Author: Admin

எழுதியவர் : உமர் ஃபாரூக், ஆராய்ச்சி மாணவர், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் இருக்கும் திருமலைகவுண்டர்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் திருமதி. பாப்பாள் அவர்கள் சத்துணவு சமைக்கும் பணியில் அமர்த்தபட்டுள்ளார். இதற்கு முன் இருந்த பள்ளி தொலைவில் இருந்ததால் சிரமத்துடன் சென்று வந்த அவர், தனது சொந்த ஊரில் அமைந்துள்ள இந்த பள்ளியில் தற்போது பணி காலியிடம் வந்தது தெரிந்ததும் இடமாற்றலுக்கு  விண்ணபித்து பணியில் சேர்ந்த்துள்ளார். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் (75 மாணவர்களில் 29 மாணவர்களின் பெற்றோர்கள் என்று செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இவர் அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் எங்கள் பிள்ளைகளுக்கு சமைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தி பள்ளியை விடுமுறை அளிக்க நிர்பந்தம் செய்து பின்னர் பள்ளியை திறக்க விடாமல் போராட்டம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி வளர்ச்சி நிர்வாகத்தினர் சட்டத்தை மதிக்காமல் அங்கு நடைபெற்ற சாதிய வன்முறையை…

Read More

எழுதியவர் – ஹூசைனம்மா முதலில், அந்தச் சிறுமியின் தாய்க்கும், தந்தைக்கும், சகோதரிக்கும் என் பாராட்டுகள் – எதற்கும் அஞ்சாமல், மானம்-மரியாதை-கௌரவம் என்ற வெற்றுப் பிதற்றல்களுக்குக் காது கொடுக்காமல் தைரியமாக இக்கொடூரத்தை வெளிக்கொணர்ந்ததற்காக. ஒரு நிர்பயாவுக்காக நாடு முழுவதுமே இணைந்து போராடியபோது, இம்மாதிரிச் சம்பவங்களுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்படுவிடும் என்று நம்பியவர்கள்தான் நாமெல்லாம். ஆனால், அதன் பின்புதான் அதிகரித்து விட்டது போல் தோன்றுகிறது – அதுவும் அதிகக் கொடூரமாக!! நடக்கும் நிகழ்வுகள் அப்படித்தான் நம்ப வைக்கின்றன. என்னதான் காரணம்? குற்றங்களைக் கண்டிக்கும் நாம், குற்றவாளிகளை உடனே தூக்கிலேற்றச் சொல்லிக் கண்டனம்  தெரிவிக்கும் நாம், இந்தக் குற்றம் அதிகரிப்பதன் காரணங்களை யோசித்துப் பார்த்தோமா? அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், மேம்போக்காக நோயை மட்டும் குணப்படுத்தினால் அது அப்போதைக்கானத் தற்காலிகத் தீர்வாக மட்டும் அமையுமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது. நோய் மீண்டும் மீண்டும் தாக்கத்தான் செய்யும் என்ற உண்மையை அறிந்தும் செயற்படுத்தாதவர்களாக நாம் இருக்கிறோம்…

Read More

மற்றுமொரு வன்கொடுமை சென்னையில் நிகழ்தப்பட்டிருக்கிறது மனித மிருங்கங்களால் அல்ல மிருகங்கள் கூட அவ்வாறு செய்யாது மனித வடிவில் உலாவறும் கொடூரர்களால். ஏழு மாதங்களாக அரங்கேறியிருக்கிறது அந்த அசிங்கமான கொடூரம்….. இது போன்ற கேவலங்கள் காலம் காலமாக நடந்து வந்தாலும் டெல்லியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு தான் இது அதிகமான அளவில் பேசு பொருளாக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்று வரை இது பேசு பொருளாக மட்டுமே இருந்து வருகிறது.அதுனால் தான் என்னவோ மூன்று வயது முதல் 80 வயது வரை இக்கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் நாள்தோறும் இந்திய தேசத்தின் மடியில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போது அதை செய்தியாக கடந்து சென்றுகொண்டிருக்கும் நாம் நம் அருகில் அமைதி பூங்காவின் தலை நகரில் நடக்கும் போது இங்கும் இவ்வாறெல்லாம் நடக்குமா என அதிர்ச்சி அடைகிறோம். ஆம் நடக்கிறது, நடந்து கொண்டே தான் இருக்கிறது.சம்பவம் நடக்கும் போது மட்டும் ஆங்காங்கே எழுப்பப்படும் கண்டன குரல்கள்…

