சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வழக்கம்போல ஒரு சாதாரண விளையாட்டு எனும், நிலையைத் தாண்டி இரு நாடுகளுக்கான போர் என்பதை போன்ற பிம்பத்தை மக்கள் விரோத சக்திகள் ஊதிப் பெரிதாக்கி காட்டின . இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது.வெற்றியும் தோல்வியும் சகஜம் . அதுவும் இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத தனியார் நிறுவனமான கிரிக்கெட் வாரியத்தின் தோல்வி என்பது இந்தியாவின் தோல்வி அல்ல. வென்றாலும் தோற்றாலும் லாபம் சம்பாதித்தாலும் சம்பாதித்தாலும் அது இந்திய அரசுக்கு நேரடியாக எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை .இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை முஸ்லிம்களுக்கு எதிரான மனப்பான்மையாக உருவாக்குவதற்கு பாசிஸ சக்திகள் திட்டம் போட்டு வேலை செய்தனர். அணியில் பல கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்ற போது, முஹம்மது சமியினுடைய தேசப்பற்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. அவற்றையும் அப்படியே நம்பிக்கை உண்டு பலரும் பகிரங்கமாக வெறுப்பை பிரச்சாரம் செய்தார்கள் தனிமனிதன்…
Author: Admin
கோவை ஜங்ஷனுக்கு தொட்டடுத்து இருக்கும் “ஹைதர்அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் பள்ளிவாசல்” என்ற அடையாளத்துடன் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. 1921ல் மலப்புரத்தில், ஆங்கிலேயருக்கும் மாப்பிளாமாருக்கும் இடையில் நடத்தப்பட்ட போர் நடைபெற்ற பிறகு மாப்பிளாமாரை சூர்ச்சியால் வீழ்த்தி கொத்துக்கொத்தாக கொன்றுகுவித்ததோடு நில்லாமல்…அவர்களில் வீரியமாக சண்டையிட்டவர்களை வங்காளத்திற்கும் மதராஸ் மாகாணத்திற்குமாக சுமார் நான்காயிரம் பேரை அந்தமான் சிறைக்கு நாடுகடத்த திட்டமிட்டனர் வெள்ளைய ஆதிக்கவாதிகள். இந்த நிகழ்வுக்காக போர் கைதிகளை மொத்தம் மொத்தமாக ஆடு,மாடுகளை போல சரக்கு ரயில்களில் அடைத்து கோவை வழியாக அனுப்பி வைத்தனர். மலப்புரம், ஆருரங்காடி வழியாக கோவை வந்த கூட்ஸ் ரயிலில் பசி,தாகத்தோடும் அடிபட்ட நிலையில் குத்துயிரும் குலையுயிருமாக வந்தவர்களில் பலர் ரயிலுக்குள் சுவாசிக்க காற்றும் கிடைக்கப்பெறாது சுமார் 70 பேர் வரை மாண்டுபோயினர். கோவை – போத்தனூர் ரயில் நிலையத்தில் வந்நு, ரயில் நின்றபோது ரத்தவாடையில் மிதந்து எஞ்சியிருந்த அனைவரும் இறந்து போயிருந்தனர். அவ்வாறு இறந்து போனவர்கள் 316பேரை படத்திலுள்ள…
இந்தியாவில் பழங்காலந்தொட்டு கல்வியறிவு பெறுவது வசதிபடைத்தவர்களுக்கும் அரசகுடும்பத்தினருக்குமானது என்கிற நிலையே இருந்து வந்தது, அதுபோல வடநாட்டு குருகுலங்களில் குழந்தைகள் படிக்க குருதட்சணையாக பெறப்படும் தொகை, சாமான்ய மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக வழிவகுத்தது. பிராமணீய கோட்பாடுகளின்படி சமஸ்கிருத மொழி அவர்களுக்கானது மட்டுமே, அதனை அடுத்த சாதியினர் கேட்பின் கேட்டவர் காதில் எண்ணெயை காய்ச்சி ஊற்றி தண்டனை நிறைவேற்ற வேண்டும் என கடுமையான சட்டதிட்டங்கள் நிலவிய காலத்தில் தான் இந்தியாவில் அரபுகளின் பிரவேசம் நிகழ்ந்தது. அரபுகளின் ஆட்சியில் மதரஸாக்கள் வழியாக அனைவருக்கும் உணவுடன் கூடிய இலவசக்கல்வி கொடுக்கப்பட்டது என்கிற உண்மை நம்மில் பலருக்கும் கூட அறிவிக்கப்படுவதில்லை. குருகுலத்தை போல குருக்களுக்கு தட்சணையோ அல்லது அவரது குடும்பத்திற்கு எடுபிடி வேலையோ கூட செய்யத்தேவையில்லை. இந்தியாவில் மதரஸாக்களின் தொடக்கம்:- இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அரபு அரசர்களின் (உமைய்யத் கலிபாக்கள்) எல்லைதாண்டிய விரிவாக்கத்திற்கு இலக்காகிய பிராந்தியம் என்றால் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை கூறலாம். கிபி.712 -…
