற்றியதுடன், அதனுள் புகுந்து…

Read More

சென்னை ஐஐடியில் சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பல்வேறு பாகுபாடுகள் காட்டப்பட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும், அதனை முற்றிலும் மறுத்துள்ளார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஜூலை 19 அன்று மக்களவை உறுப்பினர் டிஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு, ‘சென்னை ஐஐடியில் சாதி மத ரீதியாக எந்த பாகுபாடும் நிலவவில்லை’ என்றார் அமைச்சர். 2019ம் ஆண்டு பல்கலைக்கழக ஹாஸ்டலில் பாத்திமா லத்தீப் என்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடிக்குள் நிகழும் அடக்குமுறைகள் முக்கிய பேசுபொருளானது. இதனைக் குறிப்பிட்டு டிஆர் பாலு எழுப்பிய கேள்விக்குப் பொறுப்பற்ற பதிலைத் தெரிவித்துள்ளார் அமைச்சர். ‘மாணவர்கள் மற்றும் ஆய்வறிஞர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனையைத் தீர்க்க மேலதிக வகுப்புகள் மெட்ராஸ் ஐஐடியில் செயல்படுகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் 24 மணிநேர ஆலோசனை மையமும் பயன்பாட்டில் உள்ளது’ என்றார். பாத்திமா லத்திப் தற்கொலை தொடர்பாக நேரடியாகப் பதிலளிக்க மறுத்த அமைச்சர், ‘மாணவர்களுக்கு மருத்துவ உதவி…

Read More

முதலாம் உலக யுத்தம் 1914- ல் துவங்கியது. அதுவரை ஐரோப்பாவில் இருந்த சிறு அரசுகள் பல ஒன்றினைந்து தேசிய அரசுகளாக மாற்றம் கண்டிருந்தன. இயந்திரமயமாதலும் காலணியாதிக்கமும் அரசியல் மற்றும் பொருளாதார போட்டியை அவற்றிற்கு மத்தியில் உருவாக்கி இருந்தன. குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா போன்றவை தமது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த கடுமையாக முனைந்தன. ஐரோப்பா, வடஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி புரிந்த உஸ்மானிய கிலாஃபத்தும் இந்த அதிகாரப்போட்டியில் தம்மை பாதுகாக்க உள்ளிழுக்கப்பட்டது. உஸ்மானிய கிலாஃபத் இஸ்தான்புல்-ஐ தலைமையிடமாக கொண்டு 1517 ஆம் முதல் கிட்டதிட்ட 400 ஆண்டுகளாக மேற்கூறிய நிலபரப்பை ஆண்டது. 17-ம் நூற்றாண்டில் அது புவி நிலபரப்பின் 29% சதவீதத்தை தன் ஆளுகைக்கு கீழ் வைத்திருந்தது. அதுமட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட முஸ்லிம் ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பிற பகுதிகளும் உஸ்மானிய கிலாஃபத்தை ஏற்றிருந்தன. இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்கும் அரசாகவும் முஸ்லிம்களின் தலைவராக உஸ்மானிய கலீஃபாவும்…

Read More

கொரானாவிற்கு பிந்தைய பேரிடர் மேலாண்மை குறித்த முதல் கட்டுரையில், “கிராமத்தை தத்தெடுத்தல்” என்னும் யோசனை தீர்வுகளில் ஒன்றாக விவாதித்திக்கப்பட்டது. இது வெறும் சமூக சேவை என்னும் அளவில் சொல்லபடவில்லை; மாறாக கிராமத்தில் வாழ்வோரின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், சிறிய அளவிலான தொழிற்சாலைகளை நிறுவுதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி பெருக்கத்திற்கு பங்களிப்பு செய்தல் என்னும் விரிவான பொருளில் சொல்லப்பட்டது. Economic and Political Weekly (EPW) இதழில் பேரா.அருண்குமார் எழுதிய கட்டுரை ஒன்றில் முக்கியமான பிரச்சனை ஒன்றை அடையாளப்படுத்தி இருந்தார். “பெரிய அல்லது சிறிய அளவிலான தொழிற்சாலைகளில் தான் உலகம் முழுவதும் உற்பத்தி செயற்பாடுகள் நடைப்பெறுகின்றன. ஆனால் இந்தியாவிலோ நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளிலும் குடிசை தொழில்களும்/முறைசாரா துறைகளிலும் உற்பத்தி நடைப்பெறுகின்றது. இவற்றில் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளில் மூலதனமும், உற்பத்தி இயந்திரங்களும்(machines) அதிகம் இருக்கும். மற்ற தொழிற்சாலைகளுக்கு இத்தகைய அனுகூலங்கள் இருப்பதில்லை. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவதற்கும்,…

Read More

அரசையோ, அதன் கொள்கைகளையோ, தவறான நிலைப்பாட்டில் இருக்கும் ஆளும் கட்சிகளை அல்லது எதிர்கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளையோ விமர்சிப்பதில் எவ்விதத் தவறுமில்லை. ஜனநாயக அமைப்பில், விமர்சனங்கள் அரசு திறன்பட செயல்படுவதற்கு உதவி புரிகின்றன. அதேசமயம் விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே முன்வைக்கப்படும் விமர்சனங்களால் எந்தவொரு பயனும் இல்லை. அரசின் பணிகள் சீராக இயங்குவதற்கு விமர்சனத்துடன் கூடிய மாற்றீடுகள் (Alternatives) தேவைப்படுகின்றன. வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், போகலாம். ஆனால் அவை உருவாக்கும் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் விதிகள் மாறாமல் தொடர்ந்து நீடிக்கக்கூடியவை; குடிமக்களின் வாழ்வில் நேரடி பாதிப்பையோ பலனையோ ஏற்படுத்துபவை. தற்போது உலகின் பெரும்பகுதி கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. மனித வரலாற்றில் இதைப்போன்ற சூழல் ஒன்றும் புதிதல்ல. பல்வேறு காலங்களில் மனித இனம் இவற்றை எதிர்கொண்டிருக்கிறது; அதிலிருந்து மீண்டு, தமது தேசத்தை சிறந்த முறையில் வளர்ச்சியடையவும் செய்திருக்கிறது. தற்போதைய ஊரடங்குக்குப் பிறகு வேளாண்மை, ஜவுளி, தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் ஏனைய எல்லாத்…

Read More