Author: Admin

கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம்வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள்கள் வெளியானதாக சில தினங்களுக்கு முன்புதான் மாபெரும் அதிர்ச்சியும் போராட்டங்களும் நடைபெற்றன. அந்த சுவடுகளே இன்னும் அழியாத நிலையில் இப்போது CBSE வினாத்தாள்கள் வெளியானது கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு சிரமப்பட்டு மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகிறார்கள்.? அதிலும் CBSE மாணவர்கள் ஒன்றரை வருடங்களாக பொதுத் தேர்வுக்கு தயாராக்கப்படும் நிலையில் தேர்வாணையத்தின் கையாலாகாத்தனத்தால் கேள்வித்தாள்கள் வெளியானதற்கு மாணவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா.? எழுதிய தேர்வுகளை மீண்டும் எழுதச் சொல்வது மாணவர்கள் மீதான அதிகார வன்கொடுமை என்றுதான் சொல்ல முடியும். வினாத்தாள்களையே பாதுகாக்க திராணியில்லை. இந்த இலட்சணத்தில் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டமாம், அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒரே பொதுத் தேர்வாம். வினாத்தாள் வெளியானதற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான…

Read More

அவள், இந்த உலகின் சரிபாதி நபர்களை குறிக்கும் அடையாளச் சொல். ஆனால் அவளாக உலகில் வாழ்வதில் உள்ள பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் அவள் அனுபவித்துதான் ஆக வேண்டும். ஒரு பக்கம் உடைகளால் உருவங்களை மறைத்து வீட்டின் அடுப்பங்கரையில் உட்கார வைத்து தன் அடக்குமுறையையும், தன் அதிகாரத்தையும் பறை சாற்றுகிறது ஆண் சமூகம் என்றால் மற்றொரு புறம் உடைகளை களைந்து வீதி உலா வர வைத்து தன் வணிகத்தையும், தன் மோகத்தையும் தனித்து கொள்கிறது அதே ஆண் சமூகம். ​ஆணாதிக்கம் நிறைந்த இச்சமூகம் பெண்ணடிமைத்தனத்தை எந்த வகையிலும் ஏவ தயாராகவே வரலாறு முழுக்க காணக்கிடைக்கிறது. அதிலும் பெண் விடுதலை என்ற நோக்கில் பல தலைவர்களும், சிந்தனைவாதிகளும் தன் கருத்துகளிற்கேற்ப சிலவற்றை தீர்வுகளாக முன் வைத்தனர். ஆனால் அவை செயலில் இல்லாத காணல் நீராகவும், இன்னும் சில காணலாகவே இருந்து விடட்டும் என்றும் தோன்றும். உதரணமாக ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு…

Read More

ஒரு வாரத்தில் இரண்டு காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா சமாதியில் கடந்த 4ம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்ராஜ் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். நேற்று இரவு சென்னை அயனாவரம் காவல்நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவர் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துவிட்டு காவல்நிலைய வாசலிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களாக மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் பணி நேரங்களிலேயே இப்படி தங்களைத் தாங்களே சுட்டுக் கொல்வதும், சிறு ப்ரச்னைகளுக்காகக் கூட சக பணியாளர்களை சுட்டுக் கொல்வதுமான துன்பியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசுகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணிச் சுமைகளை குறைப்பது, உளவியல் ரீதியாக மன அழுத்தங்களை நிவர்த்தி செய்வது, பல வருடங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் பணிச்சுமைகளை சமமான அளவில் பிரித்துக் கொடுப்பது…

