இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராக சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என SIO தமிழ்நாடு கோரிக்கை. புல்லி பாய் செயலியில் இஸ்லாமிய பெண் பத்திரிக்கையாளர்கள், பெண் போராளிகளின் புகைப்படங்களை பதிவேற்றி போலியாக ஏலம் விடப்பட்டது அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்புணர்வையும், பெண் வெறுப்பையும் காட்டுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோல ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியின் மூலம் 80க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் சுயவிவரங்கள், புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு ஏலத்தில் விடப்பட்டபோதே அது தொடர்பாக வழக்கு பதியப்பட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை, காரணமானவர்கள் கைதும் செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக இப்போது புல்லி பாய் செயலியின் மூலம் இஸ்லாமிய பெண்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதும், அதனை அரசு கண்டும் காணாமல் இருப்பதும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை இந்துத்துவா வாதிகள் கட்டமைப்பது தெளிவாகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் முற்போக்குவாதிகள், பெண்ணியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் இதுகுறித்து வாய்திறக்காமல் கள்ளமௌனம் சாதிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும்…
Author: Admin
உலகமறிந்த ஆன்மீகம் என்பது பொது வாழ்வை முற்றாகத் துறந்து; சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடுவதை விட்டு முழுமையாக விலகி; இறையோறுமை, தியானம், அமைதி, அன்பு போன்ற கருத்துகளை பரவச் செய்வது தான். ஆனால் கடந்த டிசம்பரில் டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற ஹிந்து சாமியார்களின் மாநாட்டில் சாமியார்களின் பேச்சு இதற்கு நேர் எதிராக இருந்தது. உத்தரகாண்டில் நடைபெற்ற இந்து சாமியார்களின் மாநாட்டின் மையக்கருத்து, “இஸ்லாமிய இந்தியாவில் தர்மத்தின் எதிர்காலம்: சவால்களும்- தீர்வுகளும்” என்பதுதான். மையக்கருத்தே தேச ஒற்றுமையையும் அமைதியையும் துண்டாடும் வகையில் இருக்கிறது. இதை தொடர்ந்து அங்கு பேசிய ஒவ்வொரு சாமியார்களும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்- கிறிஸ்தவர்களின் வாழ்வையும் உயிரையும் அச்சுறுத்தும் வகையில் இருந்தது. அந்த மாநாட்டில் பேசிய ஒரு சாமியார் இப்படி கூறுகிறார், “நூறு பேர் இருந்தால் போதும் அவர்களில் 20 லட்சம் பேரை கொன்று விடலாம்” மற்றொரு சாமியார் இவ்வாறு கூறுகிறார், “அவர்களை கொலை செய்ய நமது…
அந்த மலைகளில் மேய்ந்து கொண்டு இருக்கும் ஆட்டு குட்டிக்கு ஏதாவது நேர்ந்தால் கூட என் இறைவனிடம் நான் பதில் கூற வேண்டும் என்று அரேபியவை ஆட்சி செய்த கலிபா உமர் ரலி அவர்கள் கூறினார்கள், அதுபோல இன்று பொறுப்பாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கு உள்ள காடுகள், நீர்நிலைகள்,காற்று,மண்வளங்கள்,வனவிலங்குகள் என எல்லாவற்றுக்குமான பொறுப்பாளியாக தான் ஒரு தலைவன் தேர்தெடுக்கப்படுகிறார் ஆனால் தற்போது இருக்க கூடிய தலைமை என்பது வெறும் மனிதன் மனிதன் மனிதன் என்று சுழல கூடிய ஒன்றாக மாறிவிட்டது.dha இந்த பூமி பந்தானது வெறும் மனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாட கூடிய ஒன்று இல்லை இங்கே இருக்கும் சிறு அனில் முதல் பெரிய யானை வரை இங்கு வசிக்கும் உரிமை உடையது தான், மனிதனுக்கு பெரிய அளவு உரிமையும் அனில் போன்ற ஜீவராசிகளுக்கு சிறிய அளவு உரிமையும் என்ற பாகுபாடு கிடையாது இயற்கை தராசில் அனைத்தும் உயிரினங்களே, இந்த பூமியில் வசிக்கும் உயிரினங்கள்…
2019 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாடு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டை அச்சறுத்தும் வகையில் அதிகரித்து வரும் மக்கள்தொகை ‘பெருவெடிப்பை’ குறித்து சில கருத்துக்களைச் சொன்னப் பிறகுதான் இந்த அறிவிப்பு வந்தது. உண்மையில் அப்படியொரு ‘பெருவெடிப்பு’ இந்தியாவில் இல்லை; எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நமது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (மொத்த கருவுறுதல் விகிதம்) குறைந்து வருவதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகை ஒருநிலைப்பட்டு கட்டுப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. புள்ளி விவரக் கணக்குகளும் ஆவணங்களும் அல்ல, பெரும்பாலும் இன பேதங்கள்தான் சங்பரிவார்களின் இன வெறி அரசியலின் முதுகெலும்புகள் . இயல்பாகவே, இந்துத்துவா வாதிகள் இந்தச் சொற்பொழிவுக்கு பெரும் விளம்பரம் கொடுத்தனர். சங்பரிவார தலைவர்கள் பலர் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை உயர்த்தவும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பகிரங்கமாக…
. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர் தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார். அப்படியானால், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகம் படித்தவர்கள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும்…
தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளைக் கடந்து 38 இஸ்லாமியர்கள், இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் மற்றும் வீரப்பன் வழக்கில் உள்ள மாதையன் ஆகியோர் தமிழ்நாட்டுச் சிறையில் வாடுகின்றனர். எழுவர் விடுதலையைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அவர்களை விடுவிப்பதாக கொள்கை முடிவெடுத்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைப் போட்டுவருகிறது. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையும் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையும் குறுக்கே நின்று கொண்டிருந்தன. இது தொடர்பான அரசாணை ஒன்றை நவம்பர் 15 அன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அது 2018 ஆம் ஆண்டு அரசாணையைவிடவும் மோசமான ஒன்று என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். தமிழ்நாடு அரசு 700 பேரை முன் விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதில் நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஒருவர்கூட வெளிவர முடியாதபடியான அரசாணை இது.…
மூன்று வேளாண் சட்டங்களையும் விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் பிரதமர். விவசாயிகளின் வருமானத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில், சுதந்திரச் சந்தை ஆதரவு பொருளாதார அறிஞர்கள் இச்சட்டங்களை ஆதரித்தனர். மாறாக, இவை விவசாயிகளைப் பெருந்தொழில் நிறுவனங்களின் லாப நோக்குக்கு ஏற்ப செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளிவிடும் என்று இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் எதிர்த்தனர். என்னைப் பொருத்தவரை, சட்டங்களின் உள்ளடக்கத்தைவிட, அவை உருவாக்கப்பட்டதிலும், அவசர கதியில் எப்படி அணுகப்பட்டன என்பதிலும்தான் பிரச்சினை அதிகம் என்பேன். அவற்றை சட்டமாக்கிய விதமும், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க இந்த அரசு கையாண்ட கொடூரமான அடக்குமுறைகளும், ஜனநாயக வழிமுறைகளையும் நடைமுறைகளையும் அப்பட்டமாக மீறிய செயல் என்பேன். முட்டாள்தனம் இந்திய அரசமைப்புச் சட்டப்படி, வேளாண்மை என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலுக்குள் வருவது ஆகும். ஆனால், மூன்று வேளாண் சட்டங்களும் எந்தவொரு மாநில அரசையும் – பாஜக ஆளும் மாநிலங்களைக்கூட – ஆலோசனை கலக்காமலேயே இயற்றப்பட்டன. இந்த அரசு எப்படிச் செயல்படுகிறது…
