மாலிக் – சந்தேகத்திற்கிடமின்றி பெரும்பான்மையான ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மலையாளத் திரைப்படம். டேக் ஆஃப், சீ யூ சூன் திரைப்படங்களைத் தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த திரைப்படம். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிட இயலாததால் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் உருவாக்கத்தைப் பொறுத்தவரை, முந்தைய கேங்க்ஸ்டர் படங்களின் சாயல்கள் இருந்தாலும் சிறந்த படம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொடக்கத்திலும் முடிவிலும் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறது. திரைப்படத்தின் தொடக்கம் 12 நிமிடங்கள் நீண்ட ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்கள், மாறுபட்ட சூழல்கள், பல்வேறு கதாபாத்திரங்கள், வசனங்கள் எனத் திரைப்படம் தெளிந்த நீரோடையாகப் பயணிக்கிறது. 2 மணி நேரம் 41 நிமிடங்கள் சோர்வே ஏற்படாத அளவுக்குப் பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போட்டுள்ளார் படத்தின் இயக்குநரும் எடிட்டருமான மகேஷ் நாராயணன். அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படங்களில் தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம்…
Author: Admin
இட்சாக் ராபினையும், ஓஸ்லோ ஒப்பந்தத்தையும் பற்றிப் பேசாமல் இஸ்ரேலின் வரலாற்றைப் பேச முடியாது. இரண்டுமுறை இஸ்ரேலின் பிரதமராக இருந்தவர் ராபின். கோல்டா மெய்ரின் பதவிக் காலம் 1974- இல் முடிவடைந்து மீண்டும் அவரே பிரதமராக வரக்கூடிய சூழ்நிலையில், கோல்டா மெய்ரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உலக அரங்கில் இஸ்ரேலுக்குக் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. இதன் காரணமாக இஸ்ரேலிய கென்ஸெட்டில் பெரும் விவாதம் நடந்தது. இறுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராபினுக்கு பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தது. இடைக்கால பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோதும் மூன்று ஆண்டுகள் பிரதம ராக இருந்தார். மீண்டும் 1992ஆம் ஆண்டு பிரதமராகக் கிடைத்த வாய்ப்பில் தான் கொல்லப்படும் வரை இஸ்ரேலின் பிரதமராகவே இருந்தார். இஸ்ரேலிய வரலாற்றில் பிரதமராக இருக்கும்போதே கொல்லப்பட்ட ஒரே பிரதமர் ராபின்தான். அதுவும் இஸ்ரேலிய யூதர்களால் கொல்லப்பட்டார். ராபின் இஸ்ரேலுக்குச் செய்த சாதனைகளை இதுவரை எவரும் செய்திருக்க வாய்ப்பில்லை. ஓர் இராணுவ வீரனாகத் தன் வாழ்க்கையை…
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் சொன்னதென்ன..? அன்பார்ந்த வாசகர்களே நமது நீதித்துறை அதன் விழுமியங்களை இழந்து அநீதிகளின் உறைவிடமாக ஆனபோது, அதனைதட்டிக்கேட்டார், பிரசாந்த் பூஷன். உச்ச நீதிமன்றம் நாட்டை பாசிசத்தின் பிணக்கமாக ஆக்கிடுமுன் அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என நினைத்தார். அத்தனையும் இந்த நாட்டின் மீது கொண்டப்பற்றால், பாசத்தால் இந்த நாட்டைக் காத்திட தலையெடுத்த தலை மகன்களில் ஒருவர் அவர். இன்றைய இம்சை அரசர்களின் ஆட்சி நிச்சயமாக ஒருநாளில் வீழும். அன்று இந்தியாவைக் காத்தவர்களின் பட்டியலில் நிச்சயமாக ஓர் இடத்தைப் பிடிப்பார் பிரசாந்த் பூஷன் அவர்கள் என்பது திண்ணம். நமது உச்ச நீதிமன்றத்தின் நீதி நழுவிய நெறிமுறையை இரண்டு டிவிட்டர் பதிவுகளில் சுட்டிக் காட்டினார் வீரமகன் பிரசாந்த் பூஷன். ஒன்று, 27-06-2020இல் பதிவிடப்பட்டது. பிரிதொன்று 29-06-2020 அன்று பதிவிடப்பட்டது. இவை இரண்டையுமே சுற்றிவளைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக ஆக்கியது நமது உச்ச நீதிமன்றம். அந்த வகையில்…