Read More

Commercial படங்கள் முன்வைக்கும் ‘சமூக’ பார்வை பல நேரங்களில் அபத்தமானவை. தமிழர் பண்பாடு, சல்லிக்கட்டு, விவசாயம், போராட்டம் போன்றவைகளை மசாலாவாக பயன்படுத்துகின்றன இத்தகைய சினிமாக்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஐடம் டேன்சும் இந்த டயலாக்குகளும் ஒன்றுதான். வசூலுக்கு உதவுபவை. இயக்குனர்களும், வசனகர்த்தாக்களும் அவர்களின் படம் முன் வைக்கும் சிக்கல்களை விழிப்புடன் அனுகுவதில்லை என்பது குற்றச்சாட்டு. உதாரணத்திற்கு, கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு டயலாக். “சாதி ஒழியனும்னு ஒழியனும்னு கத்துறவனும் சாதிய வளர்த்துடுறான்” என நீள்கிறது. ஒடுக்கப்பட்டவனின் அணிதிரட்டலை குற்றமாக சித்தரிக்கும் வசனம். சில வருடங்களுக்கு முன் காமெடி படங்கள் வசூலைக் குவித்ததால், அந்த ஜானர் படங்கள் வரிசை கட்டி நின்றன. அதுபோலவே இன்றைய Trendஐ AR முருகதாஸ் முதல் விஜய் டிவி வரை பயன்படுத்தி நம்மை சோதிக்கிறார்கள். பிக்பாஸில் கமலின் ‘சமூகக்கருத்துக்களை’ சகிக்க முடியல. ‘Striking is a bad attitude’ என்கிறார், பண்பாடு-ஆடை-உறவு என அவர் கக்கும் வாந்திகள் ஏராளம். Commercial…

Read More

மற்ற நாட்டவர்கள் விளையாடுவதை கைதட்டி , இரவு முழுவதும் உறங்காமல் நம் தேசத்து மக்கள் ரசித்துவருகிற வேளையில்தான், நமக்கென ஒரு அங்கீகாரத்தை வாங்கி தந்துள்ளார் அஸ்ஸாம் மாநிலம் திங் கிராமத்தை சார்ந்த 18 வயதான ஹிமா தாஸ். பின்லாந்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹீமாதாஸ். அவர் பெற்ற தங்கமானது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செயதுள்ளது. இந்த சாதனையை ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் செய்துள்ளார். இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த, ஓட்டப் பந்தய வீராங்கனைகளான, ரோமானிய நாட்டின் ஆண்ட்ரியா நிகோலஸ் (52.07) மற்றும் அமெரிக்காவின் டைலர் மான்சனை (52.28) இறுதி நிமிடங்களில் வேகத்தை அதிகரித்த ஹிமா தாஸ் வெற்றி கொண்டுள்ளார். 2016ல் தன்னுடைய ஓட்டப்பந்தய வாழ்க்கையை ஆரம்பித்த ஹிமா தாஸ், முன்னாள் கால்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கடந்த வருடங்களில் இந்திய போட்டிகளில்…

Read More

நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த வருடம் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வின் தமிழ் வினாத்தாள்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியிருந்தது. 49 கேள்விகள் தவறானதாகவும், மொழிபெயர்ப்பு குறைபாடு கொண்டிருந்ததும் தமிழக மாணவர்களை குழப்பமடையச செய்தது. பல்வேறு அமைப்புகளும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் சிபிஎஸ்இக்கு எதிராக கண்டனங்களையும், அதிருப்தியினையும் வெளிப்படுத்தியிருந்த நிலையில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் அளிக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர் அகமது அமர்வு தவறான கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள், ஒட்டுமொத்தமாக 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பாராட்டி வரவேற்பதுடன், இதன் மூலம் தமிழக மாணவர்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை…

