1878ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் பெர்லினில் ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. 28 நாடுகளும் கலந்து கொண்டனவா என்றால் இல்லை. பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய ஆறு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். அப்போது ஐரோப்பிய யூனியன் என்று எதுவும் இல்லை. ஐரோப்பிய யூனியனை ஏற்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கம் என்றாலும் இந்த ஆறு நாடுகள் மட்டுமே ஒரு யூனியன் போன்று செயல்பட்டன. அந்த மாநாட்டில் வேறொரு நோக்கமும் பேசப்பட்டது. அது உதுமானியப் பேரரசின் செல்வாக்கை ஐரோப்பாவில் குறைப்பது என்பதுதான். அன்றைய காலகட்டத்தில் ஒட்டமன் என்கிற உதுமானியப் பேரரசின் செல்வாக்கு தென் கிழக்கு ஐரோப்பா எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. கிரீஸ், செர்பியா, ரோமானியா, பல்கேரியா என உதுமானிய ஆட்சி தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் தன் ஆக்டோபஸ் பிடிக்குள் வைத்திருந்தது. ஐரோப்பிய நாடுகளின் விடுதலை முழுதாக இல்லாமல், ஐரோப்பிய யூனியன் சாத்தியமில்லை. உதுமானியப் பேரரசு பீனல் கோட் முறையிலான…
Author: Admin
1968ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான சட்டம் இயற்றுவது பற்றி விவாதம் நடந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் இஸ்ரேலைச் சுற்றி இருக்கின்ற அரபு நாடுகளுடன் ஆறு நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் யுத்தம் முடிவடைந்திருந்தது. நடந்து முடிந்த போரில் இஸ்ரேலிய அரசு பெண்களையும், குழந்தைகளையும் அரக்ககத்தனமாகக் குண்டுவீசிக் கொன்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாடுகள் தனித் தனியாக புகார் கொடுத்திருந்தன. இத்தனை நாடுகள் சேர்ந்தும் இஸ்ரேலை துவம்சம் செய்ய முடிய- வில்லையே என்ற வருத்தம் அரபு நாடுகளுக்கு முதன்முறையாக ஏற்பட்டிருந்தது. உதுமானிய கிலாஃபத்தை விட்டு வெளியேறிய பின்பு சுமார் 43 ஆண்டுகள் மத்திய கிழக்கு அரபு நாடுகளுக்கிடையே பெரிதாக எந்தவித ஒற்றுமையும் புரிதலும் இல்லை. அரபு நாடுகள் எதிர்பார்க்காத சட்டத்தை இஸ்ரேலிய அரசாங்கம் தங்களின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. மூன்று மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் அந்தப் புண்ணிய மலைத் தோட்டத்தை இஸ்ரேலிய அரசாங்கம் எக்காலத்திலும் இடிக்க முயற்சி செய்யாது. இஸ்ரேல்…
ஈஸா நபியை ‘ஈஸப்னு மர்யம்’ என அழைக்கிறது குர்ஆன். ‘மர்யமுடைய மகன் ஈசாவே’ என்பதுதான் அதன் பொருள். வானவர்கள் கூறினார்கள். ‘மர்யமே..! நிச்சயமாக அல்லாஹ் தன்னிலிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு ஒரு மகன் வரவிருப்பதைப் பற்றி நற்செய்தி கூறுகிறான். அவருடைய பெயர் அல் மஸீஹ்’. ‘எங்கு அவர் உயர்த்தப்பட்டாரோ அங்கிருந்து இறங்கி வருவார், அவர் இறைவனிடம் மிக கண்ணியமிக்கவர். அவர் இறங்கி வராமல் இந்த உலகம் தன் இறுதி மூச்சை விடாது’ என்பது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை. யூதர்களின் நம்பிக்கை வேறு விதமாக இருக்கிறது. கிருஸ்து வருவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ஆண்டி க்ரைஸ்ட் வருவார். அதுவும் தங்களின் யூத இனத்தில் வருவார், ஆண்டி க்ரைஸ்ட் என்றால் கிருஸ்துவுக்கு எதிரானவர் என்று பொருள். ஆண்டி க்ரைஸ்டை முஸ்லிம்கள் ‘தஜ்ஜால்’என்கிறார்கள். கிறித்தவர்களுமே ஆண்டி க்ரைஸ்ட் ‘இறைவனின் விரோதி’ எனச் சொல்கின்றனர். ஆண்டி க்ரைஸ்டைப் பற்றி ஏகப்பட்ட ஹாலிவுட் படங்கள் வந்துவிட்டன.…
