Author: அர்ஷத் ஆஸ்மி

மதத்தை அடிப்படையாக வைத்து இந்தியா பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைகளைக் கடக்க மக்கள் அவசர அவசரமாக நகர்ந்தனர். அது ஒரு பேரழிவுபோல் இருந்தது. மௌலானா ஆசாத் போன்ற தலைவர்களின் தலையீடுகளும், ஜமா மஸ்ஜிதில் அவர் ஆற்றிய புகழ்பெற்ற உரையும் முஸ்லிம்களுக்கு சிறிது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது. இது முஸ்லிம் வெகுஜன குடியேற்றத்தின் வேகத்தை குறைத்தது. அதே நேரத்தில், இந்து மகாசபை முஸ்லிம்களைக் குறிவைத்து கொலை, கொள்ளை, தீ வைப்பு மற்றும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. உயிருக்கு பயந்து பல முஸ்லிம்கள் டெல்லியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். வன்முறை தணிந்ததும் தங்களை காத்துக்கொள்ள தப்பி ஓடிய முஸ்லிம்களின் சொத்துக்கள் “வெளியேறியவர்களின் சொத்து” என முத்திரை குத்தப்பட்டு எல்லையின் மறுபுறத்தில் இருந்து வரும் இந்து அகதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது பேசுபொருளாகியிருக்கும் வக்ஃப் சட்ட திருத்தத்தை மேற்கூறிய இந்திய வரலாற்றுடன் தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் முழு…

Read More