Read More

சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை என்கிற பெயரில் எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அறிவிப்பு வெளியானதிலிருந்தே மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினர். அதற்கு காரணம் மரங்களையும், விவசாய நிலங்களையும் அபகரித்து அரசு எட்டு வழிச்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் அளவிடும் பணிகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்து கொண்டே. இந்த திட்டம் நன்மை பயக்குமா இல்லையா என்கிற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் அரசின் திட்டங்களை எதிர்ப்பதாலேயே கைது என்கிற அடக்குமுறையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. மன்சூர் அலிகான் கைது,மாணவி வளர்மதி கைது,பியூஸ் மானுஸ் கைது, துண்டுப் பிரசுரம் வைத்திருந்தார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பை சார்ந்த 19 பேர் கைது, ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் என இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.…

Read More

இனியும் வேண்டாம் உயிர் துறப்பு – நாம் நமக்கானவர்கள் அல்ல,சமூகத்திற்கானவர்கள் திருச்சியில் நீட் அரக்கன் மற்றுமொரு படுகொலையை நிகழ்த்திவிட்டான்.நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற மாணவி தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 907 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் நீட் தகுதி தேர்வு அவரை அவ்வாறு செய்ய வைத்து விட்டது. சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த சுபஸ்ரீ நீட் தேர்வு காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பை அதிக கவனம் செலுத்தி படிக்காமல் நீட் தேர்விற்கான தயாரிப்பில் ஈடுபட்டு இருந்து வந்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பை கவனம் செலுத்தி படிக்காவிட்டாலும் அவர் 907 மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.ஆனால் நீட் தகுதி தேர்வை அவரால் வெல்ல முடியவில்லை. ஒரு வேளை நீட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பாக பயின்று நல்ல மதிப்பெண் பெற்று அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பார்.அவ்வாறு தமிழக மாணவர்கள்…

Read More

பாலஸ்தீனின் காசா எல்லையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பெண் செவிலி ரசான் அல் நஜ்ஜார் (21) இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார். காசாவின் கான் யூனுஸ் நகரில் துப்பாக்கியால் சுட்டப்பட்டு அவர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை கூறியுள்ளது. காசா எல்லையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இஸ்ரேல் இராணுவத்தினால் தாக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்யும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் வெள்ளை சீருடையுடன் அவர் இருந்ததாகவும், தன் கைகளை மேலே உயர்த்தியும் இஸ்ரேல் இராணுவம் அவரின் நெஞ்சில் சுட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பாலஸ்தீனர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 30ல் இருந்து இப்போதுவரை 121 சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 12,000 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனில் இருந்து இஸ்ரேலால் துரத்தப்பட்டு 70 ஆண்டுகளாக அகதிகளாய் அண்டை நாடுகளில் வாழும் பாலஸ்தீனர்கள், தங்களின் தாயகத்துக்குத் திரும்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த…

Read More

கட்டுரையாளர் : அ. முஹமது அஸாருதீன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட கர்நாடக தேர்தல் களத்தின் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது. தென் தமிழகத்தின் வாசலைக்கூட தொட முடியாது என்றிருந்த ஒரு கட்சி இன்று தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்துள்ளது. இயல்பாகவே கர்நாடக மக்கள் தன் மாநிலத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்களே தவிர்த்து மதத்தை பின்னுக்கு தள்ளமாட்டார்கள்.மேடை பிரச்சாரங்களில் வேண்டுமானால் வளர்ச்சியை முன்னிறுத்தி பா.ஜ.க பிரச்சாரம் செய்யலாம்.ஆனால்,அவர்கள் மக்களின் ஆழ் மனதில் கொள்கையை கட்டமைக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று சொல்ல வைத்ததற்கு முக்கிய காரணம் அவர்களது வரம்பை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கடுமையான சட்டங்கள். அதுதான் தன்னுடைய மதத்திணிப்பை அடுத்தவர்கள்மீது அவர்கள் திணிக்காமல் இருக்க காரணம்.மற்றபடி நாட்டுப்பற்றைத் தாண்டி மதப்பற்று அவர்களிடத்தில் எள்ளளவும் குறையவில்லை. பி.ஜே.பி.யின் எந்தவொரு தேர்தல் வியூகம்,பிரச்சாரங்களும் தனிமனிதனிடம் இந்து தேசம் என்கிற கொள்கையை சேர்க்காமல் இல்லை. உலகளவில் இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள்,யூதர்களுக்கென்று தனி நாடு இருக்கும்போது ஓர்…

Read More