பழிதீர் படலம் மொசாத்தின் தலைவர் ஸமிர் கொடுத்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 11 பேரும் கொல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மெய்ர், வாதி ஹத்தாதை முதல் நபராகத் தேர்ந்தெடுத்தார். ஏன் தெரியுமா? ஹத்தாத் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர். முஸ்லிம்களுக்காவது ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. ஆனால் ஹத்தாத் போன்றவர்கள் துரோகிகள், கொல்லப்பட வேண்டியவர்கள் என எண்ணினார் கோல்டா மெய்ர். ஹத்தாத் மருத்துவரான தம் நண்பர் ஹீபாஸு-டன் சேர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். 1956ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனர்களின் புனர் வாழ்வுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. அதில் தன்னை இணைத்துக் கொண்டார் ஹத்தாத். அரபு தேசிய இயக்கம் ஒரு பொத்தாம் பொதுவான இயக்கம். தன்னைப் போன்ற பாலஸ்தீன அகதிகளுக்குச் சேவை செய்யும் இயக்கம்.அதன் சேவை தீவிரமெடுத்தது. 1967 இஸ்ரேலுடன் அரபு நாடுகள் அனைத்தும் சண்டையிட்டுப் பின்வாங்கின. இன்னும்…
கோல்டா மேயர். 1969இல் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடுமையான ஆறு நாள்கள் யுத்தம் 1967இல் முடிவடைந்து, மத்திய கிழக்கு பிராந்தியமே ஒரு மயான அமைதியில் அடுத்தகட்ட நிகழ்வை யோசிக்கின்ற சூழலில் இஸ்ரேலின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில் அமைச்சராகவும், வெளிநாட்டு விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரேட் தாட்சர் இரும்புப் பெண் என அழைக்கப்படுவதற்கு முன்பாகவே இஸ்ரேலிய அரசியலில் இரும்புப் பெண் அவர். டேவிட் பென்குரியன் தன் அமைச்சரவையில் இருந்த கோல்டாவை மிகச்சிறந்த ஆண் ஆளுமைகளுக்கு நிகரான பெண் என்று வர்ணிப்பது உண்டு. அவர் வெளிநாட்டு விவகாரத்துறையில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பழுத்த அனுபவமிக்கவர். பிரதமராக 1969லிருந்து சுமார் ஐந்து ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் அவர் எடுத்த பல முடிவுகளில் மனிதாபிமானம் மருந்துக்குக் கூட இல்லை. போலந்திலிருந்து யூதர்கள் அதிக அளவில் இஸ்ரேலுக்கு வரத் தொடங்கினார்கள். கோல்டா மேயர் போலந்து நாட்டிற்கு ஒரு…
இஸ்ரேல் என்ற மனநோயாளியின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பாலஸ்தீனம் என்ற நாட்டின் கால்வாசிப் பகுதிதான் இன்று முஸ்லிம்களின் வசம் இருக்கின்றது. ஆக்கிரமிக்க வந்தவன் நாட்டை பிடித்து தான் ஒரு நாடு என்று அறிவித்திருக்கின்றான். ஆனால் புனித பூமியின் சொந்தக்காரர்களோ சொந்த பூமியில் அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் படிக்கும் போது பாலஸ்தீனம் பல தலைமுறையைக் கடந்து வந்திருந்தாலும் நபிமார்களின் பூமி, இஸ்லாம் வளர்ந்த இடம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடமாக இருக்கிறது. பாலஸ்தீனம்இஸ்லாத்தின் பூமி .தெய்வீக தூதுகளின் பிறப்பிடம் இறைத்தூதர்களின் இல்லறம். பல நபிமார்களின் வாழ்வை இந்த வரலாறு உள்ளிடக்கியிருக்கிறது.பலஸ்தீன வரலாற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்விலிருந்து தொடங்க வேண்டும். இல்லையெனில் நுனிப்புல் மேய்ந்த கதையாகி விடும். இஸ்லாமிய தேசம், பல நபிமார்களின் பிறப்பிடம், புனிதமிக்க மஸ்ஜிதுல் அக்ஸாவின் அமைவிடம் போன்ற பல சிறப்புகளைப் பெற்ற தேசம் தான்…
எழுந்திரு சலாஹுத்தீன்..! இன்றோடு சிலுவை யுத்தக் காரர்களின் போர் முடிவு பெற்றது. எட்மண்ட் ஆலன் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபின் அடக்கத்தலத் திலிருந்து உரக்கக் கூறினான். முதலாம் உலகப்போருக்குப் பின் கி.பி. 1920இல் பாலஸ்தீனமும், சிரியாவும் பிரிட்டன் வசம் வந்த நிலையில், பிரிட்டன் படைத் தளபதி எட்மன்ட் ஆலன் சிரியாவின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் முதல் நாள் நேரடியாக சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபின் அடக்கத்தலம் சென்று சொன்ன வாசகங்கள்தாம் இவை. 