கட்டுரையாளர் : அ. முஹமது அஸாருதீன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் களத்தின் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது. தென் தமிழகத்தின் வாசலைக்கூட தொட முடியாது என்றிருந்த ஒரு கட்சி இன்று தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்துள்ளது. இயல்பாகவே கர்நாடக மக்கள் தன் மாநிலத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்களே தவிர்த்து மதத்தை பின்னுக்கு தள்ளமாட்டார்கள்.மேடை பிரச்சாரங்களில் வேண்டுமானால் வளர்ச்சியை முன்னிறுத்தி பா.ஜ.க பிரச்சாரம் செய்யலாம்.ஆனால்,அவர்கள் மக்களின் ஆழ் மனதில் கொள்கையை கட்டமைக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று சொல்ல வைத்ததற்கு முக்கிய காரணம் அவர்களது வரம்பை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கடுமையான சட்டங்கள். அதுதான் தன்னுடைய மதத்திணிப்பை அடுத்தவர்கள்மீது அவர்கள் திணிக்காமல் இருக்க காரணம்.மற்றபடி நாட்டுப்பற்றைத் தாண்டி மதப்பற்று அவர்களிடத்தில் எள்ளளவும் குறையவில்லை. பி.ஜே.பி.யின் எந்தவொரு தேர்தல் வியூகம்,பிரச்சாரங்களும் தனிமனிதனிடம் இந்து தேசம் என்கிற கொள்கையை சேர்க்காமல் இல்லை. உலகளவில் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள்,யூதர்களுக்கென்று தனி நாடு இருக்கும்போது ஓர்…
Author: Admin
எழுதியவர் : ராபியா குமாரன் வருகிற மே 16ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. சிறந்த வழிகாட்டுதலும், ஆலோசனையும் கிடைக்கப் பெறும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே என்ன படிக்கப் போகிறோம்? எந்தக் கல்லூரியில் படிக்கப் போகிறோம் என்பதை நன்கு திட்டமிட்டு தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி இருப்பர். அவர்களில் சிலர் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பினால் தான் படிக்க நினைக்கும் படிப்பு எந்தெந்தக் கல்லூரிகளில் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது என்பதை விசாரித்து, இரண்டு மூன்று கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வாங்கி தயார் நிலையில் வைத்திருப்பர். தேர்வு முடிவுகள் வெளியான அன்றே மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பப்படிவத்துடன் இணைந்து அனுப்பிவிடுவர். தரமான கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு கடும் போட்டி நிலவும். அக்கல்லூரிகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர விரும்புபவர்களுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்களை தகுதியாக நிர்ணயித்திருப்பர். அத்தோடு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை என்ற…
எழுதியவர் : பேராசிரியர்.மு.நாகநாதன் (முன்னாள் தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ) அதிகாரக் குவிப்பு, ஆணவம், குழப்பங்கள் ஒரு சேர இருப்பதுதான் இன்றைய பாஜக ஒன்றிய அரசு. 500,1000, உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஏழை எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வில் பட்ட துயர்களை எளிதாக மறந்து விட முடியுமா? எந்த நாட்டிலாவது வங்கிகளின் வாயில்களில், சாலைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று நூற்றுக் கணக்கில் மடிந்த கொடுமையைக் கண்டதுண்டா? சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது உரிய கலந்துரையாடல்களை, மாநில முதல்வர்களிடம், வணிகர்களிடம், வரி வல்லுநர்களிடம் நடத்தியதுண்டா? இதன் காரணமாக பொருளாதாரமே நொறுங்கி வருவதை அறிந்த பிறகும் பிரதமரும் ஒன்றிய அரசும் கவலைப்பட்டு நல்ல தீர்வுகளை எட்டாமல் இருப்பது எவ்வளவு கொடுமை? நீட் தேர்வு மாநிலங்களின் உரிமையைப் பறித்து, சமூகநீதியைப் புறந்தள்ளும் போக்கினை எந்தக் கூட்டாட்சி நாட்டிலாவது காணமுடியுமா? புது டெல்லியின் “உண்மையான, நிரந்தர அதிகாரிகள்”-…
