Author: அ மார்க்ஸ்

அஹ்மது ரிஸ்வானை அவர் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலிருந்து அறிவேன். இஸ்லாமும் முஸ்லிம்களும் உலகளவில் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்த கூர்மையான பார்வையும் புரிதலும் உடையவர். பட்டப்படிப்பு முடித்தவுடன் மேற்படிப்பிற்கு அவர் இதழியலைத் தேர்வு செய்தது என்பதேகூட இன்றைய சூழலில் வெளிப்படும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மக்கள் மத்தியில் உண்மைகளைப் பேசும் நோக்கில்தான். அதை அவர் செவ்வனே செய்துவருகிறார். அந்த வகையில், அவர் www.meipporul.in இணையதளத்திற்கு எழுதிய முக்கியமான இருபது கட்டுரைகளின் தொகுப்பு இது. நூலாக வெளிவரும் அவரது முதல் தொகுப்பு. இன்னும் அவர் இதுபோன்ற பல நூல்களை எழுத என் மனமார்ந்த வாழ்த்துகள்! இந்நூலிலுள்ள மிக முக்கியமானதும், மிகப் பெரியதுமான கட்டுரை இத்தொகுப்பில் முதலாவதாக அமைந்துள்ள ‘இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள்’ என்பதுதான். இத்தலைப்பில் மானுடவியலாளர் இர்ஃபான் அஹ்மது ஆற்றிய விரிவான உரை ஒன்றின் அடிப்படையில் ரிஸ்வான் இதைத் தமிழில் தந்துள்ளார். ‘இந்து ஓரியண்டலிசம்’ எனும் கருத்தாக்கத்தை முதன்முதலில் தெளிவாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் வகையில்…

Read More

தேசியம் எனும் கருத்தாக்கம் குறித்த புரிதல் நமக்குத் தேவை. குறிப்பாக, இந்திய தேசியமும் தமிழ்த் தேசியமும் பற்றிய புரிதல்கள் அவை எவ்வாறு, யாரால் வரையறுக்கப்படுகின்றன, அவற்றின் உள்நோக்கம் மற்றும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள், தலித்கள் ஆகிய சிறுபான்மையினர் இதில் கவனம் செலுத்துதல் அவசியம். தமிழக அரசியல் சூழலில், 80களுக்குப் பிறகு ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான பங்கை வகித்தபோது, தேசியம் பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் பல மேலெழுந்தன. தமிழ்த் தேசியம் வரையறுக்கப்படுவது தொடர்பான ஏராளமான நூல்களும் தமிழகத்திலும் இலங்கையிலும் வெளிவந்தன. எனினும் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்ற தமிழ் இயக்கங்களை ஒழித்துத் தனி ஒரு இயக்கமாக நின்றதற்குப் பின் இந்த ஆரோக்கியமான விவாதங்கள் இலங்கயில் மட்டுமின்றி தமிழகத்திலும் நின்று போனது. தமிழகத்தின் ஒரு நூறாண்டு கால வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் தமிழ்த் தேசியத்தில் இரண்டு போக்குகள் தொடக்கம் முதல் இருந்தன. திராவிடக்…

Read More

“மதங்கள் குறித்து விமர்சனப் பார்வையை மட்டுமே கொண்டிருந்த நான் அவற்றை ஆழமாகப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டிய அவசியத்தை செப் 11 ஏற்படுத்தியது” – என்பார் உலகளவில் இன்று மிக முக்கியமான ஒப்பீட்டு மதவியல் அறிஞராக அறியப்படும் கரேன் ஆம்ஸ்ட்ராங்க். இந்தியாவில் பிறந்த நமக்கு இன்னும் சற்று முன்னதாகவே அந்த அவசியம் ஏற்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில்தான் நான் மதங்கள் குறித்து யோசிக்கவும் வாசிக்கவும் தொடங்கினேன். அந்தப் பின்னணியில் எழுதப்பட்டதுதான் எனது “இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்”. “நான் புரிந்து கொண்ட நபிகள்” – நூலை எழுதத் தொடங்கியபோது நான் நிறைய சீரத்களை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டாலும் அடிப்படையாகக் கொண்டது மூன்று நூல்களைத்தான். அந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்புத்தான் இது. இவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். இப்னு இஷாக் (கி.பி.704 -768). மதினாவில் பிறந்து பாக்தாத்தில் காலமானவர். இன்னொருவர் ஒரு கம்யூனிஸ்ட். யூதர். மேக்சிம்…

