பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாப் அல்லாத மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பெரும்பான்மை வாதத்தின் எழுச்சியாகவே பார்க்க முடிகிறது. இந்துத்துவம் அதன் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது கிடைத்துள்ள வெற்றி மீண்டும் அவர்களை இன்னும் வீரியமாக செயல்பட வைக்கும். காந்தி குடும்பம் காங்கிரஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரலை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்?! பிஜேபி வெற்றி பெறக் கூடாது என்று நினைப்பவர்கள் அதன் வெற்றியை பல்வேறு தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள். அதில் ஒன்றுதான் காந்தி குடும்பம் காங்கிரஸில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரலும். பிஜேபியின் வெற்றிக்கு இது போன்ற பல்வேறு தவறான காரணங்கள் கூறப்படுகின்றன. முஸ்லிம்கள் ஓட்டை பிரித்தனர், ஆம் ஆத்மி கட்சி ஓட்டை பிரித்தனர் போன்ற பல்வேறு தவறான…
Author: Admin
ஏணிப்படிகள் – புத்தக அறிமுகம் நூல் ஆசிரியர் அவர்களை “இதயம் பேசுகிறது” ஆசிரியர் மணியன் அவர்கள் இவரது வாழ்க்கை வரலாறை இவர் சொல்ல சொல்ல, ஏன் இதை தாங்கள் சுயசரிதையாக எழுதக்கூடாது என வினவ அதையே ஒரு கருத்தாக கொண்டு, ஆசிரியர் தனது வேலையால் ஏற்பட்ட வேலை நுட்பம், கணக்குகள், நடைமுறை வேலை, அதன் செயல்பாடு, அதை நாம் எப்படி மேலாண்மை செய்தது, பலநிலை, பல சூழ்நிலை, பதவி உயர்வு, மதிப்பு, பணி மாறுதல், அடிக்கடி நிகழும் வெளியூர் மாற்றம் என பலவற்றை சிக்கலில்லாமல் ஏணிப்படியில் முதற்படியில் இருந்து கடைசி படி வரை தனது உத்தியோக வாழ்வு அதுவும் ஒரு பொறியாளர் எவ்வளவு சுவாரசியமாக எழுதுகிறார் என்பது வியப்பு. நமக்கு கீழே உள்ளவர்கள் சொல்வதையும் கேட்டு, மேலதிகாரிகள் சொல்வதையும் கேட்டு நமது ரசனைக்கு ஏற்ப எப்படி செயல் படுத்தினேன் என்பதை தெளிவுபட விளக்குகிறார். தனது படிப்பைத் தொடர பம்பாய் போக இருப்பதை…
இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு இந்திய கல்வி நிலையை உயர்த்தும் நோக்கோடு உருவாக்கியதுதான் மத்திய பல்கலைக்கழகங்கள். இவைகளில் பெரும்பாலும் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். அது மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வு மிக்க தலைமுறையும் அங்கே இருந்து வெளி வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போதுவரை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மேல்நிலைப்பள்ளி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் போதுமானதாகும். ஆனால் இப்போது ஒன்றிய அரசு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இனி சேர வேண்டுமெனில் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இயலும். ஒன்றிய பாசிச பாஜக அரசு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு – குறிப்பாக தலித் முஸ்லிம் சமூகங்களுக்கு – கல்வியை தடுக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சங்பரிவாரின் உருவாக்க நோக்கமும் கூட. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும்…
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ள குரூப்-2 தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைப்பெற இருக்கின்றது. தேர்வுக்கு விண்ணப்பித்த போது முஸ்லிம் போட்டியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் தமது மதத்தை முஸ்லிம் என்று தேர்வு செய்தவுடன் பிறப்பால் முஸ்லிமா அல்லது முஸ்லிமாக மதமாறியவரா என கேட்க்கப்பட்டது தான். பலரும் இந்த கேள்வி எதற்காக என குழம்பினர். வேறு சிலரோ முஸ்லிம்களுக்கு எதிராக ஏதோ ஒரு சதி வேலை TNPSC-ல் நடக்க வாய்ப்புள்ளதாக சமூகவளைத்தளங்களில் பரப்பினர். தேவையற்ற குழப்பங்களுக்கு வித்திட்ட இக்கேள்வி தொடர்பாக அரசு அதிகாரிகளோ வேறு விதமான விளக்கங்களை அளிக்கின்றனர். இந்திய அரசியலமைப்பின் படி ஒரு சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை சாதியின் அடிப்படையிலேயே தரமுடியும்(பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு இதுவரை ஏற்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்). பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடும் (BC-Muslim) கூட முஸ்லிம் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் ‘ஏழு சாதியினருக்கே’ வழங்கப்பட்டுள்ளது. அவர்களை தவிர்த்த பிற சாதியினருக்கு…
தேசிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்ட ஹிஜாப் வழக்கில் கடந்த செவ்வாய் கிழமை(15/03/2022) அன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கு ஒரு மாத காலத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் அவசியமாக பின்பற்றப்பட வேண்டிய கடமை அல்ல என்று முடிவெடுத்துள்ள நீதிமன்றம். அவசிய கடமையாக இல்லாதவற்றை அரசு கட்டுப்படுத்துவது செல்லும் என்ற அடிப்படையில் கர்நாடக மாநில அரசு கல்வி வளாகங்களில் ஹிஜாபை தடை செய்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்துள்ளது. பொதுவாக நீதிமன்றங்கள், இதுபோன்ற விவகாகரங்களில் தனிநபர் உரிமையையும், மத சுதந்திரத்தையுமே பாதுகாக்கும். ஆனால் ஹிஜாப் விவகாரத்தில் பெரும்பான்மைவாதத்தை கட்டமைத்து முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து ஒடுக்குமுறைகளை மத்தியிலும் மாநிலத்திலும் ஏவிவரும் பாஜக அரசு முஸ்லிம் பெண்களின் மதச்சுதந்திரத்தில் தலையிடுவதை அனுமதித்தது மட்டுமல்லாமல் கல்விக்கூடங்களில் ஹிஜாப்…
தாக்கவரும் ஒரு ஆண் கும்பலுக்கு முன்னால் தைரியத்தோடு எதிர்நின்று கேள்வி கேட்கும் பெண்களை வீரத்தின் அடையாளமாக பொது சமூகமும் ஊடகங்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அவ்வாறு தீரத்தோடும் தைரியத்தோடும் சங்பரிவார் கும்பலை எதிர்கொண்ட மங்களூருவில் தயானந்த பை சதீஷ் பை அரசுக் கல்லூரி இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி ஹிபா ஷேக்கிற்கு எதிராக வழக்குகளும் கொலை – பாலியல் பயமுறுத்தல்களும்தான் வந்து கொண்டிருக்கிறது. ஹிபா வெளிப்படுத்திய தைரியத்தின் காட்சிகளை நாடும் மக்களும் கண்டார்கள். இந்துத்துவ இனவாத அமைப்புகள் அரசின் ஆதரவோடு கர்நாடகாவில் நடத்திவரும் ஹிஜாப் விரோத நடவடிக்கைகளின் பாகமாக சங்பரிவார் மாணவர் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் கல்லூரி வாசலில் நின்று கொண்டு இந்த மாணவியை தடுத்து நிறுத்தினார்கள். ஹிஜாபை கழட்டாமல் கல்லூரிகள் அனுமதிக்க மாட்டோம் என்றும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கொக்கரித்த அவர்களுக்கு முன்னால் கும்பிட்டு பிச்சை கேட்காமல், கதறி அழாமல் அவள் தைரியத்தோடு அவர்களை எதிர்கொண்டாள். “இது என்ன உனது…
உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு வட இந்திய பத்திரிக்கையாளரின் நேர்மையான பார்வை. தேர்தல் முடிவுகள் பற்றிய மிகத் தெளிவான குறிப்பு. 1. உத்தர பிரதேசத்தின் முதன்மையான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி (SP) கடந்த ஐந்தாண்டுகளாக உறக்க நிலையில் இருந்தது. எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிக்காமல் இருந்தது. அதனால் இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு அச்சுறுத்தலான முடிவு என்று நான் நினைக்கவில்லை. இருந்த போதிலும் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் சுமார் 10% அதிகரித்துள்ளது. தேர்தல் மைதானத்தில் அதிருப்தி நிலவியது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சி அதை ஒருங்கிணைக்க தீவிரமாக முயற்சிக்கவில்லை. உரிய நடவடிக்கைகள் வாக்குகள் தானாக வராது. உ.பி.யில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உருப்படியான வலிமையான எதிர்க்கட்சிகள் இல்லை. ஆனால், இன்று குறைந்த பட்சம் ஒரு வலுவான எதிர்க்கட்சி உள்ளது. மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2. முசாபர்நகர், ஷாம்லி மற்றும் பாக்பத் ஆகிய மாவட்டங்கள் விவசாயிகள் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற…
