Author: அஜ்மீ

மே 17, 2009 அன்று ஆறு முஸ்லிம்களை அரசப்படுகொலை செய்த பீமாப்பள்ளி கலவர நினைவு தினம். அன்றைய ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீஸ் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் இறந்தும், 27 பேர் குண்டடியுடன் காயப்பட்டனர். மக்கள் சிவில் உரிமை யூனியன் என்ற சுயாதீன அமைப்பும், தேசிய மனித உரிமை ஆணையமும் சமர்ப்பித்த அறிக்கையில், உள்ளூர் ரவுடிகளை சமாளிக்கிறோம் என்ற பெயரில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தது வெளிப்படுத்தப்பட்டது. அன்றைய முதலமைச்சர் அச்சுதானந்தமும் உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணனும் போலீசின் தவறுதலால் நடந்த பிழையாக பீமாப்பள்ளி படுகொலையைக் குறிப்பிட்டனர். அவர்கள் சொல்வதைப்போல் தவறுதலாக மக்களுக்கு எதிராக போலீஸ் நிகழ்த்திய முதல் துப்பாக்கிச் சூடு கேரள வரலாற்றில் இதுவாகத்தான் இருக்கும். மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்தச் சட்டம் கூறுகிறது. அன்று அத்தகைய சூழல் ஏதும் இல்லாதபோதும் முதல் துப்பாக்கிச் சூட்டிலேயே பார்வையாளர்கள் எவரும் எந்த பிரச்சனையும்…

Read More

டெல்லி கலவர வழக்கைக் காரணம் காட்டி உபா கொடுஞ்சட்டத்தில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார் ஆசிப் இக்பால் தன்ஹா. 13 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்கு பெயில் கிடைத்தது. டெல்லி நீதிமன்றத்தின் குறிப்பாக நீதிபதி சௌஜன்யா சங்கரனின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டியவர், மற்றவர்கள் நீண்டகாலம் சிறையில் வாடும்போது இதில் வியப்பேதுமில்லை என்கிறார். ஆனால், இந்தியர்கள் நீதி அமைப்பு மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கிராமங்களில் நடக்கும் தகராரில் விளிம்புநிலை நபர் சட்டம் எங்களைக் காப்பாற்றும் என்று சொல்வதிலிருந்தே அந்த நம்பிக்கை பிறக்கிறது என்றும் கூறுகிறார் தன்ஹா. ஆனால், அது தனது தாமதத்தைக் களைய வேண்டும் என்பதே தேவையாக உள்ளது. ‘நான் விடுதலை செய்யப்படுவேன் என்று நம்பினேன். காரணம், எனக்கு எதிரான குற்ற ஆவணம் முழுக்க குளறுபடியாக இருந்தது. என்னோடு தொடர்புப்படுத்திக் குற்றம்சாட்டப்பட்ட நடாஷா மற்றும் தேவக்னாவை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அறிவேன். ஆனால், அவர்களிடம் நான் பேசியது கூட இல்லை.…

Read More

வினிதா என்ற 43 வயதுடைய பழங்குடியின பெண்ணின் மகன் 21 வயதான அஜய். அவர் 19 வயதுடைய பாயல் (அடையாளப் பெயர்) என்ற பழங்குடியின பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். இதனை பாயலின் குடும்பத்தாரால் ஏற்க முடியவில்லை. கோபமடைந்த அவர்கள் அஜயின் தாயார் வினிதாவை வன்மமாக பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கியுள்ளனர். கடந்த ஜூன் 12ம் தேதி தனது மகன் திருமணம் செய்ததாக கூறும் வினிதா பின் நடந்தவற்றை விளக்குகிறார். ‘திருமணம் முடிந்த நான்கு நாட்களுக்கு பிறகு அவர்கள் எனது குடிசைக்குள் தடாலடியாக நுழைந்தார்கள். பாயலின் தந்தை ராஜுபாய் பல்சந்தா தலைமையில் ராஜு ரத்தோட், விபுல் ரத்தோட், கது ரத்தோட் உட்பட 11 பேர் கும்பல் வந்தனர். அப்போது எனது கணவர் வீட்டிலில்லை. பாயல் எங்கே என்று கேட்டு மிரட்டினார். திருமணமானபிறகு இருவரும் வீட்டிற்க்கே வராததால் எங்கிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. அவர்கள் திருமணம் செய்துகொண்டது கூட எனக்கு…

