கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி எண்ணி வருத்தமுறுகிறேன். அறுபது ஆண்டுகளாக எழுத்தையே வாழ்க்கையாக்கி வாழ்ந்த இம்மேதையின் படைப்புகளை பத்து கோடித்தமிழர்களில் எத்தனைப்பேர் உள்வாங்கினார்கள் என்பதுதான் முக்கியம். தமிழைப்பேச,எழுத,படிக்க விரும்பாத எப்படியாவது உயிர் வாழ்ந்தால் மட்டுமே போதும் என வாழும் இச்சமூகத்திற்கு கி.ரா மட்டுமல்ல எவருமே இனி தேவை இல்லை. தமிழக அரசு இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இல்லாதபடி முதல் முறையாக அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்திருக்கிறது. அத்துடன் அவருக்கு உருவச்சிலையும் எழுப்ப இருக்கின்றது. இதனால் எல்லாம் இத்தலைமுறையும் எதிர்காலத்தலைமுறையும் கி.ராவின் படைப்புக்களையும், தீவிர இலக்கியத்தையும் தேடி ஓடப்போவதில்லை. பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்களும்,அரசாங்கமும் ஒரு தீவிர எழுத்தாளனை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? புதினங்களை, சிறுகதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை அனைத்தையும் அவர்கள் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். அவர்களது படைப்புகளை உடனுக்குடன் உள்வாங்கி வாழ்வை பொருள் பொதிந்ததாக திருத்தி அமைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் எழுத்தாளனின் நிலை…
Author: Admin
தலைமுறைத் தளிர்களுக்கு அறமான கல்வியை கற்பித்துக் கொடுத்து நெறிப்படுத்த வேண்டிய ஆசானே, அத்தளிர்களிடம் காமக் கல்வியை உட்புகுத்தி, தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள அலையும் கேடுகெட்ட இழிநிறைந்த இக்குற்றச் சமூகத்தினூடே நாமும் வாழ்வதெண்ணி உண்மையிலேயே வெட்கித் தலை குனியத்தான் வேண்டும் மக்களே..! இத்தகைய இழிவானதொரு மனித மிருகங்களுக்கெல்லாம் இப்புவியிலே வாழத் தகுதியற்றதொரு கொடுந்தண்டனையே இறுதித் தீர்வாகும்..! காமக் கல்வியை கற்பிக்கும் ஆசானைக் கடந்து நகர்ந்து, நிர்வாக உரிமையாளர் யாரென்று தேடினால், சுவாதியை படுகொலை செய்தது ‘பிலால் மாலிக்’ என்ற இசுலாமியன் தான் என சமூக வலைதளத்திலே ஆருடம் சொல்லி தமிழ்ச் சமூகத்தினுள் மதஉணர்வைத் தூண்டி குளிர் காய்ந்தவரும், தன்னெழுச்சியாக திரண்டெழும் மக்களின் போராட்டத்திற்கு பெண்கள் கலந்து கொள்ள வருவதெல்லாம் ஆண்களை ரசிக்கவே என்ற மிகக் கொச்சையான கருத்து வாந்தியை பொதுவெளியிலே உமிழ்ந்தெடுத்த அதே மேதாவியே..! காமத்தையும், மதவெறுப்புச் சிந்தனையையும், சாதிய பாகுபாடு வேற்றுமையையும், கற்பித்துக் கொடுக்கும் கல்வியிலே உட்புகுத்தி, கல்வியை ஒரு வணிகப்…
. “அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்,” நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல என்பதால் நான் பயப்படவில்லை. பின்னர் அவர்கள் தொழிலாளர்களைத் தேடி வந்தார்கள் அப்பொழுதும் நான் பயப்படவில்லை, ஏனென்றால் நான் ஒரு தொழிலாளி அல்ல. பின்னர் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள். அப்பொழுதும் நான் பயப்படவில்லை, ஏனென்றால் நான் ஒரு யூதர் அல்ல. இறுதியில் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். அப்பொழுது எனக்காக பேச யாரும் இல்லை. இவை பாஸ்டர் மார்ட்டின் நீம் லெர் அவர்களின் உலகப் புகழ்பெற்ற சொற்கள். இந்த வாக்கியங்களை இங்கே மேற்கோள் காட்டுவதற்கான காரணம் என்னவென்றால், லட்சத்தீவு மக்களின் இருப்பு மற்றும் கலாச்சாரம் கேள்விக்குறியாக இருக்கும் இந்த நேரத்தில் அவை இன்னும் பொருத்தமானவை தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் கேரளாவைச் சார்ந்திருக்கும் நேர்மையான தீவுவாசிகளை காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. இலட்சதீவுக்கு ஏற்பட்ட நிலை அடுத்து அடுத்து உள்ள கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் வருவதற்கு நீண்ட காலம் பிடிக்காது.…