ஒரு இந்திய மாணவன் உக்ரைனில் ரஷ்சியாவால் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இது அப்பட்டமான இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. போர் பதட்டம் அதிகரித்த பொழுதே மற்ற நாடுகளின் மாணவர்களுக்கு அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் எச்சரித்து, அவர்களுடைய பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்து தன்னுடைய நாட்டிற்கு அழைத்தபொழுது இந்தியா மட்டும் அமைதி காத்ததை அங்குள்ள மாணவர்கள் பலர் மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்ததை இந்த நாட்டு மக்கள் அனைவரும் கேட்டோம். மேலும் இந்திய தூதரகத்துக்கு பலமுறை அழைத்தும் எந்த பதிலும் இல்லாததையும் மாணவர்கள் கண்ணீரோடு பதிவு செய்தனர். ஆனால் முட்டாள் சங்கிகளோ நவீன் பிரைவேட் ஜெட்டிற்க்காக காத்துக்கொண்டிருந்தாரா? இல்லை பிரதமர் வந்து தனியே அவரை அழைக்க வேண்டுமா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வழக்கம்போல உளறிக்கொண்டு இருக்கின்றனர். உணவிற்காக வரிசையில் நின்ற ஒரு இந்திய மாணவனின் மரணத்தால் இந்தியாவே கவலையில் ஆழ்ந்திருக்கும்போது இவர்கள் அதற்கு காரணம் மோடி கிடையாது என்று முட்டு கொடுக்கும் பதிவுகளை எழுதி…
கர்நாடக கல்வி வளாகங்களில் ஹிஜாப் தடைசெய்யப்பட்டுள்ள விவகாரம் நாடு முழுக்க சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்துத்துவ பாஜக அரசால் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் இக்கலாச்சார ஒடுக்குமுறைக்கு எதிரான வழக்கு கர்நாடக உயர்நீதிமனத்தில் நாள்தோறும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் முன்னெடுப்பை பாஜக ஆளும் பிற மாநிலங்களும் பின்பற்ற விரும்புகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது மதுரை மேலூரில் உள்ள பாஜக தேர்தல் முகவர் ஒருவர் முஸ்லிம் பெண்களை ஹிஜாபை நீக்கிவிட்டு வாக்களிக்குமாறு கலகம் செய்திருப்பது தமிழகத்திலும் சங்பரிவாரங்கள் கர்நாடக முன்மாதிரியை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்க முயலுவதாக புரிந்துக் கொள்ளலாம். இவ்விவகாரத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அதிகார தரப்புகள் அனைத்து. பாஜகவை விட்டு விலகி நின்றிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். இப்பின்னணியில், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் அறிவித்துள்ள…
கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள தலைமுக்காடுப் பிரச்சினை வேறு வேறு விவாதங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரச்சனை திசை விரும்புவதை உணர்ந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைமை அதிலிருந்து பின்வாங்கும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் சமூகமும் போராடுவதற்கு தங்களுக்குக் கிடைத்து இருக்கக்கூடிய புதிய ஒரு வாய்ப்பை பயன்படுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இயக்கங்களுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு. அவ்வளவுதான். இதன் மறுபக்கம் முற்போக்கு கருத்தாளர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள், தாராளவாத சிந்தனையாளர்கள் என்று தங்களை முன்னிலைப்படுத்த கூடிய நபர்கள் முக்காடு என்பது முஸ்லிம் பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் அடையாளம். தனது ஆடை எது என்பதை தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதை ஆண்கள் தீர்மானிக்கக் கூடாது. ஆகவே ஹிஜாப் என்பது பெண்ணடிமைத்தனத்தை போதிக்கக்கூடிய ஒரு ஆடை அடையாளம். ஆகவே, அதை முஸ்லிம் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் தங்களின் பெயர்களில்…