Author: Admin

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷினி சட்டக்கல்லூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தியதற்காக டாக்டர் ஷா ராசிக் காலித் எனும் பேராசிரியர் ஒரு மாதம் கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார். கல்லூரிப் பூங்காவில் உள்ள புல்வெளியில் இவர் தொழுகும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.இப்பேராசிரியரின் தொழுகையை வீடியோ வைரலானதை அடுத்து இதை குறிவைத்து இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் இப்பேராசிரியர் கல்லூரியின் அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரின.இதுகுறித்து பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா (BJYM) அமைப்பின் மாணவத் தலைவர் தீபக் ஷர்மா ஆசாத் பத்திரிக்கை நிருபர்களிடம் “இப் பேராசிரியர் கல்லூரி வளாகத்தினுள் தொழுகை நடத்தி கல்லூரியின் அமைதியான சூழலை கெடுக்க முயன்றார்” என்று கூறியுள்ளார்.இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்ததுள்ளது.இதையடுத்து பேராசிரியர் ராசிக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து குவாரசி காவல்…

Read More

ஒரு பள்ளிவாசல், பழைய இதிகாச நாயகன் அங்கேதான் பிறந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் நடத்தப்பட்ட மக்களை முட்டாளாக்கும் அரசியலை சங்பரிவாரங்கள் முன்னெடுத்தன. அதில் வெற்றியும் அடைந்தனர். பள்ளிவாசலை இடித்து, நாடெங்கும் கலவரத்தை நடத்தி, பல ஆயிரம் அப்பாவிகளைக் கொன்று கட்சியை வளர்த்தி அதிகாரத்தையும் தனதாக்கிக்கின. பிறகு அநீதியான தீர்ப்பையும் வழங்கி இந்த நாட்டின் இறையாண்மையை கேலிக்குறியதாக்கினர். படிப்பதற்கு ஏதோ பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஒன்லைன் என்பதுபோல உங்களுக்கு தோற்றமளிக்கலாம். ஆனால் இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாறும், சங்கபரிவாரங்கள் இந்த நாட்டில் செய்த அரசியலும் இதுதான். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பிரதான எதிரியாக முன்னிருத்தி இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம். புரோகிதர்களாக தங்களிடம் இருந்த கட்டற்ற அதிகாரத்தையும், மனுநீதியையும் மீண்டும் கொண்டு வரலாம் என திட்டமிட்டு அதில் வெற்றிகளையும் அடைந்திருக்கிறார்கள் என்பது கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒன்று. அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வார்கள்…

Read More

மௌலானா அபுல் அஃலா மௌதூதி 1969 – இலண்டனுக்கு வருகை தந்தார். அப்போது முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு (FOSIS) அவருக்கு வரவேற்பு அளித்தது. அங்கு அவருடன் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது அவரிடம் மாணவர்கள் எழுப்பிய கேள்வியும் அதற்கு மௌலானா மெளதூதி அளித்த பதிலும். ஆயுதப் புரட்சி மூலம் இஸ்லாமிய அரசை நிறுவ முடியுமா? மௌலானா மௌதூதி ஒரு கணம் கூட யோசிக்காமல் கூறினார். “நம்மை ஊக்கப்படுத்த இது சரியான வழி என்று நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொள்கை எவ்வித பயனையும் அளிக்காது. அதுமட்டுமின்றி, அது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் வாய்ப்பும் உள்ளது. ஒருவேளை ஆயுதப் புரட்சியின் மூலம் நீங்கள் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்கினீர்கள் என்றே வைத்துக் கொண்டாலும், இஸ்லாமிய அடிப்படையில் அந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால், இஸ்லாம் எதிர்பார்க்கும் தார்மீக மாற்றத்திற்கு சமூகம் சரியாகத் தயாராக இருக்காது. மேலும் ஆயுதமேந்திய கிளர்ச்சி என்பது அதிகாரத்தைக்…

Read More