Author: அஷ்ஃபாக் அஹமது

எழுதியவர் : அஷ்ஃபாக் அஹமது, சமூக ஊடகவியலாளர் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விழிப்புணர்வு பதிவுகள் மணல் விசயத்தில் அவ்வளவு முனைப்பு காட்டியதில்லை. தமிழகத்தில் காலம் காலமாக அரங்கேறி வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மணல் கொள்ளை. மணல் என்பது தொப்புள்கொடிக்கு சமம் என்று படித்ததுண்டு. தொப்புள்கொடி தாயோடு குழந்தையை இணைக்கு பாலம். அது போல ஆற்றின் தொப்புள் கொடியாக விளங்குவது தான் இந்த மணல். நிலத்தடி நீரை பாதுகாத்து தக்க வைப்பதற்கு மணல் மிக மிக இன்றியமையாத ஒன்று. மணல் ஒன்றும் அற்ப விலைக்கு விற்கப்பட வேண்டிய ஓர் சாதரணப்பொருள் அல்ல, அது ஓர் பொக்கிஷம்..! நம் சந்ததிகளுக்கான விலைமதிப்பற்ற சொத்து..! விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட மணலால் நிகழ்ந்த பாதிப்புகள் எண்ணில் அடங்காதவை. 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கொள்ளிடம்…

Read More

2010 ல் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வு. பத்திரிக்கையாளரான 22 வயது நிருபமா தனது அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நிருபமா தற்கொலை செய்துவிட்டதாக குடும்பமே கதறியது. காவல்துறை அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். திடுக்கிடும் பரிசோதனை அறிக்கை நாட்டையே உறைய வைத்தது.  நிருபமா மூன்று மாத கர்ப்பிணி. அவள் தற்கொலை செய்யவில்லை,மூச்சுத்திணறி கொலை செய்யப்பட்டுள்ளார். குழம்பிப்போன காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. உயர் சாதி நிருபமா தாழ்ந்த சாதியை சார்ந்த நிரஞ்சன் என்பவரை காதலித்துள்ளார். நிரஞ்சனை ஏற்க முடிந்த நிருபமாவின் குடும்பத்திற்கு அவன் சார்ந்திருக்கும் சாதி  ஏனோ உறங்க விடவில்லை. சாதி எனும் ஒற்றைக் காரணத்திற்காக நிருபமாவை சமரசம் செய்ய முயன்று அது தோல்வியில் முடியவே பெற்ற மகளை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர். சொந்த குடும்பமே நிருபமாவை சித்திரவதை செய்து கொலை செய்தது அம்பலமானது. நிருபமாவின் மாமா பத்திரிக்கையாளார்களிடம் ஆணவக் கொலைக்கு நியாயம் கற்பித்ததை உலகமே காரி உமிழ்ந்தது. அப்போதைய…

Read More