சில நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் தொடர்பான ஒரு காணொளி வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்குப் பின்னால் கே.டி. இராகவன் தன் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக சில முற்போக்கு எழுத்தாளர்கள்,இது ஒரு தனிநபர் தொடர்பான விஷயம் என்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது சம்பந்தப்பட்ட இருவரது தனிப்பட்ட உரிமை என்றும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பொதுவாக இன்றைக்கு தனிநபர் ஒழுக்கம் என்பது ஒருகவனத்திற்குரிய பெரிய விஷயம் இல்லை என்பதுதான்நவீனத்துவ பின்னணியிலிருந்து பேசுபவர்கள் கருதுகிறார்கள். கேடி ராகவன் விஷயத்தில் காணொளி ஒன்று வெளியானது காரணத்தினால் அவருடைய ஒழுக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இன்றைய நவீனத்துவ உலகில் பலரது மறைவு வாழ்க்கையில் ஒளிப்படக் கருவிகள்வைக்கப்படுமானால் பல அரசியல் தலைவர்களது வாழ்க்கையும் இதிலிருந்து விதிவிலக்கான ஒன்றாக இருக்காது.தன்னொழுக்கமில்லாத தலைவர்களைக் கொண்ட நாடாகத்தான் இந்தியா இருந்து கொண்டிருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதிலும்…
இன்றைக்கு இந்தியாவில் முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தைரியமாக நடமாட முடியாத சூழல். ஒரு இறுக்கமான நிலைமையை சங்பரிவார் திட்டமிட்டு சாதித்துள்ளது. நிச்சயமாக இது ஒரு கடுமையான சோதனை காலம்தான். இதற்கு திசை காட்டத்தெரியாத சுயநலமிக்க தலைவர்களும் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் முஸ்லிம் சமூகமும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கவியலாது.நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். முதலாவதாக முஸ்லிம் சமூகத்தை பயமூட்டுவதை விட தைரியப்படுத்த வேண்டும். நாளைய தினத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். சில அமைப்புகளும் அதன் தலைவர்களும் தங்களின் இருப்பை தக்கவைப்பதற்காக சமூகத்தின் அச்ச மனோநிலையை அதிகரிக்கச் செய்கிறார்கள். முஸ்லிம்களை காட்டி ஒரு போலியான அச்ச மனோநிலையை எப்படி ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே கட்டமைக்கிறதோ அதைப் போன்றுதான் இவர்களும் செய்கிறார்கள். இதை பொறுப்புணர்வுமிக்க சமுதாய தலைவர்கள் கவனமேற்கொண்டு முஸ்லிம்களை அச்சத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். வட இந்திய நிலைமை தென் இந்தியாவில்…
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து ஜமாஅத் தலைவர் கருத்து! ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக அங்கு தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் அமைதியற்ற சூழலுக்கும், இரத்தக் களரிக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும், அந்த நாட்டில் அமைதியும் இணக்கமும் பாதுகாப்பும் நிலைபெறுவதற்கும் ஆப்கன் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கும் இந்த மாற்றங்கள் துணை நிற்கும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற பத்திரிகை அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: இருபதாண்டுகளுக்கு முன்பு ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்ட படையெடுப்புகளைத் தொடர்ந்து அங்கு இருந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அந்த நாட்டின் அப்பாவி மக்களின் உயிர்கள் ஆக்கிரமிப்புப் படைகளால் வேட்டையாடப்பட்டன. எந்தப் பாவமும் செய்யாத, நிராயுதபாணியான மக்கள் மீது ஆக்கிரமிப்புப் படைகள் சொல்லொண்ணா கொடுமைகளைத் தொடர்ந்து இழைத்து வந்தன. குண்டுகளை வீசியும் குண்டுவெடிப்புகளை நடத்தியும் ஆக்கிரமிப்புப் படைகள் பேயாட்டம்…
பழ நூறு வருடங்களாக ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்து நமது முன்னோர்களின் பலவேறு போராட்டங்களுக்கும், துயாயங்களுக்குப் பின்னால் சுதந்திரம் பெற்றதை நாம் எல்லாம் அறிவோம். அவ்வாறு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு நேற்றைய தினத்துடன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கின்றோம். இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று பாடுவார் நாகூர் அனிபா அவர்கள். இத்தகைய சுதந்திர இந்தியா எனறவுடன் நம் அனைவருக்கும் நம் மணக்கண்முன் வருவது இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இந்த நாடு அதன் குடிமக்களுக்கு சில அடிப்படை உரிமைளை வழங்கியிருக்கிறது. அதன் மூலமாக மக்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் வாழ வேண்டும் என அரசு சில அடிப்படை உரிமைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது எனபதுதான். அவை சம உரிமை (Right to equality), நமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்காக எழுத்து மற்றும் பேச்சுரிமை (Right to freedom), சுரண்டலுக்கு எதிரான உரிமை (Right against exploitation), சமய சுதந்திர உரிமை…