19ஆம் நூற்றாண்டில் யூதர்களின் நில வங்கி மூலமாக பாலஸ்தீனத்தில் இடங்களைக் கையகப்படுத்துவது என்பது ஒரு சிவில் யுத்தம்தான். ஆனால் 11ஆம் நூற்றாண்டில் நடந்த சிலுவை யுத்தங்கள் பாலஸ்தீன மண்ணில் தொடர்ச்சியாக நடந்த இரத்த சரித்திரங்கள். கிறித்தவர்களின் புனித நிலம் இஸ்லாமியர்கள் வசம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதை மீட்டெடுப்பது தான் உண்மையான கிறித்தவரின் நோக்கமாக இருக்க முடியும் என்று அன்றைய திருச்சபையின் அணுசரனையோடு முடுக்கிவிடப்பட்ட பரப்புரை ஐரோப்பா முழுவதும் பெரும் தாக்கத்தை…
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர்கள் யூதர்கள். அவர்களைப் பொருத்தவரையில் ஹிட்லருக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை ஆதரிப்பார்கள் என்றாலும் பிரிட்டன் அவர்களுக்கு சற்று விஷேசமான நாடு. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில்தான் படித்த வசதியான யூதர்கள் அதிகமானோர் அடைக்கலமாகி இருந்தனர். ஆயிரமாயிரம் யூதர்கள் எங்களையும் பிரிட்டன் படையில் வீரர்களாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் நாங்களும் பிரிட்டன் சார்பில் போரில் கலந்து கொள்கிறோம் என பிரிட்டன் அரசைச் சுயமாகவே கேட்டுக் கொள்ளும் அளவுக்கு பிரிட்டன் ஆதரவு நிலை அவர்களிடையே வெறித்தனமாக நிலவியது. ரஷ்யாவும் ஜெர்மனியை எதிர்த்த நாடுதான். ஆனால் அங்கு நடந்த கிறித்தவ யூத மோதல்கள் ரஷ்யாவுடன் இணக்கமான சூழ்நிலையைக் கொடுக்கவில்லை. அங்கிருந்து சுமார் பத்து இலட்சம் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதன் வடு இன்று வரையில் யூதர்களிடம் இருக்கிறது. டேவிட் பென்குரியன் இஸ்ரேல் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர். யூதர்களுக்காக ஹிட்லர் போலந்து நாட்டில் ஆஸ்விட்ச் நகரில்தான் மிகப் பெரும்…
1876 -1909 காலகட்டம். இரண்டாம் அப்துல் ஹமீது, உதுமானியப் பேரரசின் அன்றைய ஆட்சியாளர். பிஸ்மார்க் தலைமையிலான ஆறு நாடு- களைச் சார்ந்த ஐரோப்பியக் கூட்டமைப்பு தங்களின் பெர்லின் தீர்மானத்தை இவருக்குத்தான் அனுப்பி வைத்தது. கலீபா இரண்டாம் அப்துல் ஹமீது ஒரு ரெண்டுங்கெட்டான் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டமும், மேற்கத்தியப் பண்பாடும் கலந்து கட்டிய ஆட்சி முறையில் ராஜாங்கம் இருந்தது. கலீபாவின் அரண்மனையில் மேற்கத்தியப் பண்பாடு கொடிகட்டிப் பறந்தது. ஆனால் துருக்கியப் படையில் மிகச்சிறந்த போர் வீரர்கள் தளபதி உஸ்மான் பாஷா தலைமையில் ஆட்சி மாண்பைக் கட்டிக்காத்துக் கொண்டிருந்தனர். ஆட்சி மிகப்பெரும் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். போர்களுக்கான செலவும், கப்பல் படையை நவீனப்படுத்துவதில் கொட்டிய பணமும், ஆட்சிக் கஜானாவைக் கடனாளியாக்கி இருந்தது. இதே கால கட்டத்தில்தான் ஜெர்மனியில் நவீன சிந்தனையுடன் கூடிய ஒரு யூதர், மேற்கத்தியப் பண்பாட்டுக்கு ஏற்ப யூத மதத்தை நவீனப்படுத்த வேண்டுமென பரப்புரை செய்து கொண்டிருந்தார்.…
உமர் ரலியல்லாஹு அன்ஹு பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளுதல்: கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர்.ஒரு அமைதியான நிம்மதியான நிலைக்கு மீண்டும் திரும்பியது. சியோனிசதிற்கு முன்பு1887-88ம் ஆண்டில் பாலஸ்தீனம் ஒரு அமைதியான நிலையில் இருந்தது அப்போது அந்நாட்டில் 6,00,000 மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தன அதில் 10சதவீதம் கிறிஸ்தவர்களும் பெரும்பாலும் முஸ்லிகளும் 25,000 யூதர்களும் இருந்தார்கள்.அவர்களுக்கு மத்தியில் அன்பு பாராட்டலும்,இனக்கமும்,அமைதியும் காணப்பட்டது.சியோனிஸத்தின் வருகைவரை பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான உறவுகள் நிலையான மற்றும் அமைதியானவையாக இருந்தன. சியோனிஸம்1880-ல் ஜெர்மனி…