Read More

போட்டித் தேர்வுகள் என்பது பெரும்பாலான மாணவ, இளைஞர்களின் இலட்சியமாகவும், கனவாகவும் இருக்கிறது. மத்திய அளவில் நடைபெறும் குடியியல் பணிகளுக்கான தேர்வுகள், இரயில்வே தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான SSC தேர்வுகள், மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் என்று பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக தங்கள் உழைப்பையும், பொருளாதாரத்தையும் செலவழித்து இரவு,பகல் பாராமல் தயாராகி தேர்வுகளை எதிர்கொள்கின்றனர் பல இலட்சக்கணக்கான மாணவ, இளைஞர்கள். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று தனது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து ஆக்ரமித்துள்ள இலஞ்ச இலாவண்யங்கள் இத்தகைய போட்டித் தேர்வுகளையும் விட்டு வைக்காமல் அந்த மாணவர்களின் எதிர்பார்ப்புகளை உடைத்து சுக்குநூறாக்குகின்றன. 2010ஆம் ஆண்டு இரயில்வே பணியிட தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தேர்வாணையத் தலைவரின் மகனே இலஞ்சம் பெற்றுக் கொண்டு வெளியிட்டது அப்போது அதிர்ச்சி அலைகளை பரவவிட்டது. பல்வேறு தரப்பினரும் ஆதாயம் அடைந்த இந்த ஊழலில் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்ச தொகைகள் கைமாறியதாக சிபிஐ அப்போது தெரிவித்தது.…

Read More

இலண்டனை விட அளவில் பெரியது, இலண்டனில் வசிப்பவர்களை விட பணக்காரர்கள் வசிக்கும் நகரம் என்று ஆங்கிலேய அதிகாரி க்ளைவ்வால் சான்றளிக்கப்பட்டதும், ஒருங்கிணைந்த வங்காளத்தின் (வங்கதேசம், பிகார், ஒடிசா) தலைநகராகவும் விளங்கியது முர்சிதாபாத் நகரம். மிகச் சிறந்த சான்றோர்கள் உருவாகிய நகரம். ஆனால் இப்போது அதெல்லாம் பழங்கதை. முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வரும் தற்போதைய முர்சிதாபாத்தின் நிலை மிகவும் மோசம். கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியதாக இப்போது முர்சிதாபாத் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளில் ஒரு பல்கலைக் கழகம் கூட இந்த நகரத்தில் அமைக்கப்படவில்லை. முர்சிதாபாத் மாவட்ட தலைமையகம் கூட மாவட்டத்திற்கு வெளியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. கல்யாணி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரே ஒரு கல்லூரியும் மாவட்டத்தை விட்டு 200 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி என்பது முர்சிதாபாத் மாவட்ட மாணவர்களுக்கு பகல் கனவாகவே இருந்து வந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு பல அரசியல் மாற்றங்களை வங்காளமும், முர்சிதாபாத்தும் பெற்ற பிறகும் எந்த ஆட்சியாளர்களும்,…

Read More

நேற்றைய தினம் வேலூரில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மக்கள் பிரச்னைகளை மாணவர்கள் பாராமுகமாக இருந்த காலம் மாறி கடந்த சில ஆண்டுகளாக ஈழப் பிரச்னை, மதுவிலக்கு, சல்லிக்கட்டு, நீட், விவசாயிகள் தற்கொலை, அனிதா படுகொலை என்று பல்வேறு பிரச்னைகளையும் எதிர்த்து மாணவ சமுதாயம் களம் இறங்க ஆரம்பித்துள்ளது. ஆரோக்கியமானதும், சமூக மாற்றத்திற்கான அச்சாணியாகவும் இருக்கக்கூடியது. நாளைய தேசத்தின் எதிர்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற வார்த்தைகள் உண்மையாக மாறிவரும் காலச் சூழல் இது என்றால் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த மாற்றத்தைப் பொறுக்க முடியாமல் ஆளும் அரசுகள் தங்கள் அதிகாரங்களைக் கொண்டும், காவல்துறையின் அடக்குமுறையை ஏவியும் மட்டுப்படுத்த முயல்கின்றனர். சல்லிக்கட்டிற்காக அமைதியாக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைந்துபோகச் செய்தனர். அனிதா படுகொலையைக் கண்டித்து பெருவாரியாக போராட்டங்கள் நடத்திய மாணவர்கள்…