யூதர்களுக்கு எதிரான ஹாலோகாஸ்ட் படுகொலைகள் ஜெர்மனியில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தன. யூதர்களை விதம் விதமாகக் கொல்வதற்கு ஹிட்லர் பல வதை முகாம்களை அமைத்திருந்தான். போலந்தில் உள்ள ஆஸ்விட்ஜ் நகரில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டு மிகப்பெரிய இரண்டு வதைமுகாம்கள் கட்டப்பட்டன. அந்த வதைமுகாம்களுக்கு யூதர்களைக் கொண்டு வருவதற்கென்று தனி ரயில் போக்குவரத்தையே ஏற்படுத்தியிருந்தான் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படை தோல்வியுற்று, ரஷ்யா அந் நகரைக் கைப்பற்றும் வரை உலகிற்கு இப்படி ஒரு வதைமுகாம் இருப்பதே தெரியாது. அடால்ப் ஐக்மன். யூத இன வெறுப்பில் ஹிட்லருக்கு நிகரானவன் எனப் பெயரெடுத்தவன். ஹிட்லரின் தளபதிகளில் ஒருவன். ஹிட்லரின் நெஞ்சைப் பதைபதைக்கும் உத்தரவுகளைச் செயல்படுத்தும் இடத்தில் இருந்தவன்தான் அடால்ப் ஐக்மன். சுமார் ஐம்பது இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதற்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தான் அடால்ப் ஐக்மன். இரண்டாம் உலகப் போரின் தோல்வி ஹிட்லரின் தற்கொலையில் முடிந்தது. அவனின்…
கார்ப்பரேட்டுகளிடத்தில் பெருங்கடலை ஒப்படைக்கும் மோடி அரசின் சதித்திட்டம் நம் வீட்டின் வாசலில் கூடையில் மீன்களுடன் வந்து வியாபாரம் செய்யும் பெண்களிடத்தில் இனி என்றைக்குமே பேரம் பேசி மீன்கள் வாங்க முடியாது. சாமானிய மீனவனால் மீன் பிடிக்க முடியாது என சட்டம் வந்தால், எப்படி சாமானிய பெண்களால் மீனை நம் வீட்டிற்கே கொண்டுவந்து விற்க இயலும்? இப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது மோடி அரசு கொண்டு வர இருக்கும், ‘புதிய தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம் (Indian Marine Fisheries Bill, 2021)’. பாரம்பரியமாக கடல் தொழிலை மேற்கொண்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி தொழில் மீது பல கட்டுப்பாடுகளை கொண்டுவரும் இந்த புதிய மசோதா, தற்போது நடந்து கொண்டிருக்கும் மழைக்கால (ஆகஸ்டு) நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற காத்திருக்கிறது. மே பதினேழு இயக்கம் கடந்த 2016ம் ஆண்டு அம்பலப்படுத்திய உலகவர்த்தகக் கழகத்தில் (WTO) இந்திய அரசு ஏற்றுக்கொண்ட பல்வேறு சமரசங்களின் தொடர்ச்சியாக மீன்வள மசோதாவும்…
பறவைகளை வீழ்த்தும் வல்லூறுகள் கத்தார் நாட்டிலிருந்து இயங்கும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, மறைந்த பாலஸ்தீன அதிபர் யாசர் அரஃபாத்தைப் பற்றிய ஓர் ஆவணப் படத்தை 2012ஆம் ஆண்டு வெளியிட்டது. 2004ஆம் ஆண்டு அவர் மரணமடைந்து ரமல்லாவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரின் மரணம் இயற்கையானது அல்ல, அது சந்தேக மரணம் என்ற செய்தியை மக்களுக்குச் சொன்னது அந்த ஆவணப்படம். பாலஸ்தீனத்திலிருந்து பிரான்ஸுக்கு யாசர் அரஃபாத் மேல் சிகிச்சைக்காக விமானம் ஏறும்போதுகூட மக்களைப் பார்த்து கை அசைத்துக் கொண்டுதான் சென்றார். அவருக்கான நோயின் தன்மை என்ன, மரணமடைந்ததும் அவரின் உடல் ஏன் உடல் கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை, என எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மரணத்தின் சர்ச்சை யைக் கொளுத்திப் போட்டது அல்-ஜஸீரா. யாசர் அரஃபாத்தின் உடைகளில் போரியம்-210 என்ற வேதிப் பொருள்களின் துகள் படிந்திருப்பதாகவும், அதை நுகர்வதன் மூலம் அவரின் உடல்நிலை பாதிப்படைந்ததாகவும், அவர் பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்களிலும் அந்தத் துகள்களின் தாக்கம்…