கி.பி.70. ரோமர்களின் படை ஜெருசலத்தைச் சுற்றி வளைத்தது. ரோமப் படைகளை நோக்கி படைத்தளபதி தித்தூஸ் மிக ஆக்ரோஷமான உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான். ‘500 ஆண்டுகள் பழமையான கோயிலைத் தவிர்த்து ஏனைய இடங்களைத் தாக்குங்கள்’என்பதுதான் அவனிட்ட உத்தரவு. யூதர்களுடன் ஜொசிஃபெஸ்ஸை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி போர் இல்லாமல் ஒரு பொதுப்படையான முடிவுக்கு வரலாம் என்று தித்தூஸ் நினைத்தான். ஆனால் யூதர்களின் தந்திரமும், சூழ்ச்சியும் தித்தூஸுக்குக் கடும் கோபத்தையே வரவழைத்தது. இச்சூழ்ச்சியை அறிந்த தித்தூஸ் ‘ஒரு யூதனும் உயிரோடு இருக்கக் கூடாது’என்ற கடுமையான உத்தரவைப் பிறப்பித்தான். ரோமப் படைவீரர்களும் கடும் கோபத்தில் இருந்தனர். யூதர்களின் தாக்குதல்களாலும், தந்திரங்களாலும் சீற்றமடைந்திருந்த ரோமானிய வீரர்கள், ‘அவர்களின் கோவிலை மட்டும் விட்டு விடுங்கள்’ என்ற தித்தூஸின் உத்தரவை ஏற்காமல் கோயிலுடன் இணைந்திருந்த பகுதியில் தீ வைத்தனர். வரலாற்றில் இரண்டாம் முறையாக யூதர்களின் கோவில் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஜொசி ஃபெஸ் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ரோமர்கள் பேச்சுவார்த்தை…
ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு, எங்கள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய, இந்த கூட்டு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு சிறைவாசிகளின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம். தங்கள் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சிக் குழுவொன்று, குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து, எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தக் கோருகிறோம்.75 வயதைக் கடந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் 1987 ம் ஆண்டு முதல் (ஏறத்தாழ 34 ஆண்டுகளாக) சிறையில் இருந்து வருகிறார். அவரோடு ஆண்டியப்பன், பெருமாள் போன்றவர்களும் சிறையில் இருக்கிறார்கள்.அது போல, ஹாரூன் பாஷா, யாசுதீன் உள்ளிட்ட 19 பேர், தண்டனைக் கைதிகளாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் உள்ளனர். கடந்த காலங்களில், மாநில அரசு வழங்கிய பொதுமன்னிப்பில் இவர்கள் முன்விடுதலை செய்யப்படவில்லை.வெடிமருந்துச்…
கிமு 300 முதல் கிபி 200 வரையிலான கால-கட்டத்தில் நெகவ் பாலைவனத்தில் நான்கு நகரங்கள் வர்த்தகத்தில் செழித்திருந்தன. அவ்தக், ஹலுசா, மம்ஷிக், ஷவ்தா ஆகிய நான்கு பாலைவன நகரங்கள் தென் அரேபியாவின் மேமனிலிருந்து மத்திய தரைக்கடல் துறைமுகமான காசா வரையில் இலாபகரமான வர்த்தகப் பாதையாக இருந்து வந்தது. இந்தப் பாலைவன வர்த்தகப் பாதையில் பெட்ரா, காசா முதலான நகரங்களும் இணைக்கப்பட்டு மிகப்பெரும் பாலைவன வணிகம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது. பாலஸ்தீனம் இதன் முக்கிய வணிகம் கேந்திரம். ஜெருசலம் பெருவாரியான மத்திய கிழக்கு அரபு மக்களின் வியாபாரத் தொடர்பு மிக்க நகராகவும் அறியப்பட்டிருந்தது. புனித யாத்திரை செய்பவர்களின் கூட்டமும், கிஸ்ரா, பாரசீகம், யமன் வியாபாரிகளின் சந்தைகளும், பதூயீன்கள், கானான்கள், சமாரியன்களின் ஒட்டகம், ஆடுகளின் விற்பனைச் சந்தைகளும், பாலஸ்தீனத்தின் நெகவ் பாலைவனத்தை ஓர் வணிகக் கேந்திரமாக மாற்றியது. 1920ஆம் ஆண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆர்மி ராங்குலர் ஜீப்பில் புழுதி பறக்க அந்த…
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி படிப்பிற்கான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் மட்டும் இரத்து செய்யப்படாமல் இருப்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. பள்ளி இறுதியாண்டு தேர்வுகளை நடத்தினால் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால், நீட் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? ஏனெனில், +2 பொதுத்தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி இடங்களை நிரப்ப வேண்டும் என்பதே இந்திய ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, ஏராளமான மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. 2020-21 கல்வியாண்டு முதலே பள்ளிகள் செயல்படாத நிலையில் சனவரி 2021 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரவல் தடுப்பு (SOP – Standard Operating Procedures)…