Read More

“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற பன்மைத்துவ தத்துவத்தை தாங்கி நிற்கும் நம் இந்தியா தேசத்தில், பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணக்கத்துடன் பிரிக்க இயலாத் தன்மையில் கம்பீரத்தன்மையோடு விளங்குகிறது. இவ்வேளையில் கடந்த மூன்றாண்டில் அரங்கேறியுள்ள மக்களுக்கு எதிரான செயல்பாடுகளும், அக்கிரமங்களும் நம் இந்தியாவின் பன்மைத்துவ தூணை நிலைக்குலைய வைத்துள்ளது. மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த தேசம் இப்பொழுது வாழத் தகுதியற்ற தேசம் எனும் ‘பரிணாம வளர்ச்சியை’ அடைந்துள்ளது. இதன் முழு பெருமையும் ஆளும் பா.ஜா.க-வையே சேரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த அரசு இதன் ஒரு பகுதியாக ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க ஏழைகளை அழிக்கும் திட்டங்களைக் கையில் எடுத்திருக்கின்றது, தன் முட்டாள்த்தனமான அதிரடி அறிவிப்புகளால். இந்தியா எனும் தேசம் முதலில் பல தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பே என்பதில் மக்களிடம் தெளிவு ஏற்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு மாநிலங்களின் தேவைக்கேற்ப, மக்களின் வாழ்வாதார நலனுக்கேற்ப, புவியியல் நிலைமைக்கேற்ப செயல்படும்…

Read More

Sio ஹாதியாவுக்கு தன் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. 24 வயது நிரம்பிய அகிலா, தான் பிறந்த இந்துமதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை ஏற்கிறார். ஹாதியா ஆகிறார். பிறகு தன் மனம் விரும்பும் ஒரு முஸ்லிம் ஆணை கைப்பிடிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். கேரள உயர்நீதிமன்றமோ இந்தத் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கிறது. ஹாதியா முஸ்லிம் அடிப்படைவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார் என்கிறது. இது இந்துத்துவவாதிகளிடம் இருந்து உருவான இஸ்லாமிய வெறுப்பு (இஸ்லாமோஃபோபியா) எந்த அளவு நிறுவனமயப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. இன்று கேரளத்திலும் ஏனைய மாநிலங்களிலும் இந்து மதத்திலிருந்து வேறு மதத்தைத் தழுவுபவர்கள் பல்வேறு வகையில் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் . குறிப்பாக இந்துப் பெண்கள் வேறு மதத்தைத் தழுவும்போதும், வேறு மத ஆடவர்களைத் திருமணம் செய்ய எத்தனிக்கும்போதும் ஆணாதிக்க பார்ப்பனிய இந்து மதம் தனது எல்லா அஸ்திரங்களையும் பிரயோகித்து அவர்களை ஒடுக்குகிறது. இவ்வாறு இந்துப் பெண் தன் சிந்தனைச் சுதந்திரத்தையும், தனது…

Read More

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதாவின் தற்(கொலை) நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. MBBS படித்து மருத்துவர் ஆகவேண்டும் எனும் அனிதாவின் கனவை நீட் தேர்வு மூலம் பாஜக அரசு பறித்ததே அவரின் உயிரிழப்புக்குக் காரணம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் அவருக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை அனிதாவின் தனிப்பட்ட பிரச்னையாக நாம் குறுக்கிவிட முடியாது. இனிமேல் ஏழை எளிய, அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்டால் என்ன ஆகும் என்பதற்கு அனிதாவின் இறப்பு நம்முன் இரத்த சாட்சி. நீட் தேர்வில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 80 மட்டுமே. CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவதே இதற்குக் காரணம். அந்தப் பாடத்திட்டத்தில் படிப்பதற்கான வாய்ப்புள்ள மேல்தட்டு, உயர்சாதி, நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும். மாநில கல்வி வாரியத்தில் (State Board) படித்தவர்களால்…

Read More

வேட்டியை கீழாடையாக அணியும் வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழகத்தில் இருந்துவருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் முதலிய அண்டை மாநிலங்களிலும் இது புழக்கத்தில் இருக்கும் ஒன்றுதான். எனினும், தமிழ்நாட்டில் வேட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு. நாம் வேட்டி என்று சொல்வதை வேறு சில பெயரை கொண்டும் பிற மாநில மக்கள் குறிப்பிடுகிறார்கள். சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கிரிக்கட் கிளப் சங்கத்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வேட்டி உடுத்தி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் அவர்களும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் கிளப்பினுள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டியை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல தமிழ் நாட்டில் கூட உரிமை இல்லையா! என்று ஆக்ரோசப்பட்டு சமூக ஆர்வலர்கள் எதிர் குரல் எழுப்பினார்கள். வேட்டிக்கு அனுமதி மறுக்கும் கிளப்புகளையே மூடவேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.…

Read More