நீரின் அருமை உணர்வாய் கோடையிலே என்ற பாடலின் வரிகளுக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள் சென்னை மக்கள் ஆம் இன்று இந்த வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தத்தளிக்கும் சென்னை வெயில் காலத்தில் குடிநீர் லாரிகளை எதிர்நோக்கி நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பார்கள். ஒரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடு மறுபக்கம் மழை வெள்ள பாதிப்பு எங்கே இந்த சமநிலை தவறுகிறது தண்ணீர் இயற்கையின் அன்பளிப்புகளில் ஒன்று எப்படி மலைகளில் உள்ள கனிமங்களுக்கு மதிப்பு உள்ளதோ, நிலத்துக்கு அடியில் உள்ள வாயுக்கு மதிப்புள்ளதோ அதே மதிப்பு தண்ணீர்க்கும் உண்டு ஆனால் இதை கவனிக்காமல் வெறும் கனிமம் மற்றும் வாயுக்களை மட்டும் வைத்து கொண்டு அரசை வல்லரசாக ஆக்க முயற்சி செய்து வருகிறார்கள். மக்களின் எதிர்ப்பை மீறி இந்த வகையான திட்டங்களை செயல்படுத்த வேகமெடுக்கிறார்கள். ஆனால் தேவையான சில திட்டங்கள் இன்னும் திட்டமாகவே உள்ளன மழை வெள்ளம் என்பது பிரச்சனையாக அரசு கண்களுக்கு புலப்படவில்லையா? சென்னை தலைநகரம் அதிகபடியான…
சென்னைக்கு என்று பல அடையாளங்கள் உள்ளது. தலைமையகம், மெரீனா கடற்கரை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை என சென்னையின் அடையாளங்கள் நீண்டுகொண்டே செல்லும். அதில் ஒன்றுதான் மழைக்காலங்களில் சென்னை தண்ணீரில் மிதப்பது. ஒரு மணி நேரம் விடாது மழை பெய்தாலே போதும் “மீண்டு வா சென்னை” என போஸ்டர் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் மக்கள். அந்த அளவு சென்னையின் உள்கட்டமைப்பு வசதி மிக மோசமாக உள்ளது. இதற்குப் பின்னால் அளவுக்கதிகமான மக்கள் தொகை. நாளுக்கு நாள் சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள் என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட விளைவுகள் என்ற அடிப்படையில் சென்னையின் நிலை என்பது பரிதாப நிலைதான். மழைக்காலங்களில்தான் இவ்வாறு சரி வெயில் காலங்களிலாவது நிம்மதியாக இருக்க முடியுமா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான பதில். ஆம் மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை மக்கள் இன்னும் சில மாதங்களில் வெயில் காலம் வந்தவுடன் குடிக்க கூட நீர் இல்லாத…
இந்த நூலை பற்றி எழுதுவதற்கு முன்பு இசுலாமியர்களை வந்தேறி எனச்சொல்லி அரசியல் ஆயுதமாக வைத்துள்ளவர்களும், அவர்களுக்கு பதில் சொல்ல தயங்கும் இசுலாமியர்களும், வரலாற்று ஆர்வலர்களும் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டிய நூல் . தமிழின் தமிழர் மாண்பைக்கூறும் மணிமேகலை ‘தண்டமிழ் வினைஞர் தம்முடன் கூடிப்பணிபுரிந்த யவண (இசுலாமியன்) தச்ச’, ராமாயணத்தை கேட்டோ அல்லது படித்தோ தமிழில் எழுதிய கம்பன் இசுலாமியர்களைப்பற்றி எழுதியுள்ள ‘சோனக (இசுலாமியன்) மனையிற்றூய …, என்ற கவி வரிகள். ”துருக்கர் தரவந்த வயப்பரிகள் ” என்ற ஒட்டக்கூத்தரின் பாடலில் துவங்கி எட்டாம் நூற்றாண்டில் திருச்சி உறையூரில் கட்டப்பட்ட முகமது ஹஜ்ரின் தொழுகை கூடத்தில் அரபுமொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, பாண்டியர்களின் கடைசி வாரிசுகள் ஆட்சிக்கட்டிலில் ஏற சண்டையிட்டனர். அப்போது தஞ்சை சோழநாடு பாண்டியர் வசமிருந்தது (இந்த காலகட்டத்தோடு பாண்டியர் சோழர் ஆட்சி முடிவுக்கு வந்தது) இவர்களது வாரிசு சண்டையை தஞ்சை திருக்களர் கோயில் கல்வெட்டில் பாண்டியர் படையில் அதிகம் இருந்தவர்கள்…