“தாவீதின் மரணத்திற்குப் பின் அவருடைய மகன் சாலொமோன் எருசலேமில் பிரமாண்ட ஆலயத்தைக் கட்டினார். ஆசாரரிப்புக் கூடாரத்திற்கு மாற்றாக இது அமைந்தது. அரசாட்சி தாவீதின் பரம்பரையில் மாத்திரமே என்றென்றும் நிலைத்திருக்கும், என கடவுள் அவரோடு உடன் படிக்கை செய்திருந்தார். ஆகவே அபிஷேகம் செய்யப்பட்ட அரசரான மேசியா அவருடைய வம்சாவளியில் தோன்றுவார்.” பழைய ஏற்பாடு – ஆதியாகம் 22:18 இந்த மேசியா ராஜாவின் மூலம் இஸ்ரவேல் தேசத்தாரும் மற்ற எல்லா தேசத்தாரும் பரிபூரண ஆட்சியை அனுபவித்து மகிழ்வர் என்பதை தீர்க்கதரிசனம் சுட்டிக் காட்டுவதாகவே யூதர்கள் நம்புகிறார்கள். இதன் அடிப்படையில்தான் அவர்களின் பயணம் இன்று வரையில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்த தண்டனை முடிவுற்றதாகவே யூதர்கள் கருதுகிறார்கள். ‘காலப் போக்கில் யூதர்கள் தங்களின் கடவுள்களோடு செய்திருந்த ஒப்பந்தத்தை மீறினர். ஆனாலும் அவர்கள் திருந்துவதற்காக யெகோவா ஆகிய இறைவன் தொடர்ந்து பல தீர்க்கதரிசனங்களை அனுப்பினார்’ ஏசாயா 11. 1-10. ‘நவீனயுகம் என்பது இஸ்ரவேலர்களுக்கான யுகம்,…
குதிரையின் காலடிச் சப்தம், இப்னு சூரியாவை மிதமான உறக்கத்திலிருந்து விழிக்க வைத்தது. அந்தச் சிறிய மலைக் குன்றின் முகட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தவன் அவர்களின் தாமத வருகையின் காரணமாக பாறாங்கல் முகட்டில் சாய்ந்தவண்ணம் சற்றே உறங்கிப் போனான். நண்பர்கள் குதிரையை நடத்திக் கொண்டே அவன் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நடையில் வேகம் இருந்தாலும் முகத்தில் சோர்வும், வெறுப்பும் மண்டிக் கிடந்ததை இப்னு சூரியா உன்னிப்பாகக் கவனித்தான். அவன் எதிர்பார்த்த சுபச் செய்தியை அவர்கள் கொண்டுவரவில்லை. நபித்துவம் தங்களின் யூத இனத்தைத் தாண்டி அரபு சமுதாயத்திலிருந்தும் வரமுடியும் என்பதை அவனது அறிவு ஏற்றுக் கொள்ளவில்லை. தோராவில் இறுதி நபியாக வரப்போகிற நபரைப் பற்றிய அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதை அவன் அறிவான். சுர்மா கண் உடையவர், நடுத்தர உயரமானவர், அடர்த்தியான முடியுடையவர், அழகான முகம் கொண்டவர் இவை அந்த அஹமதுக்குப் பொருந்திப் போகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் அவரிடம் தோராவில் உள்ள…
தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய கோவை பயணத்தையொட்டி நடைபெற்ற உரையாடல்களையும், சில நாள்களுக்கு முன்பான நடப்புகளின் மீதான விவாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒரு நிகழ்வின் அடிப்படையில் கிடைக்கும் சாதக அம்சத்தை விட்டுவிட்டு அதையே முற்றிலும் ஒரு எதிர்மறையான உரையாடலாக கட்டமைத்துக் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எழுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுகவின் தோல்வியையடுத்து ஒட்டு மொத்தமாக அம்மக்களை பாஜக ஆதரவாளர்களாக முத்திரை குத்தும் செயல் துர்வாய்ப்பாக சொந்த மாநில மக்களாலேயே நிகழ்த்தப்பட்டது. சரி இது ஒரு கடுப்புதான் சரியாகி விடும் எனப்பார்த்தால் தொடர்ந்து கோவையை தென்னகத்தின் உத்திரப்பிரதேசமாக குறிப்பிடும் போக்கு நாளடைவில் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் இப்படியான தொடர் செயல்பாடுகள் என்பது கிட்டத்தட்ட எதிரியின் கையிலேயே ஆயுதத்தை ஒப்படைக்கும் செயல் எனலாம். புரியும்படி சொன்னால் இப்படி யோசித்துப் பாருங்கள், தமிழ்நாட்டிலேயே தொழில் செய்து பிழைத்தாலும் தமிழக கட்டமைப்பின் மீது தீரா வன்மம் கொண்டுள்ள வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு…