Author: Admin

எழுதியவர் : ஹூசைனம்மா, சமூக ஊடகவியலாளர் 1945-ல், பிரதமர் அட்லீ தலைமையில் புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க முன் வந்தது. அதற்கு முன்னர், இந்தியாவில் மத்திய அரசு எப்படி அமைய வேண்டும் என்று தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. சுதந்திர இந்தியாவின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் வரையறுத்திருந்த திட்டமே காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரால் – பட்டேல் தவிர மற்ற அனைத்துத் தரப்பாலும் – ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தத் திட்டம், பாதுகாப்பு, வெளியுறவு, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளை மட்டும் மத்திய ஃபெடரல் அரசின்கீழ் கொண்டு வந்து, மாநிலங்களுக்கு அதிக சுயாட்சியைப் பெற்றுத் தரும் வகையில் அமைந்திருந்ததுதான் படேலின் எதிர்ப்புக்குக் காரணம். எனினும், தூதுக் குழுவின் முழு ஒப்புதலையும் பெற்று, அத்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசும், முஸ்லிம் லீகும்…

Read More

எழுதியவர் : ஞானபாரதி சின்னசாமி, சமூக ஊடகவியலாளர் திப்புசுல்தானிடம் பறக்கும் குதிரைகள் இருப்பதாக ஆங்கிலேயர்கள் நம்பினார்கள். ஏனெனில் ஆம்பூரை தாக்கப் போவதாகக் கூறி விட்டு கேரளத்தில் உள்ளக் கொடுங்களூரை அதே தினத்தில் தாக்கும் ஆற்றல் பெற்றவர். குதிரைப்படை நடத்துவதில் ரஷ்ய நாட்டின் கசாக்கியர்களைப் போலவும் பிரான்ஸ் நாட்டின் சக்ரவர்த்தி நெப்போலியன் போனோபார்ட்டைப் போலவும் திறமை படைத்து இருந்தார். ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு தீவு. ஹைதர்அலி மைசூர் மகாராஜாவின் படையில் 20 குதிரைவீரர்களின் குழுவின் தலைவராக பணியாற்றியவர் என்பதால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மைசூர் மகாராஜாவின் அரண்மனையை விட உயரமாக அரண்மனையைக் கட்டி விடக் கூடாது என்பதில் ஹைதர்அலி கவனமாக இருந்தார்.அதனால் ஹைதர் அலியின் அரண்மனையான ரங்க்மஹால் மைசூர் அரண்மனையை விட சிறியதாக நிர்மாணிக்கப்பட்டது.((ஹைதர்அலி விரும்பி இருந்தால் மைசூர் அரண்மனையில் இருந்து மைசூர் மன்னர்களை வெளியே துரத்தி விட்டு அவரே மைசூர் அரண்மனையைத் தன் வாசஸ்தலமாக ஆக்கி இருக்கலாம்) போர்க்களத்தில் யுத்தம் செய்து கொண்டு இருந்த போது…

Read More

அணு ஆயுதங்களையோ அணுக் குண்டுகளையோ பயன்படுத்தி ஒரு சமூகத்தை ஒரேயடியாக அழிக்கலாம். இது தீவிரவாதம். ஆனால் இன்றைய நாட்களில் ஒரு தலைமுறையை அழித்தொழிக்க அணு ஆயுதமும் தேவையில்லை, அணுக் குண்டும் தேவையில்லை. மாறாக, கற்றுக்கொடுப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் மோசடி செய்தால் போதும். ஒரு தலைமுறையை மட்டுமல்ல, சமூகத்தையே அழித்தொழிக்கலாம். ஆம். உடலில் உயிர் இருக்கும். ஆனால் உயிரோட்டம் இருக்காது. இது தீவிரவாதத்திலும் பெரிய தீவிரவாதம். ஆனால், இதன் விளைவு சட்டெனப் புரிபடுவதில்லை. மோசடி செய்து மருத்துவர் ஆகும் ஒருவரிடம் வரும் நோயாளி மரணத்தைத் தழுவுவார். மோசடி செய்து பொறியாளர் ஆகும் ஒருவர் கட்டும் கட்டிடம் இடிந்து விழும். மோசடி செய்து பொருளாதார நிபுணர் ஆகும் ஒருவரால் பொருளாதார நெருக்கடியும் நஷ்டமும் ஏற்படும். மோசடி செய்து மதபோதகர் ஆகும் போலி அறிஞர் மூலம் மனிதம் மரித்துப்போகும். மோசடி செய்து நீதிபதி ஆகும் ஒருவர் மூலம் நீதி பீதியடையும். மோசடி செய்து ஆசிரியர் ஆகும் ஒருவர் மூலம் எதிர்கால சந்ததிகளிடம் அறியாமை இருள்…

Read More

1966இல் அறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் அழைத்து உரையாற்ற வந்தார்.காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சில மாணவர்கள் மேடையின் கீழே பட்டாசுகளை மறைத்து வைத்து அண்ணா மேடைக்கு வந்தபோது வெடிக்க வைத்தனர்.அன்றைய முதல்வராகயிருந்த மறைந்த பேராசிரியர்.எஸ்.பி. சண்முகநாதன் அதிர்ந்து போனார். அறிஞர் அண்ணா தனது உரையின் போது “என் மீது அன்பு செலுத்தும் மாணவர்கள் என்னை வரவேற்ற போது மாலை அணிவித்து வரவேற்றார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் வரவேற்பு இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பட்டாசுகளை வெடித்து, சிறப்பான வரவேற்பை அளித்துள்ளார்கள். எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.கல்லூரி முதல்வர் இதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று அண்ணா கூறிய போது அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல் தொடர்ந்தது. 1967இல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி அமைந்தபோது மாணவர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் மோதலாக தொடங்கி வன்முறையாக மாறியது.சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது போக்குவரத்து ஊழியர்கள் கடுமையான முறையில்…

Read More

டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் மூத்த பத்திரிக்கையாளர் அன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன்னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை. இன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி குரல் கொடுத்திருக்கின்றார் சோஃபியா லூயிஸ் என்கிற வீரத் தமிழச்சி. சோஃபியாவின் துணிவும் தீரமும் மலைக்க வைக்கின்றது. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று குரல் கொடுத்ததோடு அவர் ஒய்ந்துவிடவில்லை. விமான நிலையத்தில் பத்து பாஜககாரர்களைப் பார்த்த தெம்பில் தமிழிசை ருத்ர தாண்டவம் ஆடிய போதும், ‘அவளுடைய பேக் கிரவுண்டு என்ன’ என்று ஓங்காரமிட்ட போதும், ‘அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை, மன்னித்து விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சிய பெண் போலீசைப் பார்த்து, ‘அறிவெல்லாம் இருக்கு, அதனால்தான் ஷீ இஸ் ஷவுட்டிங்’ எனக் கொக்கரித்த போதும், ‘ஒரு நிமிடம்! ஒரு ஸ்டேட் லீடர் என்று கூடப் பாராமல் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று கத்தினால் சும்மா விடுவேனா, என்ன’…

Read More

கட்டுரையாளர் : விஜயபாஸ்கர் விஜய், சமூக ஊடகவியலாளர் மூன்று மாதம் முன்பு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் போது டிரைவரிடம் பேசிக் கொண்டு வந்தேன். அந்த டிரைவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது முப்பது. அவர் படித்த படிப்பு பத்தாம் வகுப்புதான். அவர் தம்பி என்ன படித்திருக்கிறார். அவரும் பத்தாம் வகுப்புதான். இன்னொரு தங்கை இருக்கிறார். அவரும் பத்தாம் வரைதான் படித்திருக்கிறாராம். ஆக 2017 – 30 = 1987. அவர் அப்பா அம்மாவுக்கு 1986 யில் திருமணம் முடிந்திருக்கும். நினைத்துப் பாருங்கள். 1986 யில் உலகம் எவ்வளவு முன்னேறின காலம். அந்த முன்னேறின சமயத்திலும் ஒரு தம்பதியினருக்கு கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்திருக்கிறது. அப்படி தெரிந்தாலும் அதை எப்படி போதிக்க என்று தெரியாமல் இருந்திருக்கிறது. அப்படி போதிக்க தெரிந்தாலும் அவர்கள் வீடு இருந்த சுற்றுச் சூழல், குழந்தைகள் மனம் அங்கிருந்து திசை திரும்பாமல் வளர்க்க தடையாய் இருந்திருக்கிலாம். சுற்றியுள்ள…

Read More

கட்டுரை உதவி – பூவுலகின் நண்பர்கள் கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை…

Read More

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் ஜூலை30 ஆம் தேதி NRCயின் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியானது. 1951 ஆம் ஆண்டு வெளியிடபட்ட பட்டியலை புதுப்பிக்க 2015ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதி மன்ற கண்காணிப்பில் உருவாக்கபட்ட பட்டியல் NRC. அங்கு வாழும் மக்களில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை கண்டறியும் நோக்கில் எடுக்கப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பு பணியே இதன் நோக்கம். 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் போராட்ட குழுவுடன் மத்திய, மாநில அரசுகளால் போடப்பட்ட அஸ்ஸாம் accord எனப்படும் ஒப்பந்தத்தின் அடிபடையில் 1971 ஆம் ஆண்டு மார்ச்24க்கு முன் வாழ்ந்தவர்களுக்கே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு பின் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற புரிந்துணர்வு ஏற்பட்டது. இதன் அடிபடையில் உச்ச நீதிமன்றத்தில் என்‌ஆர்‌சி எனப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும் என்று மனு அளித்து அங்கு வாழும் மக்களில் மேலே…

Read More

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் தேசிய தலைவர் நஹாஸ் மாலா அசாமில் தேசிய குடியுரிமைப் பதிவு(NRC) புதுப்பிப்பதில் அரங்கேறியுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் எச்.எல்.தத்துவிற்கு எழுதியுள்ள கடிதம். ஐயா, வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை தேசிய பதிவு (NRC) புதுப்பித்தல் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வரைவு குறித்து எழுதுகின்றேன். 40 இலட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் NRC யில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்படவும் இருக்கின்றனர். அசாமின் பெங்காலி பேசும் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டதாக கூறப்படும் பரந்தளவிலான இனவழிச் சுத்திகரிப்பு என்று ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் எழுப்பிய சந்தேகங்களும் கவலைகளையும் இது நிரூபிப்பதாக உள்ளது.கள யதார்த்தங்களும் புள்ளிவிபரங்களும் கூட அதையே வெளிப்படுத்துகின்றன. ப்ரத்யேகமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் ஏற்கனவே வங்காள மொழி பேசும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை அந்நியர்கள் என்று அறிவித்து ஆறுக்கும் மேற்பட்ட வெளியேற்றும்…

Read More

இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்பில் (PhD) அதிகளவு  சேருவோரின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.    அறிவியல்,  பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பின்னணியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உடனடி வேலை வாய்ப்புக்காக   மேற்படிப்பினை  தேர்ந்தெடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அகில இந்திய அளவிலான   2017 -18ம்  ஆண்டிற்கான உயர்கல்விக்கான ஆய்வு முடிவுகளை மத்திய  மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் phd படிப்பில் சேர்ந்துள்ள 1.62 இலட்சம் மாணவர்களில் 29,778 மாணவர்கள் (18.5%) தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி தமிழ்நாட்டு மாணவர்களே ஆராய்ச்சிப் படிப்பை முடித்து  முனைவர்  பட்டமும் அதிகளவில் பெறுகின்றனர். உதாரணமாக 2016 -17 ல், 24,171 மாணவர்கள் PhD  பட்டம் பெற்றுள்ளனர். அதில், 3973 மாணவர்கள் (16.32%) தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.  ஆய்வுப் படிப்பில் சேர்வதில் தமிழகத்தை அடுத்து உத்திரபிரதேசம் இரண்டாம் இடத்திலும்(15,408 மாணவர்கள்), புதுடில்லி, கர்நாடகா அடுத்த இடங்களிலும்…

Read More