Read More

ரஜினியை சந்தித்த உலமாக்களை மிகக் கேவலமாகவும் தரம் குறைந்தும் திட்டி ஏராளமான பதிவுகள் பார்க்க முடிகிறது. தரக்குறைவான வார்த்தைகள் தெளிக்கப்பட்டு எழுதப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் தி.மு.க ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. ரஜினியைச் சந்திப்பதில் எந்தப் பயனும் பெரிதாக இல்லை என்பது என் கருத்து. ஆனால் சந்தித்தவர்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பில் அவரைச் சந்திக்கவில்லை. உலமாக்கள் சிலர் அவரைச் சந்தித்துள்ளனர். ரஜினி அரசியலில் வரப்போகும் செய்தி ஒரு மாமாங்க காலமாக ஓடிக் கொண்டுள்ளது. இன்று அது அதிகம் பேசப்படுகிறது நமது ஊடகங்கள் அவரது கருத்துக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்த நிலையில் மிகப்பெரிய அரசியல் ஆபத்தொன்றால் சூழப்பட்டுள்ள முஸ்லிம் மதத் தலைவர்கள் சென்று பார்த்ததை இவ்வளவு ஆபாசமான சொற்களில் தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முஸ்லிம்கள் இப்போது நம்பத் தகுந்த அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் என்ன மாதிரி அறிவுரையை…

Read More

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையும் சென்சஸ் கணக்கெடுப்பையும் ஒன்றாக முன்னிறுத்துவது ஒரு மோசடி தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் NRC க்கும் அஸ்சாமில் நடந்து முடிந்துள்ள NRC க்கும் ஒரு வேறுபாடு உண்டு. வாஜ்பேயீ ஆட்சியில் (2003) உருவாக்கப்பட்ட விதிகளிலிருந்து அஸ்சாமுக்கு ஒரு சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டு இது நடந்து முடிந்துள்ளது. அது என்ன? 1951ம் ஆண்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட NRC ஒன்றின் அடிப்படையில் அல்லது 1971 மார்ச் 24 வரை உள்ள வாக்குரிமைப் பட்டியல் அடிப்படையில் அஸ்சாமியர்கள் மட்டும் தமது குடியுரிமையைக் கோரலாம். இது இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்குப் பொருந்தாது. பிற மாநிலத்தவரைப் பொருத்த மட்டில் அவர்களுக்கு தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் (NPR) அடிப்படையிலேயே குடியுரிமை வழங்கப்படும். இந்த அடிப்படையில் அஸ்சாமின் குடியுரிமைப் பதிவேட்டிற்கும் (NRC), மற்ற மாநிலப் பதிவேடுகளுக்கும் என்ன வேறுபாடு? அஸ்சாமில் ஒருவர் தன் குடியுரிமைத் தகுதியை விண்ணப்பித்துப் பெற வேண்டும் (application method).. பிறமாநிலங்களில் இது கணக்கெடுப்பின்…

Read More

குடியுரிமைப் பதிவேடும் மக்கள் தொகைப் பதிவேடும் ஒண்ணு! இதை அறியாதோர் வாயில மண்ணு! (குடியுரிமைப் பதிவேடு வேலை தொடங்கிவிட்டது. என்ன நடந்துகொண்டுள்ளது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வோம்) இப்போது NRC யுடன் எவ்வாறு NPR பிணைந்துள்ளது எனப்பார்க்கலாம். NPRன் சட்ட அடிப்படை என்பது 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் அமைகிறது. வாஜ்பேயீ தலைமையில் முதல்முறை பா.ஜ.க கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்தபோது இது தொடர்பான வகையினங்களில் (category) “சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தவர்” அல்லது “சட்டவிரோதக் குடியேறி” (illegal migrant) எனும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. இந்தத் திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன, அப்போது நாம் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது இந்திய மக்களின் குடியுரிமைத் தகுதி தொடர்பான மிகப்பெரிய அணுகுமுறை மாற்றம் ஒன்றை உருவாக்கும் திட்டம் என்பதை யாரும் யோசிக்கவில்லை. “இந்தியாவிலும் வெளியிலும் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் பதிவேடு” ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிக்கான அடித்தளம் என்பதோடு இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடையாளத்தை…

Read More

”தேசியக் குடியுரிமைப் பதிவேடும் (NRC)”. “தேசிய மக்கள்தொகைப் பதிவேடும் (NPR)” National Citizenship Register (NPR) and National Population Register மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் தேசியக் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பதும் அவரே நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வதும் அறிந்ததே. கேரளத்தைப் போல மார்க்சிஸ்ட் கட்சி ஒரே மேடையில் நின்று முக்கிய எதிர்க்கட்சியுடன் இணைந்து தன் எதிர்ப்பை அங்கு காட்டாவிட்டாலும் அங்கும் மார்க்சிஸ்ட் கட்சி அதை ஆதரிக்கிறது. இது பா.ஜ.கவுக்கு மிகவும் கடுப்பேத்தி உள்ளது. மம்தா பேனர்ஜி அத்தோடு நிறுத்தவில்லை. அங்கே இப்போது நடைபெற்றுக்கொண்டுள்ள “தேசிய மக்கள்தொகைப் பதிவேடு” (NPR) தயாரிக்கும் வேலையை நிறுத்துவதற்கு ஆணையிட்டு. அந்த வேலை இப்போது நிறுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் எந்தச் சலசலப்பும் ஏற்படாத நிலையில் மே.வங்கத்தில் இவ்வாறு ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக Scroll.in தளம் ஒரு கள ஆய்வைச் செய்து…