Read More

‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘லால் சலாம்’ கோஷங்களும் விண்ணைப் பிளக்க திகார் சிறையிலிருந்து வெளியே வந்தனர் மாணவர் செயற்பாட்டாளர்களான தேவஞ்சனா கலிதா, நடாஷா நார்வல் மற்றும் ஆசிக் இக்பால் தன்ஹா. இவர்கள் மூவரும் ஓராண்டுக்கு முன்பு சட்டவிரோத உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைதான இவர்களைச் சமீபத்தில் விடுவித்தது டெல்லி உயர்நீதிமன்றம். குடும்பம், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்ட இவர்கள் ‘உபாவை நீக்குக, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்க!’ என்று முழங்கினர். ‘எனது தந்தை என்னைக் காண விரும்பும்போது நான் பெயில் கிடைக்க விரும்பினேன். ஆனால், அவரது இறுதி நிமிடங்களில் அவருடன் என்னால் இருக்க முடியவில்லை’ என்று வருந்தினார் நடாஷா. அவரது தந்தை மஹாவிர் நார்வல் கடந்த மாதம் கொரோனோ தொற்றால் உயிரிழந்தார். இறுதி சடங்கிற்கு மட்டும் நடாஷாவிற்கு பெயில் வழங்கப்பட்டது. ஜாமியா மில்லியா மாணவர் ஆசிக் தன்ஹாவிற்கும் அவரது தேர்வுக்காகக் கண்காணிப்பு பெயில் வழங்கப்பட்டிருந்தது.…

Read More

1200களில்தான் முகமது கோரியின் படையெடுப்பு நிகழ்கிறது.அவர் டெல்லியை வென்று குத்புதீன் ஐபெக் தலைமையில் அடிமைகள் சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார்.பின் துக்ளக்,லோடிக்கள்,முகலாயர்கள் என நீளும் இஸ்லாமியர்களின் சாம்ராஜ்யம் 1857ல் இரண்டாம் பகதூர் ஷாவில் முடிகிறது.கிட்டத்தட்ட 800 ஆண்டுகள்.ஆனால்,இவர்களின் ஆட்சி வட இந்தியாவை மையமாகக் கொண்டு அதிகபட்சம் தெற்கில் தக்காணம் (Deccan) வரையே இருந்தது.இவர்கள் ஆண்ட இதே காலம் தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 900 முதல் 1300 கள் வரை பிற்கால சோழர்களின் ஆட்சியும்,பின் பாண்டியர்கள்,1400 முதல் பிரிட்டிஷ் ஆதிக்கம் வரை நாயக்க மன்னர்களின் ஆட்சியும் இருந்தது.ஆதலால்,இஸ்லாமிய அரசர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு கிடையாது. ஆனால்,நாம் தமிழரின் வரைவு கோட்பாடு இதற்க்கு நேர்மாறாக உள்ளது.அதாவது,’இஸ்லாமும் கிறிஸ்த்துவமும் தம்மை (தமிழர்களை) ஒவ்வொரு காலத்திலும் ஆளுமை செலுத்தியது என கூறுகிறது.இஸ்லாம் முகமது நபி (ஸல்) அவர்களால் பரவுவதற்கு முன்பாகவே தமிழர்களுக்கும் அரேபியர்களுக்கும் சுமூகமான வணிக உறவிருந்தது.அந்த உறவே பின் தென்னகத்தில் இஸ்லாம் வளருவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.இங்குள்ள அடித்தட்டு மக்களுடன் நெருக்கமான…

Read More