“பொலிவியாவின் ஆண்டஸிலிருந்து(Andes) நாங்கள் பலஸ்தீனத்திற்கு அனைத்து விதமான ஆதரவையும் மரியாதையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்துகிறோம். சர்வதேச சமூகம் கண்ணியமாகவும், தைரியமாகவும் போராடும் ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். பலஸ்தீனம் சுதந்திரமாகவே நிற்கும் எப்போதும் சுதந்திரமாகவே இருக்கும். எந்த சக்தியாலும் பலஸ்தீன மக்களின் ஒளியையும் விருப்பத்தையும் அணைக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் அவர்கள் தங்களது நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்வார்கள் அமைதியையும் சுதந்திரத்தையும் வெற்றி கொள்வார்கள். பாலஸ்தீன மக்கள் தங்களது அடையாளம், வரலாறு, கலாச்சாரம் மற்றும் நிலத்திற்காக நீண்ட நெடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நவீன காலத்தில் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் குண்டு வீச்சுகள் மற்றும் போர் ஆகியவை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் அதே நேரத்தில் குடிமக்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் மீது சியோனிச ஆக்கிரமிப்பாளர்கள் நிகழ்த்திய குற்றங்களை மறக்க முடியாது அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதுவே…
பாலஸ்தீனம் – மேற்காசியாவின் தமிழீழம்! மோனா: யாகோப் இது உன்னோட வீடு இல்லன்னு உனக்கு தெரியும். யாகோப்: ஆமா, நான் இத எடுத்துக்கலனா வேற யாராவது எடுத்துக்க தான் போறாங்கன்றது உனக்கு தெரியும். அப்புறம் என்ன பிரச்சனை ஏன் என்கிட்ட கத்துற? மோனா: நீ என் வீட்டை திருடுற. யாகோப்: நான் திருடலனா வேற யாராவது திருடிக்குவாங்க. மோனா: முடியாது, அது எப்படி யாராவது திருட முடியும்?! யாரும் திருட முடியாது. கடந்த மே 8ம் தேதி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதியான ஷேக் ஜராஹ்-ல் பாலஸ்தீனத்தின் மோனா எல்-குர்ட் எனும் பெண் தன் வீட்டை அபகரிக்க முற்படும் ஒரு இஸ்ரேல் தீவிர வலதுசாரி நபரை தடுக்க முற்படும் போது நடந்த விவாதம் தான் இது, இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உலகெங்கும் வாழும் பாலஸ்தீனர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை கிளர்ந்தெழுந்து போராட தூண்டியது. ஆனால்,…
உலக ஒழுங்கிற்கு இஸ்லாம் முக்கிய எதிர்வினையாகவும் மற்றமையாகவும் இருக்கும் என்பதே சாமுவேல் ஹண்டிங்க்டன் எழுதிய நாகரிகங்களின் மோதல் நூல். உலக ஒழுங்கு என்பது இன்றைய முதலாளித்துவ சமூகம். ஏற்றத்தாழ்வு, சுரண்டல், இயற்கை வள கொள்ளை, அடித்தள மக்கள் மீதான ஒடுக்குமுறை கொண்ட நடப்பு சமூகம். இதில், முக்கிய அம்சம் அந்தந்த தேசிய நாடுகளில் பெரும்பான்மை கொண்ட மதங்களை ஆதரித்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கும் வெறுப்பரசியல். மதங்களுக்கு இடையேயான மோதல் என்ற அடையாள அரசியலைக் கொதிநிலையில் முன்னிறுத்தி தமது சுரண்டல்களை இயல்பாகச் செய்து வருகிறது முதலாளித்துவம். இதன் முக்கிய இலக்காக உலகம் முழுவதுமுள்ள தேசிய அரசுகளின் கீழ் சிதறுண்டு கிடக்கும் இஸ்லாம் இருக்கிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்பரசியலை உற்பத்தி செய்யும் தேசிய அரசுகளிலேயே வரையறுக்க முடியாத வன்மத்தைக் கொண்டது இந்தியாவின் இந்துத்துவ அரசு. 2014ம் ஆண்டு நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பிறகு இந்து அணிதிரட்டலை விரைந்து செயல்படுத்தியது பாஜக. மதவாதிகள்…
தமிழக தேர்தல் முடிவை ஒட்டி திமுக-அதிமுக இருகட்சிகளுக்கான சாதி ரீதியான வாக்குப்பதிவை ‘கருத்துக் கணிப்பின்’ ரீதியாக வெளியிட்டது இந்து இதழ். இது சமீபத்தில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. அதில், திமுகவிற்கு அதிகம் வாக்களித்த சமூகமாக இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள் மற்றும் தலித்துகள் இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டது. இவர்களின் கடந்தகால அதிமுக வாக்கு வெகுவாக சரிந்துள்ளது. அதை வெறும் அதிமுக என்று காணாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்த மதவாத அரசியலுக்கு எதிரான சமூக நீதி அரசியலின் வெளிப்பாடாகவே காண வேண்டும். இஸ்லாமியர்கள்; திமுக கூட்டணிக்கு அதிக வாக்களித்த முதல் சமூகமாக இஸ்லாமியர்கள் (69%) உள்ளார்கள். அதேநேரத்தில் அதிமுகவிற்குக் குறைவான அளவில் வாக்களித்தவர்களிலும் இஸ்லாமியர்கள்தான் முதலிடம் (24%). அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமியர்கள் இயல்பாக திமுக கூட்டணிக்கு வாக்களித்திருக்கலாம் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், அவற்றையும் கடந்து இஸ்லாமியர்களின் சமூக ஒருங்கிணைவின் வெளிப்பாடாகவே இதை நடத்திக் காட்ட முடிந்திருக்கிறது. மேலும், பாஜகவின் அரசியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே…
ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனை கட்டணம், மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் இறந்தவர்களுக்கான சுடுகாட்டிற்குப் போராடி வரும் வேளையில், உலகப் புகழ்பெற்ற இந்நாட்டின் பணக்காரர்கள் எங்குச் சென்றார்கள்? என்று தேடிப்பாருங்கள். அவர்கள் மொத்தமாக மாயமாகிவிட்டார்கள் அல்லது பெயரளவிற்கு உதவி செய்து கொண்டு ஒதுங்கிக்கொண்டார்கள். சாமானியர்களின் சுரண்டலினால் மட்டுமே இயங்கும் அவர்களிடம் இரக்கம், உதவிப் போன்றவற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், அவர்களின் நிலையை வெளிப்படுத்தவே இப்பதிவு. ஒரு நாளைக்கு தற்போது 4 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகிறது. ஏப்ரல் மாதம் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000. இந்நிலையில், இந்நாட்டையே உரிமை கொண்டாடத் துடிக்கும் பெரும் பணக்காரர்கள் எவ்வித உதவும் நடவடிக்கைக்கும் முன்வரவில்லை. ஒரு சிலர் உதவி செய்திருந்தாலும் அது அவர்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்விற்கான பங்கை வழங்கினார்களே ஒழியச் சொந்த நிதியைத் தரவில்லை. சராசரி வருவாயிலிருந்து 2% சதவீத சமூக பொறுப்புணர்வு உதவியை (Corporate social responsibility) இந்திய அரசியலமைப்பு சட்டம்…
தமிழக தேர்தலில் இறுதியாக திமுக வென்றுள்ளது. ஒருவழியாக நீண்டகால அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக முதல்வராகிவிட்டார் ஸ்டாலின். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை திமுக பெறாதது பொதுவாகவே பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மிகவும் மோசமான ஆட்சியாக வெளிப்பட்ட எடப்பாடி தலைமையிலான அதிமுகவினாலேயே கணிசமான அளவு வாக்கைப் பெற முடிந்துள்ளது. குறிப்பாக, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடைப்பட்ட வாக்கு சதவீதம் என்பது சொற்பம்தான். அப்படியிருக்கையில், இந்த தேர்தல் இன்றைய தமிழக நிலை குறித்த பல பாடங்களைக் கற்பித்துள்ளது. இத்தேர்தலில் திமுக வெல்வது ஏற்கனவே தீர்க்கமானதாக இருந்தது. ஆனால், அது 200 தொகுதிகளுக்கு மேலான பிரமாண்ட வெற்றி எனச் சாமானியனிலிருந்து திமுகவுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த ஐபாக் நிறுவனம் வரை கூறி வந்தனர். ஆனால், தனிப்பெரும்பான்மை என்றாலும் எடப்பாடிக்கு எதிராகவே சராசரி வெற்றியைத்தான் திமுக பெற்றுள்ளது. இதன் முக்கிய காரணமாகக் கொங்கு மண்டலத்தில் பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்குக் கிடைத்துள்ளது. கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்…
இந்தியாவில் கடந்த வெள்ளிக் கிழமை ஒருநாளில் மட்டும் 3,30,000 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஒரு நாளின் இறப்பு மட்டும் 2200 ஐ கடந்துவிட்டது. இந்த திடீர் நிகழ்வு இந்தியாவின் சுகாதார கட்டமைப்பையே நிர்மூலமாக்கிவிட்டது. ஒருபுறம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக போராடும் மக்கள் என்றால், மற்றொருபுறம் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காமல் வாசலிலேயே போராடிப் பலியாகும் மக்கள். சுடுகாட்டைத் தவிர நாடே சுடுகாடாய் எரிந்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலை. இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தியாவைக் காக்கப் பாகிஸ்தான் தயாராக வேண்டும் என தமது பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள். #IndiaNeedsOxygen என்ற ஹாஸ்டாக் பாகிஸ்தான் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அரசியல் வித்தியாசங்களைக் கடந்து இந்த இடத்தில் இம்ரான் கான் உதவ வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. ‘நாம் எவ்வளவு வேறுபாடுகளுடன் வாழ்கிறோம் என்பது…