Read More

இதை நீங்க நிச்சயமாப் படிக்கப் போறது இல்ல… “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” அந்தக் காலத்துல நாங்க… ++++++++++++++++++++++++++++++++++++++++ அப்பல்லாம் நாங்க மக்களைப் பாதிக்கிற கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்துப் போராடுவோம்… இப்ப ரிடையர் ஆன அப்புறமும் சில அந்தக் கால ஆட்கள் கல்வித்துறைக் கொடுமைகளை எதிர்த்து எதையாவது செய்யணும்னு நினைச்சு தனியா ஒரு அமைப்பை உருவாக்கி என்னவோ செய்றாங்க.. உயர்கல்வியில் இன்னைக்கு ஏற்பட்டுள்ள கொடிய மாற்றங்களை எதிர்த்து பாவம் இந்த வயசு போன முன்னாள்கள் எதோ பண்றாங்க. அவங்க சென்னையில் நடத்திய ஒரு கூட்டத்துல வற்புறுத்தி என்னைப் பேசச் சொன்னாங்க. அப்புடி நான்  இது குறித்துப் பேசிய ஒரு உரையை எழுதி அனுப்பச் சொல்லி.. நானும் மூணு நாளா வேற வேலையை எல்லாம் விட்டுட்டு  எழுதி…. நீங்க நிச்சயம், அதுவும் இந்தத் தேர்தல் நேரத்துல அதைக் கண்டுக்க மாட்டீங்கன்னு தெரியும்… அதனால. அந்தப் 15 பக்கக் கட்டுரையில்…

Read More

எழுதியவர் : அபூ சித்திக், சமூக ஊடகவியலாளர் நாட்டில் நீதியின் நிலைமையை பாருங்கள், பாவம், அதனால் யாருக்குதான் விசுவாசமாக இருக்க முடியும்? எந்த அரசாக இருந்தாலும், மாறினாலும் பாசிசம் அதன் மீது செலுத்தும் தாக்கத்தினை தவிர்த்திட முடியவில்லை. நாட்டின் முக்கிய தூண்களாக கருதப்படும் ஊடகங்கள் உட்பட நீதியை பெற்றுத் தர வேண்டிய இடத்தில் உள்ள யாவரும் தங்களுக்கென்று ஒரு நியாயத்தை வகுத்து கொள்கிறார்கள். அதிகபட்சமாக இன்றைய ஊடகங்கள் தேசியம் என்ற பெயரிலும், இந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படையிலும் பல்வேறு மாற்றங்களை தங்களுக்குள் உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் கொடூரமான, நியாயமற்ற கொலைகளுக்கும் கூட நேர்மையற்ற காரணத்தை கொண்டு நியாயம் கற்பிக்க பார்க்கிறார்கள். எந்த செய்தியை முன்னாலும் எந்த செய்தியை பின்னாலும் தர வேண்டும் என்ற நுட்ப அரசியலை இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக பெரும்பாலான ஊடகங்கள் செய்து வருகின்றது. இந்த நாட்டின் அனைத்து சக்திகளுக்கும் மேலானது என்று சொல்லக்கூடிய நீதிமன்றங்களும் இந்த நீதி பரிபாலனங்களை எல்லாம்…

Read More

உயர்கல்வியை ஒழித்துக் கட்டுவது எனச் செயல்படும் பா.ஜ.க அரசு ஆய்வுப் படிப்புகளுக்கான உதவித் தொகைகளை நிறுத்துவதாக அறிவித்துப் பின் எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளதை அறிவோம். அது மட்டும் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தலையீடுகளால் நிறுத்தப்படாது இருந்திருந்தால் நாடெங்கிலும் சுமார் 25,000 ஆய்வு மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பர். இன்னொரு பக்கம் ஆய்வுப் படிப்புகளில் ஒரு உதவிப் பேராசிரியர் 3 M.Phil, 4 Ph.D மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்ட முடியும் எனும் இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத விதியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு பல்கலைக் கழகங்களில் பெரிய அளவில் ஆய்வு மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது. JNU வில் ஒரு ஆய்வு வழிகாட்டி சராசரியாக 8.4 மாணவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய நடைமுறையிபடி JNU வில் மட்டும் 2017- 2018 ஆண்டில் வழக்கமான 1408 ஆய்வு மாணவர் சேர்க்கை என்பது வெறும் 242 ஆகக் குறைகிறது. Centre…

Read More