தொலை தூர நகரங்களுக்கு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள் அவர்கள் நகரங்கள் தண்ணீரில் மூழ்கிப்போய்விடவில்லை அவர்களுக்கு உணவளிக்கத்தயார் என்று யாரோ வாக்குறுதி அளிக்கிறார்கள் அவர்கள் அகதி முகாம்களைத்தேடி நடந்துகொண்டிருக்கவில்லை அவர்கள் வெறுமனே ஒரு தேர்வை எழுத விரும்புகிறார்கள் அதற்காக நாம் ஏன் அகதிகளாக மாற்றப்படுகிறோம் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை இதற்கு முன்னும் அவர்கள் ஒரு தேர்வை எழுத நிர்பந்திக்கப்பட்டார்கள் மூச்சுத்திணறினார்கள் ஒரு இளம்பெண் தன் கழுத்தில் ஒரு தூக்குக் கயிறை மாட்டிக்கொண்டு அந்த மூச்சுத்திணறலிருந்து விடுபட்டாள் இதற்கு…
கல்வி நிலையங்கள் பிள்ளைகளின் இரண்டாம் வீடு எனவும் , ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்கள் எனவும் கூறப்படுவது நிதர்சனமாக உண்மையாகும். ஏனெனில் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருப்பதை விட கல்வி கற்கும் இடங்களில்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் நம்பி அனுப்பக்கூடிய இடமாக கல்வி நிலையங்கள் இருந்துவரும் நிலையில் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . மதுரை அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை, அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் நிர்மலா தேவி தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் தவறான ஆசைக்கு ஒத்துழைத்து போகும்படியும் , அவ்வாறு செய்தால் மதிப்பெண் ரீதியாகவும் , பண ரீதியாகவும் உதவுவதாக சொல்லி கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் பேசிய ஆடியோதான் பெண்கள் மீது கல்வி நிலையங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் குற்றங்கள் பற்றி இப்போது பேசப்பட காரணமாய் அமைந்துள்ளது . உயர்கல்வி நிலையங்களில் பயிலும்…
காஷ்மீர் மாநிலம் கத்துபவா பகுதியில் ஆஸிஃபா எனும் 8 வயது சிறுமி மிகவும் கொடுரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதனைக் குறித்து வகுப்பறையில் பேசினார் என்ற ஒற்றை காரணத்திற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது . ஏற்கனவே கல்வி தனியார் மயமாக்கப்பட்டு , சமூகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் , சமூக அக்கறை இல்லாதவர்களாக, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை உருவாக்க அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படித்து மதிப்பெண் பெற்று சம்பாதிப்பது மட்டும்தான் உனது வேலை என கற்பிக்கப்பட்டு வரும் இந்நிலையில் அரசியல் விழிப்புணர்வுடன் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களையும் , சட்டக் கல்லூரிகளையும் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்படுவது சமூகத்தின் மீது விழக்கூடிய மிகப்பெரிய அடியாகும். மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடக் கூடிய கொடுமையானது நிச்சயமாக ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக்கூடிய…
பிஞ்சுப் பிள்ளையே வராதே வெளியே நெஞ்சம் முழுதும் நஞ்சு நிறைத்த வஞ்சகக் கூட்டம் வலம் வருகிறது உன் உடல் புசிக்க காவியை பூசிக்கொண்டு!
இவர் தான் ரமேஷ் குமார் ஜல்லா.ஆசிஃபாவின் வழக்கை விசாரித்தவர். BJPயின் பல அமைச்சர்கள் இவரை நெருக்கடிக்குள் ஆளாக்கியபோதும் தன் உயிரையே பணயம் வைத்து உலகத்திற்கே அதிர்ச்சி அளிக்கும் அந்த குற்றப் பத்திரிக்கையை பதிவு செய்கிறார் நீதிமன்றத்தில்.ஒருவேளை ஜஸ்டிஸ் லோயாவையும் ஹேமந்த் கர்கரேவையும் மனதில் வைத்துக் கொண்டு இவருக்கு வேண்டுமானால் இந்த வழக்கில் இருந்து விலகியிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் இரவு பகலாக ஆஸிஃபாவின் நீதிக்காக அவர் உழைத்திருக்க வேண்டும் அதனாலேயே அவரால் இத்தகைய வழக்கை துணிச்சலாக செய்து முடிக்க முடிந்தது. இந்த வழக்கின் வேறொரு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவர் தீபிகா துஸொ என்ற பெண் வழக்கறிஞர் ஆவர். ஆளும் வர்க்கத்தின் மிரட்டல் மட்டுமல்லாமல் பல வழக்கறிஞர்களின் அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டு தைரியமாக வழக்கை கைவிடாமல் எடுத்துச் செல்கிறார். இத்தகைய அச்சுறத்தல்களுக்கு எதிராக ஜம்மு கஷ்மீர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். அவர் தற்காலிகமாக போலீஸ் பாதுகாவலில் உள்ளார். …
என்னதான் இருந்தாலும் அந்த 56 இஞ்சு விரிந்த நெஞ்சுக்குரியவர் நம் நாட்டின் பிரதமர் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களே, கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். உலகிலேயே நான்கு மணி நேரமே அவகாசம் கொடுத்து நாட்டின் 85 சதவீத பணத்தைச் செல்லாக்காசாக அறிவித்த சாதனையாளரும் அவர்தாம்…! ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை குறையும் என்று சொல்லி, முறையான திட்டத்துடன் அமல்படுத்தாமல், சொதப்பி, விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பாமரனின் வயிற்றின் அடித்த சிறப்புக்குரியவரும் அவர்தாம்..! புனேயின் முஹ்சின் சாதிக், தாத்ரியின் முஹம்மத் அக்லாக், இராஜஸ்தானின் பெஹ்லு கான், ஹரியானாவின் ஹாஃபிஸ் ஜுனைத்கான் என்று வரிசையாக தொடர்ந்து மாட்டு வெறியர்களால் முஸ்லிம்கள் அடித்தே கொல்லப்பட்ட போது கள்ள மௌனத்துடன் குதூகலித்த தேசபக்தரும் அவர்தாம்..! தலித்களும் விவசாயிகளும் நாள்தோறும் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளான போதும் ஒரு நாள் கூத்துக்கு பத்து இலட்சம் ரூபாய் செலவில் சொக்காய் போட்டு மகிழ்ந்த ‘பெரிய’ மனசுக்காரரும் அவர்தாம்..! இரண்டு கோடி இளைஞர்களுக்கு…
நிதிப் பற்றாக்குறை , உள்கட்டமைப்பு, நிரந்தர பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பது போன்ற அடிப்படை ப்ரச்னைகள் காரணமாக தேசம் முழுவதிலும் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பதுவே ஆய்வறிக்கைகள், பத்திரிக்கை செய்திகள் அனைத்தும் சொல்லும் பொதுவான செய்தியாக உள்ளது. இந்த சூழலில் 60 கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு(UGC) அறிவித்திருப்பது அரசின் தோல்வியையும், கல்வித்துறையில் அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது. தாராளமயமாக்கல், தன்னாட்சி இவற்றால் கல்வித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, மாறாக தனியார்மயமாக்கம் மூலம் கல்வி வணிகமாக்கப்படவே வழிவகுக்கும். கல்வித்துறையில் தனியார் பெருமுதலாளிகள், வியாபார முதலைகள் கால் பதிப்பதன் மூலமும், பாடத்திட்டங்கள் சந்தையின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதாலும் ஆற்றல்மிகுந்த தொழிலாளிகளே உருவாக்கப்படுவார்கள். நிதர்சனத்தில் அவர்கள் சட்டப்பூர்வமான குழந்தைத் தொழிலாளர்களே . கல்வி நிறுவனங்ளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்பது அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்களை வணிகமயமாக்க வழிகோலுவதுடன், உயர்கல்விக்கு நிதி வழங்குவதில் இருந்து…